கடைசி காலத்திற்கென்று தேவனால் அருளப்பட்ட வழியை ஏற்றுக் கொள்ளுதல் 63-01-15 1. [சகோ.கார்ல்-வில்லியம்ஸ், "சகோ.பிரன்ஹாம், நீங்கள் நலமா,” என்று கேட்கின்றார் -ஆசி] சகோ.கார்ல், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்-? நான் நலமாக இருக்கிறேன். உங்களுக்கு நன்றி, (சகோ.வில்லியம்ஸ் சபையாரைப் பார்த்து “தயவு செய்து நீங்கள் உட்காரலாம்” என்று கூறுகிறார். இன்னொரு நாற்காலியை பின் பக்கம் தள்ளுங்கள். நல்லது. அது என்னுடையதா-? [" ஆம்”] ஹும்-! இதோ இருக்கிறது. 2. நல்லது, இன்றிரவு கர்த்தருடைய வீட்டுக்கு திரும்ப வருவது நிச்சயமாக அருமையாக இருக்கிறது. முக்கியமாக இதற்கு வருவது, ஏனென்றால் சில காலங்களுக்கு முன், சகோ.ஷார்ட் கட்டின இந்த இடத்தை, கர்த்தருடைய வீடாகிய இதை பிரதிஷ்டை செய்யும் சிலாக்கியம் எனக்கு இருந்தது. இதை அவருடைய ஆராதனைக்காக கர்த்தரிடமாக நாங்கள் இதை பிரதிஷ்டை செய்தோம். எந்த நேரத்திலும் தேவனுடைய வீட்டில் இருப்பது அருமையான ஒன்றாகும். அப்படித் தானே-? [சபையார் "ஆமென்” என்கின்றனர்-ஆசி.) இருக்க மிக அருமையான இடம் அது தான். 3. இங்கே இந்த உறைபனி மண்டலத்தில் இருப்பது. அதிலே. குளிர்ந்த சீதோஷணத்-திலிருந்து சற்று அப்புறம் செல்லலாம் என்று இங்கே வந்தேன். ஆனால் நேராக இன்னொரு குளிர் சீதோஷணத்துக்குள்ளாக வந்து விட்டேன். கடந்த இரவு நான் உங்களிடமாக "நான் உங்களுக்கு இந்த தொல்லையை கொண்டு வரவில்லை என்று நான் நம்புகிறேன்,” என்றேன். உங்களுக்குத் தெரியும். கோடை காலமானது குளிர் காலத்தின் எஞ்சியதை இங்கே கொண்டு வருகிறது என்று கூறுகிறார்கள். ஆகவே குளிர் காலமானது அது எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று வந்து உள்ளது போலும், பாருங்கள் எப்படியாக அது இருந்தது. ஆனால் எந்த நேரத்திலும் இங்கிருப்பது அருமையானதாகும். 4. நான் சிறிய பையனாக இருந்த முதற்கொண்டு, ஃபீனிக்ஸ் நகரத்தின் பேரில் எனக்கு எப்போதும் ஒரு நல்லுணர்வு இருந்து வந்துள்ளது. நான் ஃபீனிக்ஸை நேசிக்கிறேன். வெள்ளை இன மக்கள் அல்லாத மக்களுக்கு முதல் தடவை நான் பிரசங்கித்த முதல் இடம் ஃபீனிக்ஸ் நகரமாகும். நான் பிரசங்கித்த மக்கள் இந்தியர்கள் ஆவர் (செவ்விந்தியர்கள் - தமிழாக்கியோன்) நான் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரதேசத்துக்கு (Reservation) சென்றேன். பிரசங்க மேடையில் நான் தேவனுக்கு ஒரு பொருத்தனையைச் செய்ததை நினைவு கூறும் மக்கள் இங்கே இருப்பார்கள் என்று நான் யூகிக்கிறேன்; அவர் தாமே குடிபோதைக்கு அடிமையாக இருந்த ஒருவனையும் மற்றும் காச நோயால் (TB) பீடிக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணையும் அவர் சுகமளிப்பாரானால் அந்த இந்தியர்களுக்கு ஊழியம் செய்ய நான் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த பிரதேசத்துக்கு செல்வேன் என்று வாக்கு பண்ணினேன். அவர்கள் அதை குறித்து எனக்கு நினைப்பூட்டினார்கள். அவர்கள் இருவரும் சுகமாக்கப்பட்டார்கள். ஆகவே நான் அங்கே அப்பாச்சி தனிப் பிரதேசத்துக்கு (Apache Reservation) சென்றேன், அங்கே கர்த்தர் நமக்கு ஒரு பெரிய வெற்றியை அளித்தார். 5. அங்கே புற்று நோயிலிருந்து சுகமாக்கப்பட்ட அந்த பெண்ணின் பெயர் எனக்கு நினைவு வரவில்லை. அது மிகவும் மகத்தான ஒரு நிகழ்வாக இருந்தது. அவள் அசெம்பிளீஸ் ஆப் காட் சபையில் மிஷனரியாக அங்கே இருந்தாள் என்று நினைக்கிறேன். நாங்கள் அவளுடன் சென்றோம். அவள் பெயர் மிட்ச்சேள். அது சரியே. அங்கே அந்த இரவு அங்கே செவ்விந்திய பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் இங்கே இருக்கின்றவர் யாராவது அப்போது இருந்தீர்களா-? நான் நினைத்தேன். ஆம். அது சரி தான். 6. நான் எதிர்ப்பை சந்திக்க புறப்படுகிறேனோ என்று நான் நினைத்தேன். நான் என்ன கூறவிழைகிறேன் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும்படிக்குச் செய்ய என்னால் முடியவில்லை. அந்த இரவை நான் மறக்கவே மாட்டேன். அங்கே ஒரு... நான் நீண்ட நேரம் பிரசங்கித்த பிறகு அவர்களிடம் கிறிஸ்துவைக் குறித்து கூறினேன். நான் அந்த மிஷன் ஹால் படிகளில் நின்று கொண்டிருந்தேன். அந்த இடம் முழுவதுமாக அவர்கள் நிரம்பியிருந்தனர். அந்த இடம் நிரம்பி வெளியிலும் இருந்தனர். ஆகவே நான் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அந்த இரவில் நடந்த ஒரு மகத்தான நிகழ்வு ஒன்று என்னவென்றால் ஒரு இந்திய சகோதரனை அவர்கள் ஒரு மரப்பலகையில் கொண்டு வந்திருந்தனர். காலையில் புறப்பட்டு நீண்ட நேரம் வந்திருந்தனர். அவர்கள் எல்லாரும் தண்ணீரால் நனைந்து ஈரமாக இருந்தனர். அவர்கள் ஆற்றின் குறுக்கே நடந்து வந்திருந்தனர். ஆற்றின் ஆழம் இல்லாத பகுதியில் நடந்து அவரை அங்கே கொண்டு வந்திருந்தனர். 7. நான் அந்த வாலிபனை நோக்கி, "உனக்கு நிமோனியா காயச்சல் வரும் என்ற பயம் உனக்கில்லையா-?” என்று கேட்டேன். அதற்கு அவன் "இயேசு கிறிஸ்து என்னைப் பார்த்துக் கொள்வார். நான் என் அப்பாவை இங்கே கொண்டு வந்தேன்” என்றான். நான் "அருமையானது. அவர் சுகமாக்கப்படுவார் என்று நீ விசுவாசிக்கிறாயா-?” என்று கேட்டேன். "ஆம்.” 8. அவரின் உடல் முடக்கு வாதத்தினால் நடுங்கிக் கொண்டிருந்தது. அந்த இரண்டு வாலிபப் பையன்களும் அவரை அந்த பலகையில் வைத்துக் கொண்டு வந்து இருந்தனர். நான் அந்த வயதான மனிதனுக்காக ஜெபித்தேன். 9. சிறிது நேரம் கழித்து யாரோ ஒருவர் கூச்சலிடுவதைக் கேட்டேன். கீழே நோக்கிப் பார்த்தேன். அந்த வயதான மனிதன் தான் கொண்டு வரப்பட்ட மரப்பலகையை தன் முதுகில் வைத்துக் கொண்டு எல்லாரையும் பார்த்து கையசைத்து நடந்து கொண்டு இருந்தார். அதைச் செய்வதற்காக தேவைப்படுகிறது என்னவென்றால் எளிமையான விசுவாசம் மாத்திரமே. 10. அந்த இரவில் நடந்ததை நான் நினைவுக் கூருகிறேன். ஒரு அருமையான வயதான இந்தியப் பெண்மணி இருந்தாள், பின்னின நீண்ட கூந்தல் கீழ் வரைக்கும் தொங்கினவாறு அவளுக்கு இருந்தது. அவள் ஊன்றி நடக்க கக்கதண்டத்தை பயன்படுத்திக் கொண்டு நின்றிருந்தாள். அந்த இந்தியர்கள் அவர்களாகவே அதைத் தயாரித்திருந்தனர். இரண்டு விளக்குமாறு, துடைப்பம் கட்டைகளை எடுத்து அதன் மேல் ஒரு சிறு மரத்துண்டை வைத்து இரண்டு, இரண்டு சேர்த்து நான்கு கட்டைகள் அதை இரண்டு கட்டைகளாக சேர்த்து கந்தைத் துணிகளால் அதைச் சுற்றியிருந்தனர். ஆகவே அடுத்ததாக வரிசையை வரவிருந்த... அவள் வரிசையில் நின்றிருந்தாள். கட்டடத்தின் உள்ளில் இருந்து வந்து கொண்டிருந்தாள். ஆனால் அங்கே ஒரு சிறிய வாலிப இந்தியப் பையன் இருந்தான். அவன் மிக பலசாலியாக காணப்பட்ட சிறிய மனிதனாக இருந்தான். அவன் வரிசையில் நுழைவதற்காக மற்றவர் எல்லாரையும் அடித்துத் தள்ளிக் கொண்டிருந்தான். அவள் வரிசையில் இருந்த போது 2 அல்லது 3 சுகமளித்தலை தனக்கு முன் நடக்கக் கண்டாள். 11. அப்போது நான் நினைத்தேன். அவள் என்னை நோக்கிப் பார்த்த போது, அவளுடைய பெரிய ஆழமான சுருக்கங்கள் காணப்பட்டன. அவள் கன்னங்களில் இருந்த அந்த பெரிய சுருக்கங்களாலான குழிகளில் கண்ணீர் ஓடின. "யாரோ ஒருவரின் தாய்” என்று நான் நினைத்தேன். நான் ஒரு வார்த்தை கூட அவளிடம் சொல்லவில்லை, அவளுக்காக ஜெபம் கூட நான் ஏறெடுக்கவில்லை. எதையுமே நான் செய்யவில்லை. அவள் என்னை நோக்கிப் பார்க்க மாத்திரம் செய்தாள். அவள் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டே அவளுடைய கக்க தண்டங்களை, ஊன்று கட்டைகளை, என்னிடம் அப்படியே கொடுத்து விட்டு, நடந்து சென்றாள். பாருங்கள் அப்படியே, எளிமையாக அது நடந்தது. 12. என் மகன் இங்கே இன்னும் சத்தமாக பேச சைகை காட்டுகிறான். இப்பொழுது உங்களுக்கு நன்றாக கேட்கின்றதா-? சரி, ஒரு பன்றியானது ஒரு காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு கதையை நான் வாசித்தேன். (யாரோ ஒருவர் சகோ. பிரன்ஹாமின் ஒலிபெருக்கியை சரி செய்கிறார் -ஆசி.) இப்பொழுது, இது சரியாக இருக்கிறது. அந்த விதமாகத்தான் வாழ்க்கையானது செல்கின்றது. எப்படியாயினும் அதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன, அப்படித்தானே-? 13. இப்பொழுது மக்கள் நின்று கொண்டிருக்கின்றனர். ஆகவே நாம் இன்னும் கூடுதலான நேரத்தை எடுத்துக் கொள்ள விருப்பம் எங்களுக்கு இல்லை, மக்களுக்கு உதவும் படியாக, கூடுதல் நேரம் எடுக்க விரும்பவில்லை. நீங்கள் மிகவும் அருமையான மக்களாக இருக்கின்றீர்கள். நான் உங்களிடமாக நீண்ட நேரம் பேச விருப்பம் கொள்கின்ற அளவிற்கு நீங்கள் அருமையான மக்களாக இருக்கின்றீர்கள். 14. ஆகவே நாங்கள் இப்பொழுது முழு சுவிசேஷ வாணிப ஐக்கியத்தினருடன் கூட பிரயாணிக்கின்றோம். ஆரம்ப கூட்டமானது ரமாடாவில் நடக்கின்றது. கடைசி பாகத்தில்... எந்த தேதி என்று பார்க்கலாம்-? [யாரோ ஒருவர் "24 என்று கூறுகிறார்”-ஆசி] 24-தேதி, 24 முதல் 28 தேதி வரைக்குமாக ரமாடா இண் என்ற இடத்தில் நடக்கின்றது. அங்கே சில அருமையான பேச்சாளர்கள் வரவிருக்கின்றனர். சகோ. ஓரல் ராபர்ட்ஸ் மற்றும் இன்னும் அநேகம் பேர் வரவுள்ளனர். ஆகவே நான்... நாம் எப்போதுமே நல்ல ஒரு தருணத்தை கொண்டிருக்கின்றோம். அது, மக்கள் அந்த விதமாக ஒன்று கூடும் போது, ஆகவே ரமாடா இண்ணில் நாம் ஒரு மகத்தான தருணத்தை கொண்டிருப்போம். 15. சகோ.ஓரல் மற்றும் நானும் அங்கே ஒரு சுகமளிக்கும் ஆராதனையை நடந்தும் படியாக இருக்கலாம். எப்படி என்று இப்பொழுது கூற இயலவில்லை. அது மிகவும் அருமையாக இருக்கும், ஆமாம். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு கூட்டத்தை இது வரை நடத்தவில்லை. அப்படிப்பட்டதான ஒன்றை நடத்துவதைக் குறித்து அவர் என்ன நினைப்பார் என்று எனக்குக் தெரியவில்லை, நானும் அவரும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டம், நான் அதற்கு விருப்பமாக இருக்கிறேன். ஆனால் நான் இருப்பதை அவர் ஏற்றுக் கொண்டால், நாங்கள் முயற்சி செய்வோம். பிறகு வியாதிப்பட்ட மக்களுக்காக ஜெபிப்போம். 16. நீங்கள் கவனித்த் இருப்பீர்களானால், நாங்கள் சுகமளித்தல் ஆராதனைகளை நடத்தவில்லை. நாங்கள் ஜெப அட்டைகளையோ அல்லது ஒன்றையுமே கொடுக்க வில்லை. ஏனென்றால், அது சிறிய சபைகளில் இட நெரிச்சலை உண்டாக்கும் என்று உங்களுக்கு தெரியும். மேலும் மக்கள், மக்களை உள்ளே கொண்டு வந்து வெளியே கொண்டு செல்வது என்பது முடியாத காரியம். அப்படி நீங்கள் செய்வீர்களானால் அது மக்கள் எல்லாரையும் நெருக்கமாக கூட்டி சேர்த்துவிடும். அப்படி சிறிய இடத்தில் நெருக்கமாக மக்கள் கூடுவது என்பதை தீயணைப்பு துறை ஏற்றுக் கொள்ளாது. ஆகவே கூட்டங்களில் இதுவரை நாங்கள் சுகமளிக்கும் கூட்டங்களை நடத்தாமல் விட்டு விட்டோம். எளிமையான சிறிய சுவிசேஷ செய்தியை கொண்டு வரமாத்திரமே நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். ஆகவே உங்களின் பங்கேற்பும், ஒத்துழைப்பும் எனக்குத் தேவை. உங்களுடைய ஜெபமும் எனக்குத் தேவை அது தான் இங்கே இருக்கும்படிக்கு என்னை ஊக்குவிக்கிறது. அந்த சிறிய செய்திகள் உங்களை தொடர்ந்து முன்னே செல்ல, கிறிஸ்துவுக்காக ஜீவிக்க,, உங்களை ஊக்குவிக்கிறது என்று நான் நம்புகிறேன். (எபேசியர் 2:5-6] 17. நான் கவனித்தது என்னவென்றால், அநேக சமயங்களில் மக்கள் ஒரு சபையில் இருந்து மற்றொரு சபைக்கு வருகின்றனர். அப்பொழுது நாம் எல்லோரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிறோம். நான் அப்படியே... ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக நண்பர்களாகிறோம். அது எனக்குப் பிடிக்கும். நாம் இங்கே எல்லாரும் உன்னதங்களிலே அமர்ந்திருக்கிறோம். ஏனென்றால் அந்த விதமான ஒரு இடத்திற்கு தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம். அங்கே நாம் எல்லாரும் ஒன்றாக பரலோகத்தில் உன்னதமான இடத்திலே இருக்கப் போகிறோம். 18. முன்றொரு நாள் வந்த கடிதத்தில் சிறிது விமர்சனத்துக்குள்ளானேன். நீங்கள் எப்படி உணர்கிறீர்களோ அதற்கேற்றவாறு சிறிது அனுசரித்துப் போகிறோம். அப்படி இருக்கையில் ஒரு விமர்சனமும் வராது. எந்த ஊழியக்காரனும் அதை அறிவார். நீங்கள் ஏதாவது ஒன்றைக் கூறி உங்களை ஜனக்கூட்டத்துக்கு ஏதுவாக நடந்து கொண்டு, அதே நேரத்தில் ஜனக்கூட்டமும் உங்களிடம் அனுசருணையாக நடக்கும் படிக்குச் செய்வீர்கள்... ஒரு காரியம் இருந்தது... 19. ஒரு வியாபாரி சங்கம் தங்கள் பத்திரிக்கையில் வியாபார மக்களின் சத்தம் என்னும் பத்திரிகையில் அந்த கட்டுரையை பிரசுரித்தனர். ஒரு சிறிய... நாம் அதை ஒரு தரிசனம் என்றே அழைக்கப் போகிறாம். வழக்கமாக எனக்கு வருகின்ற தரிசனங்களைக் காட்டிலும் இது சற்று வித்தியாசமானதாக இருந்தது. நான்... நான் இருந்த இடத்திலிருந்து மேலே எடுக்கப்பட்டேன். என்னைப் பொறுத்தவரையில் அந்த கட்டடத்தின் கூரைக்கு சற்று தொலைவில் நான் இருந்தது போல எனக்கு தெரிந்தது. அங்கே இன்னொரு இடத்தில் நான் இருந்தேன், மரித்து கடந்து சென்றிருந்தவர்கள் எல்லாரையும் நான் அங்கே கண்டேன். ஆம் உங்களில் அநேகர் அந்த கட்டுரையை வாசித்திருப்பீர்கள். அங்கே அதிலே, அவர்கள் யார் என்று அவர் கூறின பிறகு... அவர்கள் யார் என்று கூறினார், அவர்கள் எல்லாரும் மறுபடியுமாக இளம் வயதினராக இருந்தனர். அவர் மிகவும் தத்ரூபமாக... 20. நான் மரிப்பதற்கு பயந்தேன். நான் இழக்கப்பட்டு விடுவேன் என்று பயப்படவில்லை. ஆனால் ஒரு ஆவியாக இருப்பதற்கு நான் விரும்பவே இல்லை. நான்... நான் ஒரு மானிடனாக, மனிதனாக இருக்கவே விரும்பினேன். ஏனென்றால் நான் எப்போதுமே ஒரு மனிதனாக இருந்தே காரியங்களை புரிந்து கொண்டேன், மக்களின் கரங்களைக் குலுக்கினேன். நான், "ஓ, நான் அங்கே சென்று சகோ.ரோஸ் அவர்களை சந்திப்பேன். அவரும் ஒரு சிறிய வெள்ளை மேகமாக அல்லது அதைப் போன்ற ஒன்றாக இருப்பாரோ-? வேறு ஏதோ ஒரு புரிந்து கொள்ளுதலைக் கொண்டு அது சகோ.ரோஸ் எனத்தெரிகிறது. ஆனால் என்னால் அவர் கரங்களைக் குலுக்க முடியாதே. என்னால் அவரிடம் பேச முடியாதே, அல்லது...” என்று நினைப்பது உண்டு. "ஓ அது மிகவும் பயங்கரமானதாக இருக்குமோ-?” என்று சிந்திப்பதுண்டு. மேலும் நான் "அதன் பிறகு நான் திரும்ப வரும் போது, எனக்கு ஒரு உயிர்த்தெழுதல் இருக்கும்” என்று நான் நினைத்தேன். 21. அதற்கு முன்னர் அந்த வேத வசனம் என் நினைவிற்கு [II-கொரி.5:1) வரவேயில்லை. "இந்த பூமிக்குரிய கூடாரமானது அழிந்து போனாலும், ஒன்று நமக்காக காத்திருக்கின்றது.” 22. ஆகவே அந்த காலை வேளையில், நான் எழுந்து உட்கார்ந்தேன். அப்பொழுது நான் “ஓ, உனக்கு 50 வயது ஆகிவிட்டது. நீ கர்த்தருக்காக ஏதாவதென்று செய்ய வேண்டும் என்றால் நீ சீக்கிரமாக அதைச் செய்வது நல்லது. இன்னும் சிறிது காலம் கழித்து மிகவும் வயது சென்றவனாக ஆகிவிடுவாய்” என்று நினைத்துக் கொண்டேன். 23. உடனே சடுதியாக நான் அந்த ஸ்தலத்திற்குள்ளாக எடுக்கப்பட்டேன், நான் அங்கே நின்று கொண்டு கீழே இருந்த என்னையே என்னால் காண முடிந்தது. அந்த விதமான ஒரு அனுபவத்தை நான் எப்பொழுதுமே கொண்டிருந்ததில்லை. அநேக சமயங்களில் நான் ஏதாவது ஓரிடத்தில் நின்று கொண்டிருக்கின்றதை காண்பிக்கின்ற தரிசனங்கள் எனக்கு வந்ததுண்டு. ஆனால்... ஓ, நீங்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், உங்களுக்கு ஏதோ மன நலம் பாதித்து விட்டது என்று நினைத்துக் கொள்வீர்கள். ஒரு சமயம் இங்கே இருப்பீர்கள், அங்கே உள்ள இடத்திலே உங்களை தரிசனத்தில் காண்பீர்கள். அதன் பிறகு நீங்கள் இந்த இடத்தை விட்டுச் செல்வீர்கள். பிறகு நீங்கள் அங்கே இருப்பதையே நீங்கள் தரிசனத்தில் பார்ப்பீர்கள். ஓஹ்.., அஹ். தரிசனமானது ஆதி முற்காலத்தில் நடந்ததையும், அநேக வருடங்களுக்கு பின் நடப்பதையும் இன்னும் பிறவற்றையும் காண்பிக்கும். அதை விவரிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். உங்களால் அது முடியாது. உங்களால் அதை விவரிக்க முடியாது. 24. தேவனை உங்களால் விவரித்துச் சொல்ல முடியாது. நீங்கள் அவரை விசுவாசிக்க வேண்டும். அவ்வளவு தான். பாருங்கள்-? உங்களால் அதை விவரிக்க முடியாது, அப்படிச் செய்வீர்களானால் அது விசுவாசம் என்பதாக இருக்காது. நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். (மத்தேயு.22:30] [மாற்கு 12:25] [லூக்கா 20:34-36] 25. அவர் என்னிடமாக கூறி முடித்த பின்பு, அந்த ஸ்தலத்திலே அந்த மக்கள் எல்லாரையும் கண்ட பின்பு அவர்கள் எல்லாருமே, அவர்கள் சரீரங்களைக் கொண்டு இருந்தனர். அவர்கள்... அங்கே பாவம் என்பது இருக்க முடியாது. அந்த ஆண்களும், பெண்களும்... அங்கே இருந்த பெண்கள் என்னை கட்டித் தழுவிக் கொண்டிருந்தனர். அவர்கள் பெண்களாக இருந்தனர். ஆனால் அங்கே பாவம் மறுபடியுமாக இருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால், நம்முடைய சரீர சுரப்பிகள் எல்லாமே அந்த ஸ்தலத்திலே மாற்றப்பட்டிருக்கும். நாம் தாமே... இப்பொழுது நாம் வித்தியாசப்பட்ட பாலினங்களாக இருக்கின்றோம், ஏனென்றால் அச்சுரப்பிகள் நாம் உலகத்தின் ஜனத்தொகையை பெருக்குவதற்கு அளிக்கப்பட்டிருக்கின்றது. நம்முடைய விவாகத்திற்காகவும் பிள்ளைகள் பெறுவதற்காகவும் இருக்கின்றன. ஆனால் அங்கே இனி மேலும் அதற்கான தேவையே இல்லை. அங்கே பிள்ளைகள் பிறக்காது. அந்த புதிய உலகிலே பாலின சுரப்பிகள் நமக்கு இருக்காது, பாருங்கள், இருக்கவே இருக்காது. ஆனால், இன்னுமாக, தோற்றத்தில் ஒரு பெண், பெண்ணைப் போலவே காட்சியளிப்பாள். ஆணும், ஒரு ஆணைப் போலவே காட்சியளிப்பான். ஆனால் இனி மேலும் அங்கே ஆணும் பெண்ணுமாக அவர்களுக்குள்ளே அந்த விதமாக இருக்காது. அவர்களுடைய சுரப்பிகள் அங்கே இருக்காது. சாத்தான் இனி மேலும் தன்னுடைய தந்திர உபாயங்களை அவர்கள் மேல் அங்கே கையாள முடியாது. அதற்கான ஒரு வழியும் கூட அவனுக்கு இருக்காது. ஆதலால், அங்கே நான் கவனித்தேன். 26. அந்த பெண்கள் ஓடி வந்து தங்கள் கரங்களை என்னை மேல் போட்டு என்னைத் தழுவி, "எங்கள் அருமையான சகோதரனே, நீங்கள் இங்கே இருப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார்கள். பாருங்கள், அது மிகவும் வியக்ககத் தக்கதாக இருந்தது. அவர்கள் எல்லாருமே, வாலிப்பருவத்தைக் கொண்டவர்களாக, வெள்ளை நிறத்தில் பட்டு போன்று இருந்த அங்கிகளை உடுத்தியிருந்தனர். ஓ, எவ்வளவு அழகாக அவர்கள் காணப்பட்டனர் தெரியுமா-! 27. பிறகு சகோதரர் அங்கே வந்தனர், அவர்கள்... நான் கண்டதிலேயே மிகவும் திடக்காத்திரமான ஆண்களாக இருந்தனர், அவர்கள் எல்லாரும் 20-வயது வாலிபர்- களைப் போல இருந்தனர். அவர்கள் கண்கள் பிரகாசித்தன. அவர்கள், ஓ, அவர்கள் சரீரங்கள் ஆண்களின் சரீரங்கள் போலவே இருந்தன. அவர்கள் என்னை தூக்கிக் கொண்டு கட்டித் தழுவிக் கொண்டு "எங்கள் விலையேறப் பெற்ற சகோதரனே” என்று கூறிக் கொண்டிருந்தனர். 28. இது எப்படி என்று நான் அதிசயித்தேன். நான் கீழே நோக்கிப் பார்த்த போது நான் கட்டிலில் படுத்துக் கிடந்ததையும் என்னால் காண முடிந்தது. அப்பொழுது நான் "ஓ, இது வினோதமாக இருக்கின்றதே” என்று எண்ணினேன். அப்பொழுது நான் கேட்டேன். 29. அப்பொழுது அங்கே ஒரு மிக அழகான ஒரு பெண்மணி என்னிடம் வந்தாள். தன் கரங்களால் என்னைத் தழுவி "ஓ, சகோ.பிரன்ஹாமே, நீங்கள் இங்கே இருப்பதற்காக நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம், ஒ எங்கள் விலையேறப் பெற்ற சகோதரனே,” என்று கூறினாள். 30. அவள் என்னை கட்டித் தழுவி திரும்பி செல்கையில், நான் அவளை நோக்கிப் பார்த்தேன். அப்பொழுது என்னிடமாக பேசிக் கொண்டிருந்த அந்த சத்தம் என்னிட-மாக "உன்னால் அவளை அடையாளம் கண்டு கொள்ள முடிகின்றதா-?” என்று கேட்டது. நான் "என்னால் - என்னால் அவள் யார் என்று அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லையே,” என்று கூறினேன். அதற்கு அந்த சத்தம், "நீ அவளை கிறிஸ்துவண்டை வழி நடத்தின போது 90-வயது கடந்த ஒரு பெண்ணாக அவள் இருந்தாள்” என்றது. 31. ஆனால் அங்கேயோ அவள் நான் பார்த்திலேயே மிகவும் அழகான பெண்ணாக இருந்தாள். ஒரு பெண் இருக்கும் விதத்திலே அவள் இருந்தாள். அப்போது நான் “என் விலையேறப் பெற்ற சகோதரனே,” என்று அவள் என்னை நோக்கிக் கூறினதில் வியப்பொன்றுமில்லை என்றேன். பாருங்கள்-? இனிமேல் அவளால் மாறவே முடியாது. நித்தியத்தில் அந்த விதமாகத் தான் அவள் இருப்பாள். "நான் இயேசுவைக் காண விரும்புகிறேன்” என்று கூறினேன். 32. அதற்கு அந்த சத்தம், "அவர் இதற்கும் மேலான ஒன்றில் இருக்கின்றார். ஒரு நாளிலே அவர் வருவார் அப்பொழுது நீ பிரசங்கித்த சுவிசேஷத்தைக் கொண்டு உனக்கு தீர்ப்பளிக்கப்படும். ஏனென்றால் நீ தான் தலைவனாக, வழி காட்டிக் கொண்டு முன்னால் சென்றவனாக (leader) இருந்தாய்,” என்றது. நான், "அப்படியானால் பவுலுக்கும் கூட தன் கூட்டத்தினரோடு கூட தீர்ப்பு அளிக்கப்படுமா-?” என்று கேட்டேன். அதற்கு அவர் "ஆமாம்,” என்றார். அப்பொழுது நான் "பவுல் பிரசங்கித்த அந்த அதே சுவிசேஷத்தை தான் (நானும் பிரசங்கித்தேன். அவன் எப்படியாக அதைக் கூறினானோ சரியாக அதே விதமாகத் தான் நானும் கூட அதை கூறினேன்,” என்றேன். 33. அப்பொழுது அங்கே இருந்த லட்சக்கணக்கானவர்களின் சத்தங்கள் "நாங்கள் அதன் மேல் தான் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்” என்று பெருஞ்சத்தமிட்டன. 34. அப்பொழுது விசித்திரமான ஒரு காரியம் நடந்தது. ஒரு சேணங் கொண்ட குதிரையை நான் வைத்திருந்தேன். நான் அதை பிரின்ஸ் என்று அழைப்பேன். அந்த குதிரையை நான் எவ்வளவாக நேசித்தேன் தெரியுமா. ஒவ்வொரு காலை வேளையிலும் பள்ளிக்கு செல்வதற்கு முன்னர் நான் மிருகங்களை பிடிக்க அந்த குதிரையின் மீது ஏறிச் செல்வேன். அங்கே அந்த சிறு குதிரை என்னிடமாக வந்து தன் தலையை என் தோளின் மீது வைத்துக் கொண்டது. தன் மிருதுவான மூச்சை என் தோளின் மீது விட்டு சிறிய சத்தத்தைப் போட்டது. அப்பொழுது நான் அதைத் தட்டிக் கொடுத்தேன். நான் "பிரின்ஸ், நீ இங்கே இருப்பாய் என்று எனக்குத் தெரியும்,” என்று கூறினேன். பிறகு ஏதோ ஒன்று கரத்தை நக்கினது போல உணர்ந்தேன். நான் பார்த்த போது அங்கே என்னுடைய பழைய கூன் நாய் இருந்தது. அது என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டது. வேட்டையாடும் போது என் துணிகளை எடுத்துத் தந்தது. நான் “பிரின்ஸ, இல்லை , பிரிட்ஸ், நீயும் கூட இங்கே இருப்பாய் என்று எனக்குத் தெரியும்" என்றேன். அப்பொழுது எனக்கு எதோ ஒன்று சம்பவித்தது போல உணர்ந்தேன். நான் திரும்பிச் சென்று கொண்டிருந்தேன். 35. இக்காரியமானது கிறிஸ்தவ வியாபாரிகளின் சங்கத்தின் சத்தம் என்னும் பத்திரிக்கையில் எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்டது. அன்றொரு நாள் ஒரு ஊழியக் காரர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் அவர் “சகோ.பிரன்ஹாம், அந்த தரிசனத்தை நான் பராட்டுகிறேன். ஆனால் நீங்கள் குதிரைகள் என்று கூறும் வரைக்குமாக அத்தரிசனம் மிக அருமையாய் இருந்தது. பரலோகம் மானிடர்களுக் காக ஏற்படுத்தப்பட்ட ஒன்றாயிற்றே-! குதிரைகள் என்பவைகளுக்கு பரலோகத்தில் இடம் கிடையாது,” என்று கூறினார். 36. அப்பொழுது நான் அவருக்கு பதிலளித்தேன், "சகோதரனே, நான் (வெளி 19:11-14) பரலோகத்தில் இருந்தேன் என்று கூறவே இல்லை. இயேசு எங்கே என்று நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் அதற்கும் அப்பாற்றப்பட்ட ஒரு இடத்தில் இருந்தார்” என்றேன். மேலும் நான் "நான் கூறுவது உங்களுக்கு சிறிது உதவியாக இருக்கும் என்றால், வெளிப்படுத்தல் புத்தகத்தில் 'இயேசு வானாதி வானங்களில் இருந்து புறப்பட்ட போது அவர் ஒரு வெள்ளைக் குதிரையின் மேல் இருந்தார், '' பரலோகத்தின் சேனைகள் வெள்ளைக் குதிரைகளின் மேல் ஏறி அவருக்குப் பின் சென்றார்கள்,” என்று கூறுகின்றதே என்றேன். 37. நான் திரும்பிச் செல்ல ஆரம்பித்த போது எனக்கு நல்ல ஒரு உணர்வை அளித்தது என்னவென்றால், அவர் “நீ நேசித்த அனைவரையும் மற்றும் உன்னை மனப்பூர்வமாக நேசித்த அனைவரையும் தேவன் உனக்கு கொடுத்திருக்கிறார்,” என்று கூறினது தான். 38. ஒரு பிரகாசமான நாளிலே, மறுபக்கத்திலே, அது வித்தியாசமானதாக இருக்கும். என்னால்... மக்களே நீங்கள் அந்த இடத்தை தவறவிடுவது நல்லதே அல்ல. அப்படி நீங்கள் செய்யவே செய்யாதீர்கள். நீங்கள் என்ன செய்தாலும் சரி, அதை... நீங்கள் பயப்படாதீர்கள். பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. பயப்படுவதற்கு என்று அங்கே ஒன்றுமே இல்லை . 39. ஓ, நான் திரும்ப வரவேண்டும் என்று நினைத்த போது அது என்னை சோகத்திற்குள்ளாக்கினது. “நான் திரும்ப போக வேண்டுமா-? நான் திரும்பிச் செல்லவேண்டுமா-? நான் எதற்கு பயந்தேனோ அதற்கு திரும்பபோக வேண்டுமா-?” பாருங்கள்-? ஆகவே பிறகு நாங்கள் உயிர்த்தெழுந்த சரீரத்திற்கு திரும்ப வரும் போது அப்போது நாங்கள் புசிப்போம் குடிப்போம். அவர்கள் அங்கே புசிக்கவும் இல்லை குடிக்கவும் இல்லை. புசிக்கவும் குடிக்கவும் அவர்களுக்கு தேவையே இல்லாதிருந்தது. அவர்கள் எங்கேயும் சென்று கொண்டிருக்கவில்லை. அவர்கள் களைப்பாகவும் இருக்கவில்லை. அது... அதை விவரிக்க எந்த வார்த்தையை உபயோகிப்பது என்று எனக்குத் தெரியவே இல்லை. அது பரிபூரணமான ஒன்றாய் இருந்தது; அந்த வார்த்தை கூட அதற்கு விவரணம் அளிக்க போதாது. நான் அதை பரிபூரணம் என்று அழைத்தாலும் அதற்கு அப்பாற்பட்டதாக அது இருந்தது. அவர்கள் அங்கே வந்து சேர்ந்திருந்தனர். அது தான், அந்த இடமானது அது மிகவும் அற்புதமான ஒன்றாக இருந்தது. 40. ஆகவே, ஓ, நண்பர்களே, சற்று கவனியுங்கள். நான் சரியான மனநிலையில் தான் இருக்கின்றேன் என்று நினைக்கின்றேன். அது விசித்திரமாக தென்படுகிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் என்னால் அதை விவரிக்க முடியவில்லை. அந்த காரியங்களை மக்களுக்கு விவரிக்க நான் முயற்சி செய்ததே இல்லை. அங்கே காரியங்கள்... அது விவரிப்பதற்கும் அப்பாற்பட்டது. நீங்கள் முயற்சி செய்தால் மக்களின் மனங்களை குழப்புமுறச் செய்வீர்கள். என்னால் அது கூடுமானால், அப்படியாக கூறவேண்டும் என்று உணருவேனானால், அது அச்சம் தருகின்றதாக இருக்கும். [1 கொரி.2:9] 41. ஆகவே இதை கவனியுங்கள். நான் இதைக் கூறுகிறேன். பயப்படாதீர்கள். மரணம் என்பது ஒரு சோளக்கொல்லை பொம்மை போன்ற ஒன்றாகும். மரணம் என்பது ஒரு காரியத்திற்கு அருகில் நீங்கள் வராதபடிக்கு உங்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்கின்ற ஒரு சோளக் கொல்லை பொம்மை ஆகும். ஓ என்னே, அது மிகவும் மகிமையான ஒன்றாகும்-! உங்களால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத படிக்கு அது அதற்கும் அப்பாற்பட்டதாகும். "தேவன் தம்மில் அன்பு கூறுகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை. காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவும் இல்லை,” என்று வேதாகமம் கூறியுள்ளதில் வியப்பொன்றுமில்லை ஓ, காலத் திரைக்கு அப்பால் நோக்கிப் பார்ப்பதானது எப்பேற்பட்டது-! அதன் பிறகு, என் வாழ்க்கையில் முன்பு செய்ததைக் காட்டிலும் இன்னும் அதிகமாக மக்களை கிறிஸ்துவுக்கென்று சம்பாதிக்க கடினமாக பிரயாசப்படுகின்றேன். நீங்கள் அதை தவறவே விடக்கூடாது. அதைச் செய்யாதீர்கள். நீங்கள் தேவனுடன் சரியாக இருக்கும்படிக்கு தவறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது மற்றவை எல்லாம் சரியாக ஆகிவிடும். 42. இன்றிரவு நான் பேச வேண்டும் என்று நினைத்திருந்த சில குறிப்புகள் இங்கே நான் வைத்திருக்கிறேன். நாளை இரவு நாம் அங்கே இருப்போம். இங்கிருந்து சுமார் 20-மைல் அல்லது அதற்கு கூடுதலான தூரத்தில் உள்ள அந்த இடத்தில் இருப்போம். அந்த இடம் பெயர் மேசா என்று நினைக்கிறேன். அது மேசா தானே-? பிறகு அடுத்த இரவு டெம்பி என்ற இடத்தில் கூட்டம் உள்ளது. டெம்பி, சகோதரன் வில்லியம்ஸ் என்னிடம் அளித்த திட்ட விவரங்களை என் பாக்கெட்டில் வைத்து உள்ளேன். ஆகவே, நான் ஓயாமல் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன். அந்த நிகழ்ச்சி நிரலைக்கூட நான் எடுத்துப் பார்க்கவில்லை. பில்லி வந்து என்னை அழைத்துச் செல்கிறான், அவ்வளவு தான், "நாம் இன்னின்ன இடத்திற்கு செல்கிறோம், பிறகு அந்த இடத்திற்கு செல்கிறோம். இதோ நாம் புறப்படலாம்” என்பான். நான் அங்கே செல்கிறேன், அவன் என்னை நெருக்க முயற்சிக்கின்றான் (சபையார் சிரிக்கின்றனர் - ஆசி.) 43. இப்பொழுது ஒவ்வொருவரும் பக்திப்பூர்வமாக உணர்கிறீர்களா-? அப்படியானால் ”ஆமென்” என்று கூறுங்கள். [சபையார் "ஆமென்” என்கின்றனர் -ஆசி.] மிகவும் அருமையான ஒன்றாகும். அது அருமையானதாகும். இப்பொழுது, நாம் நம்முடைய தலைகளை இப்பொழுது சற்று தாழ்த்துவோமாக. 44. நாம் காரியங்களை தெரியப்படுத்தும் போது வெளிப்படுகிற நம்முடைய சிறிய நகைச்சுவை உணர்வு, நாம் பிள்ளைகளாக இருக்கிறோம், நாம் சிறு பிள்ளைகளைப் போல பேசுகிறோம், இங்குமங்கும் ஓடுகிறோம். ஆகவே நாம்... தேவனுக்கும் நகைச்சுவை உணர்வு உண்டு என்று உங்களுக்குத் தெரியும். 45. நாம் அவருடைய வார்த்தையை வாசிப்பதற்கு முன்னர் இப்பொழுது நம் தலை- களை தாழ்த்தி அவருடன் பேசுவோமாக, நாம் நம் தலைகளை தாழ்த்தி இருக்கையில் யாருக்காவது ஜெபிக்கப்பட ஏதாவது விண்ணப்பம் உள்ளவர்கள் இருக்கின்றீர்களா-? உங்கள் கரத்தை உயர்த்தி அதை தெரியப்படுத்துவீர்களாக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் இப்பொழுது நம் தலைகளை தாழ்த்துவோமாக. (மத்தேயு 18:20) 46. எங்கள் பரலோகப்பிதாவே, நாங்கள் எங்கள் தலைகளையும் எங்கள் இருதயங்களையும் தாழ்மையில் தாழ்த்தி உம்முடைய பிரசன்னத்துக்குள்ளாக வருகின்றோம். நாங்கள் விசுவாசத்தைக் கொண்டு சந்திரனையும் நட்சத்திரங்-களையும் கடந்து தேவனுடைய சிங்காசனத்திற்கு விசுவாசத்தினாலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அணுகுகிறோம். ஏனென்றால் நாங்கள் அவருடைய நாமத்தில் வரும் போது நீர் நிச்சயமாக எங்களுக்கு செவி கொடுக்கப் போகிறீர் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம். இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாங்கள் தேவனுடைய பிரசன்னத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறோம் என்று அறிந்து கொள்வதானது எப்படிப்பட்ட ஒரு சிலாக்கியமாக இருக்கின்றது. (யோவான் 14:13-14][யோவான் 15:16][ ரோமர் 3:24][ ரோமர் 6:17) 47. பிதாவே, அவருடைய நாமத்திலே நாங்கள் எதைக் கேட்டாலும் நீர் தாமே உம்முடைய அளவற்ற இரக்கத்தினாலும் கிருபையினாலும் எங்கள் பாவங்களை நீர் தாமே மன்னித்து எங்கள் வாஞ்சைகளை நீர் எங்களுக்கு அளிப்பீர் என்று நீர் எங்களுக்கு கூறியிருக்கின்றீர். பிதாவே, அதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்த சிலாக்கியத்தைக் கொண்டு உள்ளதைக் காட்டிலும் இன்னும் ஒரு மேலான ஒரு சிலாக்கியம் இருக்கும் என்று எங்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாததாக இருக்கின்றது. 48. அமெரிக்க குடிமக்களாக எங்கள் ஜனாதிபதியை அணுகுவதென்பது ஒரு சிலாக்கியமாக இருக்கும். ஆகவே நாங்கள் செய்ய வேண்டியதெல்லாமே, அங்கு சென்று ஜனாதிபதியின் நிறைய நிகழ்ச்சி நிரல்களுக்கு மத்தியில் ஒரு நிமிடம் அவருடன் இருக்க வேண்டும் என்று விண்ணப்பிக்க வேண்டும். அதற்காக நாங்கள் அநேக அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும். இருக்கின்ற எல்லா ஏற்பாடு-களையும் செய்து அதன் பிறகு வர வேண்டும். ஏன் ஜனாதிபதியை சந்திக்கிறோம் என்ற காரணங்களையும் தெரிவிக்க வேண்டும். பிறகு அவரை சந்திக்கும் சிலாக்கியத்திற்கு முன்னர் நாங்கள் சோதனையிடப்படவும் வேண்டும். 49. ஆனால், அதை குறித்து சிந்திக்கும் போது; வானங்களையும் பூமியை சிருஷ்டித்த சிருஷ்டிகராகிய தேவன், நாம் அவரிடம் வரும்படிக்கு காத்துக் கொண்டிருக்கின்றார் என்பதை நாம் சற்று சிந்திப்போமானால், நாம், ஒன்றுக்கு உதவாத பாவிகளாக இருக்கிறோம். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே நாம் அணுகும்படிக்கு அவர் காத்துக் கொண்டிருக்கின்றார். நாம் கேட்டுக் கொள்வதெதுவோ அது நமக்கு அளிக்கப்படும். நமக்கு அளிக்கப்படும் என்கின்ற விசுவாசம் மாத்திரம் நமக்கு இருந்தால் போதும் என்ற நிலையில், அது அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்-துடனே அவர் காத்துக் கொண்டிருக்கின்றார். ஆகவே நாங்கள் எங்கள் விண்ணப்பங்களை மிகவும் கவனமாக அளிக்கின்றோம். நாங்கள் முட்டாள்தனமாக பேசவோ அல்லது முட்டாள்தனமாக கேட்கவோ மாட்டோம் என்று அறிந்து இருக்கிறோம் அப்படி நாங்கள் செய்வோம் என்றால், கர்த்தாவே நீர் எங்களை மன்னிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறோம். 50. இங்கு மேலே உயர்த்தப்பட்ட ஒவ்வொரு கரங்களின் மீதும் இரக்கத்திற்காக இன்றிரவு நாங்கள் கேட்கின்றோம். கர்த்தாவே, அவர்களுடைய விண்ணப்பங்கள் தாமே அவர்களுக்கு அளிக்கப்படுவதாக. நாங்கள் உம்முடைய பிரசன்னத்தில் இப்பொழுது இருக்கையில் அவர்கள் தாமே தங்களுடைய இருதயத்தில் அந்த நிச்சயத்தை இப்பொழுது உணரட்டும். நாங்கள் எங்கள் கண்களைத் திறந்து நீர் தாமே எங்களை உண்டாக்கின மண்ணை நோக்கி இருக்கின்ற எங்கள் தலைகளை மேலே உயர்த்தும் போது நாங்கள் கேட்டுக் கொண்டது எதுவோ அது எங்களுக்கு அளிக்கப்பட்டது என்ற, நங்கூரமிடப்பட்ட நிச்சயத்தை நாங்கள் உணருவோமாக. 51. கர்த்தாவே, ஒருக்கால் இன்றிரவு இக்கட்டடத்தில் உம்முடைய பிரசன்னத்துக்குள் இதுவரை வந்திராதவர்கள் இருக்கலாம். அவர்களுக்காக ஜெபத்தின் மூலமாக அந்த மன்னிக்கும் கிருபையை நாங்கள் கேட்கின்றோம். இந்த இரவு தாமே பரிசுத்த ஆவியின் கிரியை மற்றும் செயல் மற்றும் கூறப்படுதலானது அவர்களுடைய இருதயமானது நடுங்கி அந்த மன்னிக்கும் கிருபையை கேட்கும்படிக்கு செய்யும் ஒன்றாக இருப்பதாக. (யாக்கோபு.5:15) 52. வியாதியஸ்தரை சுகப்படுத்தும், கர்த்தாவே, விசுவாச ஜெபமானது இப்பொழுது ஏறெடுக்கப்பட்டிருக்கையில் அது அளிக்கப்படும் என்னும் நிச்சயத்தை நீர் தாமே அவர்களுக்கு அளிக்கும்படிக்கு நாங்கள் ஜெபிக்கின்றோம். "விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்.” ஏனென்றால் எங்களால் அதை கூறி அதில் காரியத்தை சொல்ல முடியும். ஏனென்றால் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று இருக்கின்றது. அது தேவனுடைய வார்த்தையில் எழுதப்பட்டும் இருக்கின்றது. (எபேசியர்.3:20] [லூக்கா .24.32) 53. இப்பொழுது, பிதாவே, உம்முடைய வார்த்தைக்காக இன்று அளிக்கப்படுகின்ற சிறு விளக்கக் குறிப்புகளை ஆசீர்வதிக்கும்படியாக நாங்கள் ஜெபிக்கின்றோம். இந்த வேத வாசிப்பிலிருந்து ஒவ்வொரு இருதயத்துக்கும் ஒரு பொருளை எடுத்துத் தாரும். நான் தானே எந்த விதத்திலும் தவறுவேனானால், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திலிருந்து சிறிது தவறுவேனானால், அவர் தாமே தம்முடைய தெய்வீக கிருபையினால் வார்த்தையுடனே சென்று அது எந்த இருதயத்திற்கென்று நியமிக்கப்பட்டுள்ளதோ அந்த இருதயத்துக்கு அதைக் கொண்டு சென்று வைப்பாரக, இன்றிரவு நாங்கள் தாமே சர்வ வல்லவருடைய கரமானது இந்த கட்டடம் முழுவதுமாக நீட்டப்பட்டு நாங்கள் வேண்டி கொள்வதற்கும் நினைக்கிற- தற்கும் காட்டிலும் அதிகமானதைச் செய்வதை நாங்கள் காண உதவி செய்யும். நாங்கள் இன்றிரவு புறப்பட்டு பல திசைகளில் உள்ள எங்கள் வீடுகளுக்கு செல்லும் போது, எம்மாவுவிலிருந்து வந்தவர்கள் "வழியிலே நம்முடனே பேசின போது நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா,” என்று சொன்னது போல நாங்கள் கூறுவோமாக. இதை நாங்கள் அவருடைய நாமத்தில் கேட்கின்றோம். ஆமென். 54. இப்பொழுது, மக்களில் நிறைய பேர் ஒரு ஊழியக்காரர் உபயோகிக்கின்ற பொருளையும், குறிப்புகளையும் எழுதிக் கொள்கின்றனர். ஆகவே நான், நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், பரிசுத்த வேத வசனங்களில் 2-இடங்களில் நான் வாசிக்க விரும்புகிறேன். அது, ஆதியாகமம் 22-ஆம் அதிகாரம், நாம் முதலில் அதை எடுத்து வாசிப்போம். அதன் பிறகு பரிசுத்த யோவான்-12:32, இதை நாம் வேத வசனத்தின் இரண்டாவது பாகமாக வாசிக்கலாம். இப்பொழுது யோவான்.... ஆதி-22, நாம் 22-ஆம் அதிகாரத்தின் 7-ஆம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம். அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு என் மகனே இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது. தகன பலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான். அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக் குட்டியைப் பார்த்துக் கொள்வார் (ஆங்கில வேதாகமத்தில் Provide அருளுவார் என்று இருக்கிறது- தமிழாக்கியோன்) என்றான், அப்புறம் இருவரும் கூடிப்போய் 55. இப்பொழுது, பரிசுத்த யோவான்-12:32, நம்முடைய கர்த்தருடைய உதடுகளில் இருந்து வந்த இந்த வார்த்தைகளை நாம் வாசிப்போமாக. நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும் போது, எல்லாரையும் என் இடத்தில் இழுத்துக் கொள்வேன் என்றார். 56. ஆகவே இப்பொழுது இதன் பேரிலே நான் பேச இருக்கின்ற பொருள் என்ன என்றால், ”கடைசி காலத்திற்கென்று தேவனால் அருளப்பட்ட வழியை ஏற்றுக் கொள்ளுதல்" என்பதாகும் ஒலிநாடாவிற்காக நான் இதை மறுபடியுமாக கூறுகிறேன். இந்த செய்திகளை அவர்கள் ஒலிநாடாவில் பதிவு செய்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நாம் கொண்டிருக்கின்ற ஒலி நாடாக்களில் சுமாராக 500-தலைப்புகள் உள்ளதென்று நான் நினைக்கிறேன். அது நான் பிரசங்கித்தவைகள், நான் பேசின பொருள்கள் சில ஒத்ததாக இருக்கும். ஆனால் இப்பொழுது நான் பேசவிருப்பது இதற்கு முன்பு இல்லை. கடைசி காலத்திற்கென்று தேவனால் அருளப்பட்ட வழியை ஏற்றுக் கொள்ளுதல். [மத்தேயு 6:24] [லூக்கா 16:13] 57. உங்களுக்குத் தெரியும், மக்கள் தெரிந்தெடுக்கின்ற வழிகள் அநேகம் உள்ளன. ஆனால் ஒரு மனிதனால் செல்லக் கூடிய வழிகள் 2-மாத்திரமே இருக்கின்றன. அது என்னவென்றால், ஒன்று சரியான வழி மற்றொன்று தவறான வழி என்பதே. ஆகவே இங்கே நாம் எல்லாருமே இன்றிரவு அந்த சாலைகளில் ஒன்றில் தான் இருக்கின்றோம் சரியான, ஒன்று, மற்றும் தவறான ஒன்று. நடுநிலையான இடம் என்பது இல்லவேயில்லை. இயேசு, "தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது” என்று கூறினார் அதன் அர்த்தம் “உலகத்திற்கும்”. ஒன்று நாம் சரியாக இருக்க வேண்டும் அல்லது தவறாக இருக்க வேண்டும். 58. ஆகவே இப்பொழுது நாம் நமது சொந்த வழியிலிருந்து கடந்து அப்புறம் செல்வோமானால், தேவனுடைய வழியில் செல்வதற்கு இருக்கின்ற ஒரே வழி அது தான். ஒவ்வொன்றிற்கும் தேவன் ஒரு வழியை அருளியிருக்கின்றார். அவர் அந்த வழியை அருளியிருக்கின்றார். நாம் தொல்லையில் அகப்படுவது எப்பொழுது என்றால், அந்த வழியை பின் பற்றாமல் இருப்பதினாலே தான், அந்த வழியிலே நம்முடைய சொந்த வழிகளை உள்ளே செலுத்துவது தான் நமக்கு பிரச்சனைகளை உண்டாக்குகிறது. மேலும் அது தாறுமாறை உண்டாக்குகிறது. தாறுமாறாக்கப்பட்ட எந்த ஒன்றுமே நம்பிக்கைக்கு உரியது அல்ல. ஆகவே, தேவன் ஒரு வழியை வைத்திருக்கின்றார். ஆகவே இப்பொழுது நாம் அவருடைய வழிகளில் சிலவற்றை பார்ப்போமாக. 59. இப்பொழுது நாம் இயற்கையில் இருக்கும் ஒன்றை எடுத்துக் கொள்வோம். ஏனென்றால், இயற்கை தான் என்னுடைய முதல் தேவதாகமம் ஆகும். தேவன் சிருஷ்டிகர் என்றும் அவர் இயற்கையை சிருஷ்டித்தார் என்றும் அறிவேன். தம்முடைய சிருஷ்டிப்பாகிய இயற்கையில் அவர் ஜீவிக்கின்றார். 60. உதாரணத்திற்கு ஒரு மரத்தை நாம் எடுத்துக் கொள்வோம். சற்று முன்னால் அங்கே இருந்த ஒரு மரத்தின் கீழாக நான் வண்டியை நிறுத்தினேன், பில்லியும் அவ்வாறே செய்தான். அந்த மரத்தில் கிளைகள் இருந்தன. இலைகள் விழுந்து கொண்டிருந்ததை நான் கண்டேன். இப்பொழுது, குளிர் காலத்தில் அந்த மரமானது தன்னுடைய ஜீவனை மறைக்க தேவன், அதற்கு அளித்திருக்கும் வழியைக் காட்டிலும் நம்மால் ஒரு போதும் வேறு ஒரு வழியை அதற்கு காண்பிக்க முடியவில்லை. நம்மால் அதற்கு ஒரு வழியையும் காண்பிக்க முடியாது. 61. இப்பொழுது, அந்த மரத்திற்கு அருளப்பட்டிருக்கிற ஒரு வழக்கமான வழியைக் காட்டிலும் வேறே ஏதாவது ஒரு வழியை நாம் அதற்கு உருவாக்கி காண்பிக்க முயற்சிப்போமானால் என்னவாகும்-? ஒவ்வொரு ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதமும், முக்கியமாக நான் வருகின்ற வடக்கு பிரதேசத்திற்கு நாம் ஒரு கருவியை எடுத்து அதை ஒரு மரத்திற்குள்ளாக வைத்து, ஆப்பிள் பழங்கள் பழுத்து முடித்த பிறகு ஆகஸ்டு மாதத்தில் அந்த மரத்தினிடமாக ஒரு கருவியை கொண்டு சென்று அந்த மரத்திலிருக்கும் ஜீவனை அப்படியே உறிஞ்சி எடுத்துச் சென்று ஒரு வெப்பம் மிகுந்த ஒரு நல்ல இடத்திற்கு சென்று, குளிர் காலம் கடந்து செல்லும் வரைக்குமாக அதை பத்திரப்படுத்தி வைப்போமானால், அந்த மரத்திலிருந்து ஜீவனை வெளியே எடுத்து ஒரு நல்ல வெப்பமான பெட்டியில் வைத்து பத்திரப் படுத்தி வசந்த காலம் வரும் வரைக்குமாக பத்திரமாக வைத்து பிறகு அதை திரும்பக் கொண்டு வந்து மரத்திற்குள்ளாக மறுபடியாக செலுத்தினால் எப்படி இருக்கும்-? அது ஒரு போதும் கிரியை செய்யாது, எந்த பலனையும் கொடுக்காது என்று உங்களுக்கு தெரியும். அது எந்த பலனையும் கொடுக்காது. அப்படி செய்ய எத்தனிப்போமானால் அந்த மரத்தை நாம் கொன்று தான் போடுவோம். 62. ஆனால், அந்த மரத்தின் ஜீவனை குளிர் காலம் முழுவதுமாக காக்க தேவன் ஒரு வழியை வைத்திருக்கின்றார். தேவன் ஒரு வழியை உண்டாக்கியிருக்கின்றார். அந்த மரத்தின் மீது உறைபனி கொட்டும் என்று அறிந்தவராக அவர் ஒரு வழியை அந்த மரத்திற்கு உண்டாக்கியிருந்தார். சில காலங்களுக்கு முன்னர், அந்த காரியத்தைக் கொண்டு 75-வயதான ஒரு நாத்திகனை கிறிஸ்துவண்டை வழி நடத்தின சிலாக்கியத்தை நான் கொண்டிருக்கிறேன். 63. என் பக்கத்து வீட்டைச் சேர்ந்த திரு.உட், அவர் ஒரு யேகோவா சாட்சிகள் ஸ்தாபனத்தை சேர்ந்தவர் ஆவார். முடமான ஒரு மகன் அவருக்கு இருந்தான். அவனின் கால்கள் அப்படியே விறைத்து அவனுக்கு கீழாக மடிந்து கிடந்தது. அவருடைய மனைவி, சர்ச் ஆஃப் காட் ஸ்தாபனத்தின் ஆண்டர்சன் இயக்கத்தைச் சேர்ந்தவள் ஆவாள். அவர்கள் லூயிவில்லிலுள்ள கெண்டக்கிக்கு வந்தனர். லூயிவில்லிருந்து சுமார் 30-மைல் தொலையில் உள்ள க்ரெஸ்ட்வுட் என்று அழைக்கப்பட்ட ஒரு சிறு இடத்தில் அவர்கள் குடியிருந்தனர். 64. அங்கே அந்த அரங்கத்தில் நடந்த கூட்டத்தில், ஒரு சுண்ணாம்பு கட்டி அல்லது ஒரு கல்லைப் போல விறைப்பாக்கிவிடுகின்ற ஒரு விதமான வியாதியைக் கொண்டிருந்த ஒரு சிறு பெண்ணை அவர்கள் கண்டனர். அந்த சிறு பெண்ணிற்கு ஏற்கெனவே அவளுடைய இடுப்பு பகுதி வரைக்குமாக பக்கவாதத்தினால் ஆற்றல் இழந்து போயிருந்தது, அநேக மாதங்களாக அவள் எந்த ஒரு அசைவுமின்றி கிடந்தாள். அந்த வியாதியானது அவளுடைய பாதத்திலிருந்து வந்திருந்தது. ஒரு நாள் இரவு அவளுக்கு ஜெபம் ஏறெடுக்கப்பட்டது, அடுத்த நாளே அவள் படிக்கட்டில் மேலும் கீழுமாக ஓடிக்கொண்டிருந்தாள், அவளால் முடிந்த வரைக்குமாக வேகமாக ஓடிக் கொண்டிருந்தாள். 65. திரு.உட் தன் மகனைக் கொண்டு வந்தார். ஆம், அவரால் கூட்டத்துக்குள்ளாக வர முடியவில்லை. அந்த கூட்டத்திற்கு பிறகு உடனடியாக நான் நம்முடைய கர்த்தருக்கென்று வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டேன். பிறகு வெளிநாட்டு கூட்டங்கள் முடித்து திரும்பி வருகையில் நான்... ஒஹையோவில் ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருந்தேன். டேவிட் என்ற பெயரையுடைய தன் மகனை அவர் கொண்டு வந்தார். அவர் மிகவும் பின்னாக உட்கார்ந்திருந்தார். ஓ ஏறக்குறைய ஓ, ஏறக்குறைய நகரத்தின் அரை மைல் தூர அளவிற்கு பின்னால் இருந்தார். 66. அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் உள்ளே வந்தார், "இன்றிரவு ஒரு மனிதன் இங்கே இருக்கின்றார். அவரும் அவருடைய மனைவியும் அங்கே மிகவும் பின் புறத்தில் அமர்ந்திருக்கின்றனர்” என்று கூறினார். அந்த மனிதனை நான் என் வாழ் நாளில் ஒரு போதும் பார்த்ததே இல்லை. மேலும் "அந்த மனிதன், அவருடைய பெயர் உட் ஆகும். அவர் ஒரு காண்ட்ராக்டர், போலியோ வியாதியால் முடமாக உள்ள தன் மகனை அந்த மனிதன் கொண்டு வந்திருக்கிறார். அவனுடைய கால்களில் ஒன்று அவனின் இடுப்பிற்கு கீழே மேல் நோக்கி மடங்கி இருக்கிறது. இதோ, கர்த்தர் உரைக்கிறாவது, அந்த பையன் சுகமாக்கப்பட்டான்" என்றார். 67. இப்படி கூறப்பட்டதை கேட்பது உட்டுக்கு பழக்கமில்லாதிருக்க அந்த பையன் சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தான். சிறிது நேரத்தில் பிறகு, அவனுடைய தாயார் அவனை நோக்கி "டேவிட், சற்று நிற்க முயற்சி செய்வாயா-?” என்று கூறினாள். உடனே அவன் எழுந்து நின்றான். அவனுடைய மடங்கியிருந்த கால் நன்றாயிருந்த இன்னொரு காலைப் போல காணப்பட்டது. 68. அந்த மனிதன் தன்னுடைய வர்த்தகத்தை மற்றொருவருக்கு விற்று என் பக்கத்து வீட்டிற்கு குடி வந்து என் பக்கத்து வீட்டு நபராகி விட்டார். ஓ, அவர் மிகவும் அருமையான சகோதரன் ஆவார். நான் இங்கே வந்து சிறிது நீண்ட காலமாக இருக்க நேரிடும் என்று அவர் அந்த காலைப் பொழுது கேள்விப்பட்ட போது அவர்... பொழுது விடிந்து வெளிச்சம் வந்திருந்தது. அப்பொழுது என் வீட்டிலிருந்து புறப்பட்டேன், அங்கே அவர் தெருவில் நின்றிருந்தார், அந்த விதமாக அவர் அழுது கொண்டிருந்தார். என்னுடனே வர வேண்டும் என்பது போல அவர் காரை பிடித்துக் கொண்டார். அவர் என்னை அப்படியே கட்டித் தழுவி விட்டு தெருவில் நடந்து சென்றார். மிகவும் அருமையான ஒரு சகோதரன் ஆவார் அவர்-! எனக்கு மிகவும் ஆத்ம நண்பராக இருந்து வருகிறார். 69. சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் நாங்கள் கெண்டக்கி மாநிலத்தில் அணில் வேட்டையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது பருவ நிலை மிகவும் வெப்பமாகி எல்லாம் வறண்டு போய் இருந்தது. கிரே அணில் என்றால் என்ன என்று கிழக்கு பிரதேச மக்களாகிய உங்களில் யாராவது ஒருவருக்கு தெரியுமா... அது பயங்கொள்ளும் போது மந்திரவாதி ஹூடினி (Houdini) மறையும் வேகத்தைக் காட்டிலும் அந்த அணில் மிக வேகமாக ஓடி மறைந்துவிடும். ஆகவே அவைகளை .22 துப்பாக்கியால் நாங்கள் வேட்டையாடுவோம், அவைகளை வேட்டையாடுவது எனக மிகவும் பிடித்தமானதாகும். நாங்கள் வேட்டையாடினோம். நான் இரண்டு வாரங்கள் விடுமுறை எடுத்து, நாங்கள் வேட்டையில் இருந்தோம். அப்போது மிகவும் வெப்பமாகி எல்லாமே வறண்டு காய்ந்து இருந்தது. நீங்கள் காட்டுக்குள் நடந்து செல்கையில் இலைகள் அப்படி சத்தத்துடன் நொறுங்கி உடையும். அப்போது, அந்த சிறு அணில்கள்,.. என்னே, அதை உங்களால் காணவே முடியாது. அது ஓடி மறைந்து விடும் 70. அப்போது சகோ.உட் என்னிடம் "சகோ.பிரான்ஹம்,.. அங்கே மிகவும் ஆழமான படுகுழிகள் உள்ள இடம் எனக்கு என்று கூறினார். 71. ஒரு (hollow) தாழ இருக்கும் காடுகள் நிறைந்த பள்ளதாக்கு என்றால் எத்தனைப் பேருக்கு தெரியும்-? நல்லது, கெண்டக்கியில் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் நீங்கள்-? அதை கெண்டக்கியில் அப்படித் தான் அதை அழைக்கின்றனர். இங்கே இன்னும் உள் பகுதியில் நீங்கள் அதை கான்யான் (Canyon) செங்குத்தான பள்ளத்தாக்கு என்று அழைக்கின்றீர்கள். தண்ணீர் பிரிந்து கிளை நதியாக செல்லும் இடம். நீங்கள் அந்த பகுதியின் உள்ளே செல்வீர்களானால், அங்கே தண்ணீர் ஓடுவதனால் இன்னுமாக ஈரமாகவே இருக்கும். ஆகவே உங்களால் சத்தம் போடாமல் நடக்க முடியும். 72. அவர், "அந்த வயதான நபர் ஒரு நாத்திகர் ஆயிற்றே, ஓ, பிரசங்கிகளை அவர் வெறுப்பவர் ஆயிற்றே,” என்றார். அந்த பிரதேசத்தில் ஒரே ஒரு முறை தான் நான் சென்றிருக்கிறேன், ஒரு கூட்டத்திற்கு நான் சென்றேன். அப்போது நான், “சரி, அவரை உங்களுக்கு தெரியுமா-? என்று கேட்டேன். அதற்கு அவர், "என் அப்பாவை அவருக்கு நன்றாகத் தெரியும்,” என்றார். 73. அதற்கு நான் "நாம் சென்று அவரிடம் கேட்போம், இங்கே நமக்கு வேட்டையாட எதுவுமே கிடைக்கவில்லையே,” என்று கூறினேன். 74. ஆகவே நாங்கள் இந்த சிறிய ட்ரக் வண்டியில் காட்டிற்குள்ளும், மலைகள் மேலும் ஓட்டிச் சென்றோம். ஓ, என்னே-! முடிவாக நாங்கள் ஒரு சிறிய இடத்திற்கு வந்தோம். ஒரு ஆப்பிள் மரத்தின் கீழ் 2-வயதான மனிதர் உட்கார்ந்திருந்தனர். அது சுமார் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதியாக இருந்தது. 75. அங்கே சென்றடைந்த உடன் அவர் ட்ரக், வண்டியை விட்டு வெளியே சென்று அவரிடமாக, "என் பெயர் உட், நான் பாங்க்ஸ் உட். நாங்கள் உங்கள் இடத்தில் வேட்டையாடுவது உங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை என்று நாங்கள் நினைக்கிறோம்” என்று கூறினார். அப்போது அவர், "நீ ஜிம் உட் அவர்களின் மகனா?” என்று கேட்டார். [மத்தேயு 3:11][மாற்கு 1:8) (லூக்கா 3:16][ யோவான் 1:33][ அப்போஸ்தலர் 1:4-5) 76. இப்பொழுது, அவருடைய தந்தை யேகோவா சாட்சிகள் ஸ்தாபனத்தில் ஒரு ரீடர் பதவியில் இருந்தார். பிறகு முழு குடும்பமும் கிறிஸ்துவுக்குள்ளாக வந்தனர். தரிசனங்கள் மூலம், ஒவ்வொருவராக வந்தனர். ஒவ்வொருவரிடமும், சம்பவிக்கப் போகின்ற காரியங்களை அவர்களிடமாக கூறினேன். அந்த விதமாக அது சம்பவித்தது. ஓ, நான் இப்பொழுது சற்று நிறுத்தி, அந்த குடும்பத்தினரின் முழு விவரங்களையும், அவர்கள் எப்படி சத்தியத்திற்குள் வந்தனர் என்று கூற முடியுமா-னால் நன்றாக இருக்கும். ஒவ்வொரு பிள்ளையும் இப்பொழுது தேவனுடைய இராஜ்யத்தில் இருக்கின்றனர். பரிசுத்த ஆவியால் அபிஷேகிக்கப்பட்டுள்ளனர். 77. பாங்க்ஸ் இதை ஏற்றுக் கொண்ட போது, அவருடைய மக்கள் எல்லாரும் அவரை வேண்டாம் என்று புறம்பாக்கிவிட்டனர். அவ்வளவு தான். அவர் வெளியே வந்து விட்டார். 78. ஆனால், ஒருவர் பின் ஒருவர், அவரை கடந்து சென்ற போது, அவரிடம் நலம் விசாரிக்கையில், பரிசுத்த ஆவியானவர் அவர்களை பிடித்து, அவர்களிடம் காரியங்களை கூறுவார். பிறகு அவர்கள் ஒவ்வொருவரும் உள்ளே வந்தனர். அவர்கள் புறப்பட்டு போய் மற்றவரிடம் கூறுவார்கள். அவர் வருவார், பரிசுத்த ஆவியானவர் அவரிடம் ஒன்றைக் கூறுவார், அப்பொழுது அவர் உள்ளே வந்து விடுவார். ஆகவே அந்த விதமாக முழு குடும்பமும் கிறிஸ்துவுக்குள்ளாக வந்தனர். ஆகவே நாங்கள் வெளியே இறங்கின போது ட்ரக் வண்டியை விட்டு வெளியே...... 79. அவர் ட்ரக் வண்டியை விட்டு இறங்கினார், அந்த மனிதனிடம் பேசின போது, அவர் "நீ ஜிம் உட்ஸின் மகனா-?” என்று கேட்டார். அதற்கு அவர், "ஆம்” என்று கூறினார். 80. அதற்கு வந்த வயோதிபர் "ஜிம் உட்ஸ் ஒரு நேர்மையான மனிதன் ஆவார். ஆம், ஐயா போங்கள், உங்களுக்கு விருப்பமான இடத்தில் எல்லாம் நீங்கள் வேட்டையாடிக் கொள்ளலாம்,” என்று கூறினார். 81. அதற்கு அவர் "உங்களுக்கு நன்றி. என்னுடன் என் பாஸ்டரை அழைத்து வந்திருக்கிறேன்,” என்று கூறினார். 82. அதற்கு அவர் "உட், நீ செல்லும் இடமெல்லாம் ஒரு பிரசங்கியை கொண்டு செல்லும் அளவுக்கு, நீ மிகவும் தரம் தாழ்ந்து விட்டாயா-?' 83. அப்போது நான் வண்டியை விட்டு இறங்கும் நேரம் வந்து விட்டது என்று நினைத்தேன். ஆகவே நான் ட்ரக் வண்டியை விட்டு இறங்கினேன. சுற்றும் முற்றும் நடந்தேன். ஓ, என்னே-! (சகோதரரே, நீங்கள் கூட வேட்டையாடுகிறீர்கள். என் வேட்டையாடும் கூட்டாளிகள் கூட இருக்கின்றனர். நீங்கள் இங்கே இருக்கின்றீர்கள் என்று எனக்குத் தெரியும்.) உடல் முழுவதும் இரத்தமும் அழுக்குமாக இருந்தது. தாடியும் இவ்வளவு நீளம் வளர்ந்திருந்தது. உங்களுக்கு அது தெரியும். இரண்டு வாரங்களாக குளிக்கவில்லை. ஓ-! ஆகவே நான் ட்ரக் வண்டியை விட்டு இறங்கினேன், பக்கவாட்டில் பின்னிட்டு நின்று கொண்டேன். அவர் என்னை மேலும் கீழுமாக ஏறெடுத்துப் பார்த்தார். இரண்டு அல்லது மூன்று முறை அவ்வாறு செய்தார். "யாரோ ஒரு பிரசங்கி” என்று நினைத்திருப்பார் என்று நான் யூகிக்கிறேன். நான் “நலமாய் இருக்கிறீர்களா-?” என்று கேட்டேன். அதற்கு அவர் “நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்-?” என்று கேட்டார். 84. அப்போது திரு.உட் என்னை தன்னுடைய பாஸ்டர் என்று அறிமுகப்படுத்த ஆரம்பித்தார்.... அப்போது அவர் கூறினார்... 85. அவர் பேசி முடிப்பதற்கு முன்னர், அந்த வயோதிப மனிதன் “சரி, நான் இப்பொழுது கூறுகிறேன். நான் சமய நம்பிக்கையற்ற ஒரு நாத்திகன். பிரசங்கிகள் என்று அழைத்துக் கொள்கின்ற உங்களைப் போன்ற ஆட்களிடம் எனக்கு ஒரு வேலையும் இல்லை” என்றார் நான், "ஆம் ஐயா, சரி. அது உங்கள் கருத்தாகும்” என்றேன். அப்பொழுது அவர், "நான் ஒரு நாத்திகன் என்றும் உங்களுக்கு தெரியுமே,” என்றார். 86. அதற்கு நான் "அதை குறித்து உயர்வாக பேசுவதற்கு அது ஒன்றும் பெரிதான ஒன்றல்ல என்றே நான் நினைக்கிறேன். நீங்கள் அப்படித்தான் நினைக்கிறீர்களா-?” என்றேன். அதற்கு அவர் “நான் அதை கணக்கில் கூட சேர்த்துக் கொள்ள மாட்டேன்” என்றார். 87. அப்பொழுது நான் கூறினேன், என் இருதயத்தில் "கர்த்தாவே, நீர் எனக்கு உதவி செய்வீரானால், இப்பொழுது எனக்கு உதவும்” என்று எண்ணினேன். 88. இன்னொரு வயோதிப மனிதனும் உட்கார்ந்திருந்தார். ஆனால் அவர் ஒன்றும் பேசவில்லை. அந்த பழைய சாய்வான தொப்பி, அது என்ன... அந்த தொப்பி எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியும். அந்த கயிறைக் கொண்டு தைக்கப்பட்டு இருக்கும் என்று உங்களுக்கு தெரியும். ஆகவே அவர்கள் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தனர். 89. அப்பொழுது அவர் “உங்களைப் போன்ற ஆட்களுக்கு எதிராக நான் கொண்டு இருப்பது என்ன என்று உங்களுக்கு தெரியுமா-? நீங்கள் தவறான ஒன்றுமற்ற காரியத்தைக் குறித்து அர்த்தமற்ற விதத்தில் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் (barking up the wrong tree ) என்று கூறினார். (ஆங்கிலத்தில், "barking up the wrong tree, என்ற மொழி மரபில் அவர் கூறுகிறார் - அதன் தமிழாக்கம் "தவறான மரத்தைப் பார்த்து குரைத்தல்” என்பதாகும் - தமிழாக்கியோன்) 90. "தவறான மரத்தைப் பார்த்து குரைத்தல்” இதற்கு அர்த்தம் என்ன என்று எத்தனைப் பேருக்குத் தெரியும்-? அது தவறான மரத்தைப் பார்த்து குரைக்கும் பொய் சொல்லுகிற நாய் என்பதாகும். அந்த நாய் அப்படி செய்யும் போது வேட்டை அதோடு முடிந்து விட்டது என்பதாகும். அங்கே மரத்தில் எதுவுமே இல்லை. பாருங்கள்-? 91. மேலும் அவர் “நீங்கள் ஒரு மரத்தைப் பார்த்து குரைக்கிறீர்கள். ஆனால் அங்கே மேலே எதுவுமே இல்லை,” என்றார். வேறு விதமாகக் கூறுவோமானால், "நீங்கள் தேவனைக் குறித்து பேசுகிறீர்கள். ஆனால் தேவன் என்கின்ற ஒரு காரியம் இல்லவே இல்லை,” நான், "நல்லது, ஆனால் நாங்களோ அதை விசுவாசிக்கிறோம்," என்றேன். அதற்கு அவர் "உம், நீங்கள் விசுவாசிக்கலாம். ஆனால் நான் விசுவாசிப்பதில்ல,” என்றார். நான், “சரி, அதனால் ஒன்றுமில்லை,” என்றேன். 92. அப்பொழுது அவர் "அதோ அங்கே மலையின் மேல் ஒரு பழமையான புகைப் போக்கி, சிம்னி இருப்பதை உன்னால் பார் முடிகிறதா-?" என்றார் நான் "ஆம் ஐயா” என்றேன் 93. "நான் அங்கே தான் பிறந்தேன். என் அப்பா இங்கே கீழே இடத்தை கட்டினார். நான் சுமார் 16-வயதாயிருக்கையில் இங்கே கீழே குடியேறினோம். என் தகப்பனின் மரணத்திற்கு பிறகு, நான் இந்த இடத்தை எடுத்துக் கொண்டேன். என் குடும்பத்தை நான் நடத்தினேன். இங்கே நான் 76 அல்லது 78 வருடங்களாக இருந்து வருகிறேன். நான் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வானத்தை நோக்கிப் பார்த்து கொண்டே இருந்தேன். நான் காடுகள் முழுவதுமாக பார்த்துக் கொண்டேயிருந்தேன். நிலத்தை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தேன். ஆனால் தேவன் என்பதான காரியம் ஒன்றையும் நான் இதுவரை பார்த்ததில்லை,” என்று கூறினார். அதற்கு நான் “சரி, அது மிகவும் பயனற்ற பேச்சாகும்,” என்றேன் 94. அவர், "அதன் காரணமாகத் தான் நீங்கள் எல்லாரும் தவறான மரத்தைப் பார்த்து குரைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்,” என்று கூறினார். 95. நான் "ஆம் ஐயா,” என்றேன். அப்பொழுது ஏதோ ஒன்று சம்பவித்தது. நான் மரத்தை மேல் நோக்கிப் பார்த்தேன், கீழேயும் பார்த்தேன். அங்கே மரத்தில் ஆப்பிள் பழங்கள் இருந்தன. நான் "அந்த ஆப்பிள் பழங்களில் ஒன்றை நான் எடுத்து சாப்பிடட்டுமா, உங்களுக்கு ஆட்சேபனை எதுவும் உண்டா-? என்றேன்.” 96. "தாராளமாக சாப்பிடுங்கள், மஞ்சள் குளவிகள் தான் அவைகளை தின்கின்றன,” என்றார். மஞ்சள் குளவிகள், என்னவென்று உங்களுக்குத் தெரியும் என்று நான் நிச்சயிக்கிறேன். 97. ஆகவே நான் கீழே குனிந்தேன். அங்கே இருந்த ஆப்பிள் பழங்களில் ஒன்றை நான் எடுத்தேன். என் கால் சட்டையில் அதை துடைத்தேன். அந்த ஆப்பிள் பழத்தில் ஒரு துண்டை கடித்து சாப்பிட்டேன். "இது அருமையான ஆப்பிள்,” என்றேன். அவர்,"ஆமாம், அது மிக அருமையான ஒன்றாகும்” என்றார். "அந்த மரத்தின் வயது என்ன-?” என்று கேட்டேன். 98. அதற்கு அவர் "நான் தான் அதை அங்கே நட்டேன். சுமார் 47, 48 வருடங்கள் என்பதாக இருக்கும்,” என்றார். மேலும் அவர் “நான் அதை ஒரு மிகச் சிறிய துளிர் விட்ட செடியாக நட்டேன். நான் அதை அங்கே தூரத்திலிருந்து எடுத்து இங்கே அதைக் கொண்டு வந்து நட்டேன்” என்று கூறினார். நான் "சரி ஐயா,” என்றேன். மேலும் நான் "அது ஒவ்வொரு வருடமும் ஆப்பிள் பழம் ஈனுகிறதா-?” என்றேன். 99. "ஒவ்வொரு வருடமும் அருமையான பழங்களை அது தருகிறது. அங்கே நிறைய ஆப்பிள் பழங்களை நாம் எடுக்கலாம்,” என்று கூறினார். 100. அப்பொழுது நான் “ஆம், அது அருமையானது. அதைக் கேட்பதில் எனக்கு மகிழ்ச்சி,” என்றேன். மேலும் நான் “உங்களுக்கு தெரியுமா, இதோ இப்பொழுது ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி ஆகின்றது. நிழலில் இருக்கும் போதும் கூட எல்லா நேரத்திலும் வெப்பம் 90-ஆக இருக்கின்றது. ஆனாலும் மரத்திலிருந்து இலைகள் எல்லாம் விழுகின்றனவே இது சற்று விசித்திரமாக உள்ளதல்லவா, இன்னுமாக மூடு பனி கூட வரவேயில்லை,” என்று கூறினேன். 101. அதற்கு அவர், "ஓ, அதுவா. மரத்தின் உயிர்ச்சத்தானது வேரிற்குள் சென்று விட்டது,” என்று கூறினார். நான் "ஓ, அது தான் காரியமா-?” என்றேன். அவர் “ஆமாம்,” என்றார். நான் "அப்படியானால் ஏன் அது வேரிற்கு திரும்பச் செல்கின்றது," என்றேன் 102. அவர், "ஆம் அது மரத்தின் மேலே இருக்குமானால், குளிர் காலமானது அதைக் கொன்று விடும்,” என்று கூறினார். "எதைக் கொன்று விடும்-?” என்று கேட்டேன். 103. அவர், “மரத்தைக் கொன்று விடும். அந்த உயிர்ச்சத்தில் இருக்கும் ஜீவனின் அணுவானது கீழே சென்று வேர்களில் மறைந்து கொள்கிறது,” என்று கூறினார். நான் "ஓ, இப்பொழுது அது தானே... அதைக் குறித்து,”... என்றேன். அவர், "ஆம், அது ஒன்றும் வழக்கத்துக்கு மாறான, அசாதாரணமான காரியம் அல்ல,” என்றார். அப்பொழுது நான் "இல்லை, இல்லை அது இயற்கையின் செயல்பாடு தான்,” என்றேன். 104. அவர் "உங்களுக்கு தெரியுமா, நான் உங்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். நீங்கள் கடந்து செல்லும் முன்னர் நான் உங்களிடம் இதைக் கூற விரும்புகிறேன். நான் ஒரு சமயம் ஒரு பிரசங்கி குறித்து கேள்விப்பட்டேன். அவர் பேசுவதை மறுபடியும் கேட்க எனக்கு விருப்பம். அவர் மறுபடியுமாக இந்த பிரதேசத்திற்கு வருவாரானால், அவர் பேசுவதைக் கேட்க நான் விரும்புகிறேன்,” என்று கூறினார். நான் ஓ-? அது அருமையானது,” என்று கூறினேன். 105. அவர் "அவர் இங்கே ஆக்டனில் வந்திருந்தார். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அங்கே இருக்கிற மெதோடிஸ்ட் பேர்கிரவுண்ட்ஸில் ஒரு கன்வென்ஷன் கூட்டம் நடந்து. அந்த மெதொடிஸ்ட் காம்ப்கிரவுண்ட்ஸில் நடந்தது,” என்றார். 106. அப்பொழுது பாங்க்ஸ் என்னைப் பார்த்தார். நான் பாங்க்ஸ் இடமாகத் திரும்பினேன், நான்... அது சகோ.பாங்க்ஸ் உட். நான் கூறினேன்... 107. மேலும் அவர் "அந்த மனிதனின் பெயரை மறந்து விட்டேன். அவர் 'இதற்கு முன்னர் இந்த பிரதேசத்திற்கு வந்தது கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா, ஒரு வயதான பெண், அங்கே மலையின் மேல் சுமார் ஒரு மையில் தூரத்தில் வசிக்கின்ற அவள், அவள் புற்று நோயால் மரித்துக் கொண்டிருந்தாள், 120 மைல் தூரத்தில் உள்ள லூயிவிலுக்கு அவளை கொண்டு சென்றனர். அங்கே மருத்துவர்கள் அவளுக்கு அறுவை சிகிச்சையின் போது சரீரத்தை திறந்து பார்த்தார்கள். அங்கே அவளுடைய வயிறு முழுவதுமாக, குடல்கள் முழுவதுமாக புற்று நோயால் சுற்றப்பட்டிருந்தது. அவர்களால் ஒன்றுமே அவளுக்கு செய்யக் கூடாமல் போயிற்று. ஆகவே அவர்கள் அவளுக்கு தையலிட்டு திரும்ப கொண்டு வந்து விட்டார்கள். நானும் என் மனைவியும் தினமும் அங்கே மேலே சென்று பார்ப்போம். அவர்களால் இனி மேலுமாக அவளை தூக்கி உட்கார வைக்க முடியவில்லை. அவளுக்கு அடியில் ஒரு துணியை வைத்திருப்பார்கள். அதை நாங்கள் இழுத்து, பிறகு புதிய படுக்கைத் துணியை வைப்போம். அநேக வாரங்களாக நாங்கள் அங்கே சென்று வந்தோம்,” என்று கூறினார். அவள் எந்த ஒரு இரவிலும் அல்லது எந்த நேரத்திலும் மரிக்கக் கூடும் என்று, சென்று பார்த்து வந்தார். மேலும் அவர், அவளுடைய சகோதரி அங்கே பின்னால் இருக்கின்ற இன்னொரு மலைகளுக்கு இடையே ஓடுகின்ற சிறு நதிக்கிளை அருகில் வசிக்கின்-றாள்,” என்றார். அது அங்கே கீழே இருக்கின்றது; அது ஒரு சாலை அல்ல, ஒரு நதிக்கிளை ஆகும். "அங்கே இன்னொரு நதிக்கிளையில் அருகில் இருக்கின்றாள்,” என்று கூறினார். 108. அப்பொழுது யாரோ ஒருவர் சிரிக்கும் சத்தம் கேட்டது. அது இங்கே இருந்த கெண்டக்கியினரின் சத்தமாக இருந்தது. அங்கே... ஆம், அங்கே இருக்கின்ற லிட்டில் ரென்னிக்ஸ் என்று அவர்கள் அழைக்கின்ற அந்த இடத்தில் தான் நான் பிறந்தேன். என் தாத்தா அங்கே பம்ஷெல் என்ற இடத்தில் சென்று முடிவுறுகின்ற பிக்ரென்னிக்ஸில் வாழ்ந்தார். பம்ஷெல் நதிக்கிளையானது நேராக லிட்டில் ரென்னிக்ஸில் ஓடி, அங்கே கீழே கேஸிஃபோர்க் என்ற இடத்திற்கு சென்று அங்கே உள்ள கம்பர்லாண்ட் நதியில் சென்று கலக்கும். இப்பொழுது அது க்ரீன் ப்ரையர் ரிட்ஜ்க்கு அப்பால் இருக்கின்றது. அங்கே தான் என் தாயார் பிறந்தார். அங்கே க்ரீன் ப்ரையர்-ரிட்ஜ்ல் பிறந்தார். 109. மேலும் அவர், "இந்த பெண் அங்கே இன்னொரு இடத்தில் இருக்கின்றார். அது இங்கிருந்து சுமார் 20-மைல் தொலைவிலுள்ளது. அவள் அந்த இரவு கூட்டத்திற்கு வந்தாள். அங்கே அந்த கூட்டம் நடந்த காம்ப்கிரவுண்டில் மிகவும் பின்னாலே உட்கார்ந்திருந்தாள்” என்றார். மேலும் அவர், "இந்த பிரசங்கி, வியாதியஸ்தருக்காக ஜெபிக்கின்ற அவர் அங்கே மேலே இருந்து, மக்களிடமாக அவர்கள் யார் என்றும் அவர்களைக் குறித்தும் கூறிக் கொண்டிருந்தார்,” என்றார். 110. "இந்த பெண் மிக தாமதமாக வந்தாள், அவர்கள் கூட்டத்தினருக்கு அளித்துக் கொண்டிருந்த அந்த அட்டைகளில் ஒன்று இவளுக்கு கிடைக்கவில்லை” என்றார். 111. மேலும் அவர் "அப்பொழுது அந்த பிரசங்கி அவளை நோக்கித் திரும்பி, அவளிடமாக, இதோ பார், அங்கே பின் பகுதியில் உட்கார்ந்திருக்கும் அந்த பெண், இன்ன - இன்னது உங்கள் பெயராகும். நீங்கள் வீட்டை விட்டு புறப்படும்போது. உங்கள் சட்டைப் பையில் ஒரு சிறிய கைக்குட்டையை வைத்தீர்கள். அந்த கைக்குட்டையின் ஓரத்தில் ஒரு நீல நிற உருவம் இருக்கின்றது. இன்னார், இன்னார் என பெயரிடப்பட்டுள்ள ஒரு சகோதரி உங்களுக்கு இருக்கிறாள். அவள் வயிறு புற்று நோயால் மரித்துக் கொண்டிருக்கிறாள். இப்பொழுது நான் அதை ஒரு தரிசனத்தில் கண்டேன். இப்பொழுது, அந்த கைக்குட்டையை எடுத்துக் சென்று அவளில் மீது வையுங்கள். கர்த்தர் உரைக்கிறதாவது அவள் சுகமடைவாள் என்று அவர் அவளிடமாகக் கூறினாள்” என்றார். 112. அவர், "அதன் பிறகு அந்த பெண்... அப்பொழுது சுமார் நடு ஜாமத்தில், அந்த இரவு அங்கே மலையின் மீது மிகவும் பயங்கரமான ஒரு சத்தத்தைக் கேட்டோம். ஓ, சால்வேஷன் ஆர்மி ஸ்தாபனத்தினர் மேலே சென்றனரா என்று நான் நினைத்தேன். ஓ அந்த வயதான பெண் மரித்து விட்டிருப்பாள் என்று நாங்கள் நினைத்தோம்,” என்றார். 113. மேலும் அவர் "என்ன நடந்தது தெரியுமா-? நானும் என் மனைவியும் அடுத்த நாள் அந்த மலையின் மீது சென்றோம். அதிகாலையில் அவர்களுக்கு ஏதாவது ஆறுதலாக இருக்க முடியுமா என்று பார்க்கலாம் என்று சென்றோம். நாங்கள் சென்றபோது அவள் அங்கே மேசையின் அருகில் காபி தயாரிக்கும் பாத்திரத்துடன் உட்கார்ந்திருந்தாள். காபியை ஊற்றிக் கொண்டிருந்தாள். அவளும் அவள் கணவரும் காலை ஆகாரத்திற்காக ஹால்ஃப் மூன் ஆப்பிள் ஃப்ரை, காபியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்” என்றார். அப்பொழுது நான்... 114. ஹால்ஃப் மூன் ஆப்பிள் ஃப்ரை என்றால் என்ன என்று எத்தனைப் பேருக்கு தெரியும்-? உங்களுக்கு தெரியும், இப்பொழுது நான் வீட்டில் இருக்கிறேன். அது எப்படி... எனக்கு அது மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அதன் மேல் சோள சர்க்கரைப் பாகை ஊற்றி சாப்பிட எனக்கு மிகவும் பிடிக்கும். நான் இந்த இடத்தில் சோள சர்க்கரைப் பாகு கிடைக்குமா என்று முழுவதுமாக தேடிப் பார்த்தேன். ஆகவே நான் இங்கே மறுபடியும் திரும்ப வருவேனானால், ஒரு பக்கெட் நிரம்ப சோள சர்க்கரைப் பாகை என்னுடன் கொண்டு வரப்போகிறேன். ஏனென்றால் அது இல்லாமல் என்னால் இருக்க முடியவிலை. உங்களுக்கு தெரியுமா, நான் ஒரு விதமான பாப்டிஸ்டாக இருப்பதால் நான் அதை அதிகமாக உபயோகிக்கிறேன். அந்த கேக்குகளின் மீது வெறுமனே அதை தெளிப்பதில் எனக்கு விருப்பவில்லை. நான் அவைகளின் மீது தாராளமாக ஊற்றி மூழ்கி ஞானஸ்நானம் கொடுத்து விடுவேன். ஆகவே நான்... அவைகளின் மீது சர்க்கரைப் பாகை மிக அதிகமாக ஊற்றுவேன். ஆகவே மேலும் அவர் "அவள் அதை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்,” என்றார். நான் கூறினேன்... "இது தான் சமயம்” என்று எண்ணினேன். அப்பொழுது நான் "சரி, அது உண்மை என்று நினைக்கிறீர்களா-? என்றேன். 115. அதற்கு அவர் "உம், நீங்களே அங்கே மேலே சென்று பார்த்துக் கொள்ளுங்கள். அந்த சம்பவம் நடந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது,” என்றார். மேலும் அவர் "இப்பொழுது அவள் தன்னுடைய சொந்த பணிகளை அவளே செய்து கொள்கிறாள்; அவளுடைய பக்கத்து வீட்டாரின் வேலையையும் அவள் செய்கின்றாள்,” என்று கூறினார். பாருங்கள். அவர் எனக்கு பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். 116. "மாட்டிற்கு போதுமான கயிற்றை விட்டுவிடு, அது தானாகவே சிக்கிக் கொள்ளும்,” என்று என் அம்மா கூறுவது வழக்கம் என்று உங்களுக்கு தெரியும். அது சரியானது தான். அவர் அங்கே மேலே சென்று பாருங்கள்," என்று கூறின போது, அந்த நேரத்தில் அவர் தன் சொந்த வாயைக் கொண்டே சிக்கினார். 117. நான் "இப்பொழுது, ஐயா சற்று கவனியுங்கள். மருத்துவர்கள் அந்த பெண்ணின் உடலை அறுத்து பிரித்து பார்த்த போது அவளுக்கு புற்று நோய் உள்ளது என்று கண்டறிந்து உண்மை தான் என்று நீங்கள் கூற விழைகிறீர்களா,” என்று கேட்டேன். "அது உண்மையே” 118. அப்பொழுது நான் "பிறகு அவளுக்கு தையல் போட்டு தைத்து மூடினார்களா-? அப்படியானால் இங்கிருந்து 15 மைல்கள் தூரத்திலிருந்த அந்த மனிதன் அந்த ஸ்திரீயைப் பார்த்து, இவளின் மீது கைக்குட்டையை வைத்தால் என்ன நடக்கும் என்று சரியாகக் கூறினான் என்கிறீர்களா-? அப்படிச் செய்த போது இந்த பெண் புற்று நோயை மேற்கொண்டாளா-?” என்று கேட்டேன். அதற்கு அவர்,"நீங்கள் அங்கே மேலே ஏறிச் சென்று பாருங்கள். அங்கே எப்படி சென்றடைவது என்று நான் உங்களுக்கு கூறுகிறேன்” என்றார். 119. நான் "அப்படி இல்லை. நீங்கள் கூறுவதை நான் நம்புகிறேன. நீங்கள் கூறினதை நம்புகிறேன். ஆம், ஐயா, ஆம்,” என்றேன். 120. அந்த நேரத்தில், நான் இந்த ஆப்பிள் பழத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதை நான் மென்றுக் கொண்டிருந்தேன். நான் “இது மிகவும் அருமையான ஒரு ஆப்பிள் பழம்,” என்றேன். மேலும் நான், "உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்பு-கிறேன். அந்த மரத்தின் உயிர்ச்சத்தானது மரத்தை விட்டு கீழே வேர்களுக்குள்ளாக போகும்படிக்குச் செய்தது எது?” என்று கேட்டேன். 121. அவர் “என்ன, குளிர் காலத்தில் அதன் ஜீவன் கெட்டுப் போகாமல் காக்க அவ்வாறு அது செய்கிறது,” என்றார். 122. நான், "அடுத்ததாக வருகின்ற வசந்த காலத்தில் அது திரும்பவும் வருகின்றது. இன்னும் அநேக ஆப்பிள் பழங்களை அது உங்களுக்கு தருகின்றது. அப்படித் தானே,” என்றேன். "அது சரியே”. 123. அப்பொழுது நான் "இப்பொழுது நான் உங்களிடமாக ஒன்றை கேட்க விரும்புகிறேன். அந்த மரத்தின் உயிர்ச்சத்தை நோக்கி "இதோ இலையுதிர் காலம் வந்திருக்கின்றது. நீ கீழே போய் மரத்தின் வேர்களில் ஒளிந்து கொள். அப்படி நீ செய்யவில்லையெனில், குளிர் காலமானது உன்னை கொன்று விடும். கீழே மரத்தின் வேருக்கு சென்று விடு. வசந்த காலம் வரும் வரைக்குமாக அங்கேயே இரு. வசந்த காலம் வந்து சிறிது உஷ்ணம் வந்து எல்லாவற்றையும் சரி செய்யும் போது, அப்பொழுது நீ மேலே வா, வந்து இந்த நபருக்கு இன்னும் அதிக ஆப்பிள் பழங்களைக் கொடு,” என்று அதனிடம் கூறுகின்ற ஞானமானது என்ன-? இப்பொழுது நீங்கள் தாவரங்களைப் பார்க்கும் போது, தனக்கென சொந்த ஞானத்தை அவை பெற்றி இருக்கவில்லை. அப்படியானால், அந்த மரத்தின் வேரிற்குள்ளாக அந்த உயிர்ச்சத்தை செல் என்று கூறி அனுப்புகின்ற அந்த ஞானத்தைக் குறித்து எனக்கு சொல்லுங்கள். அந்த மரம் தனக்கென ஒரு ஞானத்தை அது கொண்டு இருப்பது இல்லை.” என்றேன். அதற்கு அவர் “அது வெறும் இயற்கை தான்,” என்று கூறினார். 124. நான் "அப்படியானால், ஒரு வாளி நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள், அதை எடுத்து அங்கே இருக்கின்ற அந்த கம்பத்தின் மீது வைத்து விடுங்கள். இலையுதிர் காலம் வரும் போது இயற்கை அந்த தண்ணீரை கீழே போகும்படிக்குச் செய்து வசந்த காலத்தில் அதை மறுபடியுமாக வரும்படிக்குச் செய்கிறதா என்று சற்று பாருங்கள். பாருங்கள்-? அப்படி செய்யாது ஐயா, அப்படியானால் அது என்ன-?” என்று கூறினேன். 125. இப்பொழுது, நாம் சற்று இதை பார்ப்போம். அது தேவனால் அருளப்பட்ட ஒரு வழியாகும். தேவன் அதற்கென்று அளித்துள்ள வழியில் மாத்திரம் தான் அது கிரியை செய்யும். ஒரு சிறு சத்தமானது, "கீழே வேர்களுக்குள் செல்” என்று கூறுகின்றது. உடனே அது கீழே சென்று விடுகின்றது. இப்பொழுது, அது எந்த ஒரு யோசனையும் செய்து பார்க்காமல் அப்படியே செய்கின்றது. அதே தேவன் நம்மிடமாக பேசும்போது நாம் என்ன செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம்-? நாம், ஒன்று அதை மறுக்கவோ அல்லது அதை ஏற்றுக் கொள்ளவோ நமக்கு அதிகாரம் இருக்கின்றது. ஆனால் அதிகமாக நாம் மறுக்கத் தான் செய்கின்றோம். மரத்தினால் மறுக்க முடியாது. அந்த மரமானது வழக்கமாக செய்கின்ற ஒரு காரியத்தை மட்டுமே அறியும், அது தன் எஜமானனுக்கு கீழ்ப்படிவது தான். அப்பொழுது அவர், உம், அதைக்குறித்து நான் இதற்கு முன்னர் யோசித்துப் பார்த்ததே இல்லை,” என்றார். 126. நான் "அது என்ன என்று நான் உங்களுக்கு கூறுகிறேன். நாங்கள் சென்று வேட்டையாடுகையில் நீங்கள் அதைக் குறித்து சற்று நேரம் எடுத்து யோசித்துப் பாருங்கள். நான் திரும்ப வருகையில், அது என்ன என்று நீங்கள் எனக்கு கூறுங்கள். மரத்தின் உயிர்ச்சாத்தை நோக்கி நீ வேர்களுக்குள்ளாக சென்று குளிர் காலத்தில் அங்கே இருந்து பிறகு அடுத்த வசந்த காலத்தில் நீ திரும்பி வா என்று எது கூறுகின்றது. இப்பொழுது நான் உங்களுக்கு கூறுகிறேன். அந்த அதே ஞானம் தான் என்னிடமாக, 'நீ போய் கைக்குட்டையை அந்த பெண்ணின் மீது வை அப்பொழுது அவள் குணமாக்கப்படுவாள், என்று கூறினது,” என்று கூறினேன். அதற்கு அவர், “என்ன, உங்களிடம் கூறினதா-?” என்றார். 127. நான் "ஆம் ஐயா,” என்றேன், மேலும் நான் "அந்த மனிதனின் பெயர் என்ன-? உங்களுக்கு அது நினைவிருக்கிறதா-?” என்று கேட்டேன். அதற்கு அவர், "எனக்கு அது ஞாபகம் வரவில்லையே,” என்றார். நான் "அது பிரான்ஹாம் தானே-?” என்றேன். அதற்கு அவர், "அந்த பெயர் தான்,” என்றார். "நான் தான் சகோத.பிரன்ஹாம்,” என்று கூறினேன். 128. அந்த இடத்திலேயே அவர் எழுந்து என் கரங்களை பிடித்துக் கொண்டார். அவர் “நீங்கள் என்ன கூற விழைந்தீர்கள் என்று நான் என் வாழ்க்கையில் முதல் முதலாக கண்டு கொண்டேன்,” என்றார். நான் அவரை கிறிஸ்துவினிடமாக நடத்தினேன். 129. கடந்த வருடம் நான் அங்கே சென்றிருந்தேன். அவர் ஜீவியம் முடிவுற்று கடந்து போனார். தேவனுடைய இரக்கங்கள்-! அந்த அதே மரத்தின் கீழ் அவருடைய மனைவி உட்கார்ந்து ஆப்பிள் பழங்களின் தோலை உரித்துக் கொண்டு இருந்தார்கள். நான் அவர்களிடமாக நடந்து சென்று “நான் இங்கே வேட்டையாடலாமா-?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நாங்கள் வேட்டையாட அனுமதிப்பதில்லை,” என்றார்கள். 130. அப்பொழுது நான், "என்னை மன்னியுங்கள். எனக்கு அனுமதி உண்டு என்று நான் நினைத்திருந்தேன்,” என்று நான் - நான் - நான் கூறினேன். "யாரிடமிருந்து நீங்கள் அனுமதியைப்பெற்றீர்கள்-?” என்று அப்பெண் கேட்டாள். "உங்கள் கணவரிடமிருந்து” என்று கூறினேன். அதற்கு அவர்கள், "என் கணவர் இறந்து விட்டார்,” என்றார்கள். "சமீபத்தில் தான் இறந்தாரா-? அப்படித் தானே என்றேன். "ஆம், ஆனால் அவர் மக்கள் வேட்டையாட அனுமதி கொடுத்ததில்லை,” என்றாள். 131. நான், “கடந்த ஆண்டு நான் இங்கே வந்திருந்த போது இங்கே இந்த ஆப்பிள் மரத்தின் கீழே இருந்த போது, நாங்கள் இந்த மரத்தைக் குறித்து பேசிக் கொண்டு இருந்தோம்,” என்று கூறினேன். அவள் “நீங்கள் தான் சகோ.பிரன்ஹாமா-?” என்று கேட்டாள். நான் “ஆம்” என்றேன். 132. அவள் வைத்திருந்த ஆப்பிள் பாத்திரத்தை கீழே போட்டாள். அவள், “சகோதரன் பிரன்ஹாம், அவர் தன் கடைசி சாட்சியாக, இயேசு கிறிஸ்துவின் வெற்றியாக அவர் இறந்தார்,” என்று கூறினார். 133. அது என்ன-? அதை அப்படியே பார்த்தல் மாத்திரமே, அது எப்படி சம்பவிக்கின்றது என்று அதன் காரியத்தை எல்லாம் கணக்கு போட்டு காண முயற்சி செய்து கொண்டே இருத்தல் அல்ல. ஆனால் ஒரு எளிய சிறிய காரியம், தேவன் ஒரு வழியை அருளுவதையும் அதை ஒன்று காத்து நடந்து கொள்வ-தையும் கவனிப்பதாகும். பாருங்கள், அந்த அதே ஞானமானது ஒரு அமைதியான மரத்திடம், "கீழே செல். உன் ஜீவன் காக்க அங்கே சென்று மறைந்து கொள்,” என்று கூறுமானால், அந்த அதே ஞானமானது எதுவென்றால், அந்த பெண்ணைக் குறித்த தரிசனத்தை காண்பித்த அவரே, அவர் தாமே ஆகும். அவர் உடனே அதை கிரகித்துக் கொண்டார். அந்த இரண்டில் ஒன்றையும் கூட அவரால் இல்லை என்று மறுக்க முடியவில்லை. இங்கே அந்த மரம் இருந்தது. அங்கே அந்த பெண் இருந்தாள். ஆமென். பாருங்கள், தேவனால் அருளப்பட்ட வழி-! 134. ஒரு கோழி குஞ்சு முட்டையை கொத்தி உடைத்து வெளி வருவதைத் தவிர வேறு ஒரு சிறந்த வழியை அந்த கோழி குஞ்சுக்கு இதுவரை அவர்களால் கண்டறியப்படவில்லை. வேறே எந்த ஒரு சிறந்த வழியையும் அவர்களுக்கு இல்லை. விஞ்ஞானத்தால் இது வரைக்கும் எந்த வழியையும் உண்டாக்க முடியவில்லை. நீங்கள் அந்த முட்டையை எடுத்து அதை உடைத்து அக்குஞ்சை வெளியே எடுத்தால், அது அக்குஞ்சை கொன்றுவிடும். அது மரித்து விடும். அது உயிர் வாழ வேண்டுமானால், தேவன் அதற்கென அளித்துள்ள வழியை அது பின்பற்ற வேண்டும். ஆமென். அது மானிடருக்கும் கூட அவ்விதமாகத் தான் கிரியை செய்கின்றது. 135. அதைச் செய்வதற்கு ஆற்றலை அக்குஞ்சு பெற்றிருக்கிறது. அந்த சிறு கோழி குஞ்சானது முட்டை ஓட்டிலிருந்து வெளியே வருவதை நீங்கள் பார்த்ததுண்டா-? அது தன் அலகின் மேல் பகுதியில் முட்டை ஓட்டை சிராய்த்து உடைக்க ஒரு சிறு வெள்ளை நிற அமைப்பானது உள்ளது. அதில் உள்ளே இருக்கின்ற அந்த சிறிய குஞ்சானது, ஜீவன் அதற்குள்ளாக வரத் துவங்கும் போது, அது தன் சிறு தலையை மேலும் கீழும் அசைக்க ஆரம்பிக்கின்றது. அது என்ன செய்கின்றது. அதன் அலகின் மேல் இருக்கின்ற அந்த சிறு பாகமானது முட்டை ஓட்டை சிராய்த்து தேய்த்து அந்த ஓடானது மெலியும் வரைக்குமாக சிராய்த்து கொத்துகிறது. அதற்குள்ளாக இன்னும் அதிக ஜீவன் வரும் போது இன்னும் அதிகமாக அது ஓட்டை கொத்துகின்றது. அது முட்டை ஓட்டிற்கு வெளியே வந்த பிறகு அந்த குஞ்சுக்கு அலகின் மேல் இருக்கும் பாகம் இனி மேல் தேவை இல்லை. அது கிழே விழுகின்றது. 136. அந்த அலகின் மேல் உள்ள பாகம் எதற்கு என்றால், அது அந்த அலகிற்கு ஒரு பாதுகாப்பாக இருக்கின்றது. இல்லையென்றால் அந்த குஞ்சுக்கு சரியான வளர்ச்சி இல்லாத ஒரு அலகு உருவாகிவிடும். அதனால் தானியத்தை எடுத்து சாப்பிட முடியாது. ஓ என்னே-! அது உயிர் 'பிழைப்பதற்கென்று தேவனால் அருளப்பட்ட ஒரு வழி-! அக்குஞ்சு முட்டையிலிருந்து வெளியேற தேவன் அதற்கு ஒரு வழியை அமைக்கின்றார். அதைவிட சிறந்த ஒரு வழி இல்லவே இல்லை. நீங்கள் வேறெதாவது ஒரு வழியை உருவாக்கவோ அல்லது வேறு விதமாகவோ செய்ய முயற்சிப்பீர்களானால் நீங்கள் அக்கோழி குஞ்சை கொன்று விடுவீர்கள். 137. இன்றைக்கு கிறிஸ்தவ சபையில் இருக்கின்ற காரியம் அது தான். அது தேவனுடைய இராஜ்யத்துக்குள்ளாக துடிப்புடனே உந்திச் செல்வதற்கு பதிலாக ஏதோ ஒரு உற்பத்தி செய்யப்பட்ட வழியை ஏற்றுக் கொள்ள அது முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. அது வேறு விதமான ஒரு வழியையும் கைக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. அது வேறு விதமான ஒரு வழியையும் கைக் கொள்ள முயற்சி செய்தது. ஆனால் அது ஒரு போதும் கிரியை செய்யாது. நீங்கள் உங்கள் நோயாளியை கொன்று விடுகிறீர்கள். அதை வேறு விதமாகச் செய்யப்பட முயற்சி செய்யப்படுகிறது. அது ஒரு போதும் கிரியை செய்யாது. தேவனுடைய குழந்தையின் காரியமும் கூட வேறு விதமாக அதைக் கையாள முயல்வீர்களானால், "ஓ, அது வீல் வீல் என்று அழத் தேவையில்லை. அது இந்த விதமாக அந்த விதமான செய்யத்தேவையில்லை.” ஓ... ஆம், ஒரு வழி இருக்கின்றது. “இது அவசியமில்லை (யோவான் 12:241) 138. மரணம் என்பது இல்லாமல் ஒரு பிறப்பும் இருக்காது. மரணம் என்னும் காரியத்தைக் கொண்டு தான் பிறப்பும் வருகின்றது. "கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும்.” அது அழுக வேண்டும். பிறகு அது அழிவிற்குள்ளாக செல்ல வேண்டும். பிறகு அந்த அழிவிலிருந்து ஜீவன் புறப்பட்டு வெளியே வருகின்றது. வேறு எந்த வழியிலும் அது கிரியை செய்யாது. முதலில் அது அழுக வேண்டும் அது, அழுகி அழிவுக்குள்ளாக வேண்டும். அந்த வழியில் தான் நாமும் கூட இருக்க வேண்டும்; நமக்கு நாமே மரித்து பரிசுத்த ஆவியால் மறுபடியும் பிறக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். 139. ஒரு கோழிக்குஞ்சு முட்டையிலிருந்து வெளியே வர, அது முட்டை ஓட்டை கொத்தி உடைத்து தான் வெளியேற வேண்டும், அதைக் காட்டிலும் வேறே ஒரு சிறந்த வழியை அக்குஞ்சிற்கு அவர்களால் கண்டுபி டிக்க முடியவில்லை. அது தான் அந்த கோழி குஞ்சுக்கு தேவனால் அருளப்பட்ட வழியாகும், அதைச் செய்ய அதற்கு உபகரணத்தை அளிக்காமல் தேவன் ஒரு வழியை அளிக்க மாட்டார். ஆகவே அவர் அந்த வழியை அளித்து, அக்குஞ்சு தன் முட்டையிலிருந்து விடுவித்துக் கொள்ள அதற்கான உபகரணத்தையும் அளித்துள்ளார். ஆமென். 140. கவனியுங்கள், வாத்துகளும் பெண் வாத்துகளும் வடக்கிலிருந்து தெற்கு பாகத்திற்கு வருவதற்கு அவை எல்லாமே ஒரு பெருங்கூட்டமாக ஒன்று திரண்டு அதன் பிறகு அவை தெற்கு நோக்கி வரும். அதைத் தவிர வேறே எந்த ஒரு சிறந்த வழியையும் இதுவரை அவர்கள் கண்டு பிடிக்கவில்லை. வேறு எந்த ஒரு வழியும் இல்லை. நீங்கள் பாருங்கள், அவை தெற்கு பகுதிக்கு பறக்கும் முன்னர் அல்லது தெற்கு பகுதியிலிருந்து திரும்பவுமாக வடக்கு நோக்கி பறந்து செல்லும் முன்னர், முதலாவதாக, அவை எல்லாமே பெருங்கூட்டமாக ஒன்று திரளும். அவை தன்னுடைய இருப்பிடங்களையோ அல்லது வீடுகளையோ விட்டு புறப்பட்டு, புதிய வீட்டுக்கு செல்லும் முன்னர், அவையெல்லாம் ஒன்று திரண்டுகூடும். தேனீக்களும் அதே காரியத்தை செய்கின்றன. அவைகளும் ஒன்று திரண்டு ஒன்று கூடுகின்றன. அப்பொழுது வருகின்ற அந்த சத்தத்தை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு போதும் கேட்டிருக்கவே முடியாது. 141. அதே போல நாமும் இந்த இருப்பிடத்தை விட்டு புதியதொரு இருப்பிடத்திற்கு புறப்பட்டு செல்லும் ஒரு எழுப்புதலில் திரண்டு ஒன்று கூட வேண்டும். 142. ஓ, நீங்கள் அந்த வாத்துக்கள் மத்தியில் செல்வீர்களானால், அப்பொழுது நீங்கள் கேட்கின்ற சத்தத்தை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு போதும் கேட்டிருக்க வகையில்லை. அவை எதைக் கொண்டிருக்கின்றன-? ஒரு எழுப்புதலை பெற்று இருக்கின்றன. அவை வானத்திற்கு பறந்து செல்ல தயாராகின்றன. ஆமென். 143. இன்று அது தான் நமக்கு தேவையாயிருக்கிறது. ஒன்று திரண்டு கூடும் எழுப்புதல், வேறு எந்த வழியிலும் இல்லை இருப்பது அல்ல. தேவன் ஒரு போதும் பெரும்பான்மையினரை கணக்கில்; சபை அங்கத்தினராக எடுத்துக் கொள்வதில்லை. அவர் தாம் அளித்துள்ள வழியில் ஒருவன் வைத்துள்ள உத்தமத்தை தான் அவர் கணக்கில் எடுத்துக் கொள்கிறார். 144. இப்பொழுது, அதன் இடத்தை எடுத்துக் கொள்ள வேறு எதையுமே அவர்கள் இது வரை கண்டு பிடிக்கவில்லை. இன்னும் சிறந்த ஒரு வழி இருக்க முடியாது. உதாரணத்திற்கு விஞ்ஞானம் வந்து “பாவம் இந்த பரிதாபத்திற்குரிய சிறிய வாத்துக்கள், அவை இனி மேல் பெருந்திரள் கூட்டமாக கூட வேண்டிய அவசியம் இல்லை. அவை கூட்டமாக கூடுவதற்கு முன்னர் நாம் அவைகளின் மேல் ஒரு வலையை வீசுவோம். பிறகு அவைகளை ஒரு பிரம்பு கூட்டில் அடைத்து, அதை தெற்கு பக்கம் தூக்கிச் செல்வோம்,” என்று கூறினால் எப்படியிருக்கும். 145. அது எப்படி இருக்குமென்றால், அவைகளை ஏதோ ஒரு ஸ்தாபனத்திற்குள்ளோ அல்லது ஏதோ ஒன்றிற்குள்ளோ வழி நடத்தி, ஒரு பட்டியில் அடைத்து வைத்து விடுவது போன்றதாகும். அது என்ன-? அது ஆடு மாடுகளை வெட்டும் இறைச்சி கூடத்திற்கு சென்று கொண்டிடு இருப்பதாகும். அது ஒரு பிரம்புக் கூடையில் அடைக்கப்படும் போது அது இறைச்சி கூடத்திற்கு தான் செல்கின்றது என்று அது அறிந்து கொள்ளும். ஆனால் அது தானே தேவன் அளித்துள்ள வழியில் செல்லுமானால், அப்போது அது இறைச்சிகூட வழியை விட்டு மிகவும் தூரம் அகன்று இருக்கும். ஓ, அதை கூறியிருக்கத் தேவையில்லை. அவ்விதமாக நான் கூற விழையவில்லை, ஒரு ஸ்தாபனத்திற்கு எதிரான ஒரு அவதூறு கூறும் விதமாக நான் கூறவில்லை. ஆனால் நான் என்ன கூற விழைக்கிறேன் என்று உங்களுக்கு கூறுகிறேன். ஒரு வேளை அது தாமே... 146. அதை அந்த வழியில் செய்யக் கூடாது. நீங்கள் ஒரு ஸ்தாபனத்திற்குள்ளே ஓடிச் சென்று உங்களை ஒரு பிரம்பு கூடையில், பட்டியில் அடைத்துக் கொண்டு “நான் மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், அல்லது ஏதோ ஒன்று.” என்று கூறக் கூடாது. அது அப்படியல்ல. இல்லை. இல்லை. 147. நீங்கள் பெருந்திரளாக ஒன்று கூடி வர வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். அது சரியே. நீங்கள் தாமே கொத்தி கொத்தி வெளியே வருகின்ற ஒரு நிலைக்கு வரவேண்டியவர்களாக இருக்கிறீர்கள். 148. இவைகள் தாமே, அவைகள் ஒன்று சேர்ந்து இந்த பிரம்புக் கூடைக்குள்ளாக, பட்டிக்குள்ளாக செல்கின்றன. மேலும் - மேலும் அவை... அப்படியாக அந்த பட்டிக்குள் செல்லுமானால், அவைகள் இறைச்சி வெட்டும் கூடத்திற்கு செல்கின்றன என்பதை அவை அறிந்து கொள்ளும். 149. ஆனால். இப்பொழுது, நீங்கள் அவை எல்லாவற்றையும் ஒரு கூண்டிற்குள்ளாக ஓட்டி, அவைகளை அடைத்து நேராக தெற்கு பிரதேசத்துக்கு கொண்டு சென்று, அந்த கூண்டை திறந்து ஆயத்தமாகும் போது, அவர்கள் அவைகளின் மீது ஒரு வலையை போடுகின்றனர். "அற்புதங்களின் நாட்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.” பாருங்கள்-? "சிறிய வாத்துகளே, உங்களால் இனிமேல் பறக்க முடியாது. அது வேறொரு காலத்திற்குரிய வாத்துகளுக்கு தான் பொருந்தும்: தேவன் ஒரு வாத்தை எவ்வளவு காலமாக உண்டாக்குகிறாரோ, அவர் அதை அதே விதமாகத் தான் உண்டாக்குகின்றார். அந்த வாத்து செல்லும்படியாக தேவன் ஒரு வழியை உண்டாக்குவாரானால், அந்த வழியில் தான் எல்லா வாத்துகளும் செல்லும். 150. அவ்விதம் செய்வதால் என்ன ஆகும் தெரியுமா-? முடிவில் அந்த வாத்தை அது கொன்று போடும். அது மிகவுமாக மிருதுவாய்ந்ததாக மாறி அதற்கு இறக்கைகளே சரியாக முளைக்காது. அதனால் இனி மேல் பறக்கவே முடியாது. கொல்லை புறத்தில் இருக்கின்ற அதன் தொலைத்தூர உறவின வாத்து இனத்தைப் போன்றே மாறிவிடும். அதற்கு வயிறு மட்டும் தான் பெரிதாக இருக்கும், ஒரு வாத்தாக அது இருக்காது. பாருங்கள்-? அந்த வாத்திற்கு உயர எழும்ப சிறகுகளே இல்லாமல் போகும். அது சரி. பாருங்கள்-? கொல்லைப்புறத்தில் இருக்கின்ற தன் தூரத்து சொந்தம் போல, எங்குமே செல்லாமல் இருக்கின்ற தன் ஸ்தாபன சகோதரரைப் போல இதுவும் மிகவும் மிருதுவானதாக மாறிவிடும். பாருங்கள்-? அது சரி. பாருங்கள்-? அது சரி. அப்படித்தான் அது இருக்கும், மிருதுவான ஒரு வாத்தாக இருக்கும். சுதந்திரமாக பறப்பது என்பதைக் குறித்து அதற்கு ஒன்றுமே தெரியாது. ஆமென். 151. அது தான் இன்றைக்கு இருக்கின்ற காரியமாகும். நாம் அவை எல்லாவற்றையும் ஒரு பட்டிக்குள்ளாக அடைத்து அவைகளிடம், "அற்புதங்களின் நாட்கள் கடந்து போய் விட்டது” என்று கூற முயற்சிக்கின்றோம். அது தன் பாதத்தின் கீழ் இருக்கின்ற நிலத்தை விட்டு மேலே எழும்புவதற்கு கூட தன் மேல் நம்பிக்கை வைப்பதில்லை. அப்படிப்பட்டதான ஒரு நிலை அதனைக் கொன்று விடும். அது நீண்ட காலம் வாழாது. 152. ஆனால், உங்களுக்கு தெரியுமா, அந்த சிறிய வாத்தானது. அதனால் பதில் பேச முடியுமானால், "இல்லை, என்னால் வர முடியாது, நன்றி,” என்று கூறி விடும். 153. "ஓ, அது மிகவும் சுலபமான ஒன்றாகும். நீ ஒன்றும் செய்யத் தேவையில்லை. உன் விருப்பம் போல நடந்து கொள்ளலாம்.” 154. அதற்கு அந்த வாத்து “உங்களுக்கு நன்றி, நான் விரும்பும் வகையில் தான் நடந்து கொள்கிறேன். ஏனென்றால் எனக்குள்ளாக ஏதோ ஒன்று அசைந்து முன் செல்கின்றது. ஆமென். நான் விரும்பும் விதத்தில் செயல்பட வேண்டும்,” என்று கூறும். ஆகவே தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒவ்வொரு மனிதனும், அவனுக்குள்ளாக ஏதோ ஒன்று உந்தித் தள்ளி அசைகின்றது. அவன் வானத்திற்- குள்ளாகபறந்து செல்ல வேண்டி இருக்கின்றான். ஏதோ ஒரு உணர்ச்சி, ஏதோ வேறொன்று அதை அதற்கு உண்மையானதாக, தத்ரூபமானதாக ஆக்குகின்றது. 155. அந்த சிறிய வாத்து முடிவாக ஒரு கோழியைப் போல, வீட்டுச் சூழலில் பழுக்குவிக்கப்பட்ட ஒரு பறவையைப் போல ஆகிவிடுகிறது. இனிமேல் அதனால் தன் பாதத்தை உயர்த்தி மேலே செல்ல முடியவே முடியாது. அந்த சிறிய வாத்தானது உயரத்தில் தொடர்ந்து பறக்க எத்தனிக்குமானால் அதனால் முடியும். பாருங்கள். அதனால் அப்படி செய்ய முடியும். அதனால் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு திசைக்குச் செல் முடியும், சென்று காரியங்களைப் பார்க்க முடியும். 156. இன்னொரு காரியம் என்னவென்றால், நீங்கள் பாருங்கள், அந்த வாத்தினால் அது சென்றடைய வேண்டிய இடத்தைச் சென்றடையாது. ஏனென்றால், அது கனடா தேசத்திற்கு செல்லும் வழியில் அது பலவிதமான காரியங்களை சாப்பிடுகின்றது. அதை நீங்கள் ஒரு கூண்டிற்குள் அடைத்து வைத்தால் அப்படிப்பட்ட உணவை அதனால் பெறவே முடியாது. கூண்டில் எல்லா நேரத்திலும் சோளம் மட்டுமே தீனியாக தரப்படும். உங்களுக்கு நான் கூறும் உள்ளர்த்தத்தை காண முடிகின்றதா-? நீங்கள் அதை உள்ளே அடைத்து வைத்து, அப்போஸ்தல பிரமாணம் என்றும் அழைக்கப்படுகின்ற அந்த பிரமாணத்தை தெரிந்து வைத்துக் கொண்டால் போதும் மற்றும் ஞாயிறு பள்ளிக்கு செல்வது எப்படி என்றும் தெரிந்தால் போதும், அங்கே அது மாத்திரம் தான் உள்ளது; பிரசங்கிக்கு சம்பளம் கொடுத்து. அவர் விரும்புகின்ற விதத்தில் வாழ்கின்றார். [யோவான்.14:26) 157. ஆனால், ஓ, நீங்கள் வானத்தில் பறக்கையில், ஆமென். நீங்கள் வானத்தில் பறக்கையில், ஸ்தாபன பிரமாணத்தைக் காட்டிலும் இன்னும் அதிகமானதை உங்களால் பெற முடிகின்றது. நீங்கள் வைட்டமின்கள், ஊட்டசத்தை உங்கள் சரீரத்தை தசைகள் உள்ள, பெலம் பொருந்தியதாகவும், சிறகுகள் உள்ள இறக்கைகளை கொண்டதாகவும் செறிவூட்டுகின்ற ஆவிக்குரிய வைட்டமின்களை, ஊட்டச்சத்துக்களை பெற முடிகின்றது. அது உங்களை அப்படியே மேலே தூக்கி வரவிருக்கின்ற காரியங்களை உங்களுக்கு காண்பிக்கும்படிக்கும் அது செய்யும். பரிசுத்த ஆவியானவர், “பரிசுத்த ஆவியாகிய அவர் வரும் போது, எல்லாவற்றையும் உங்களுக்கு காண்பித்து, நான் உங்களுக்கு சொன்ன இந்த காரியங்களை போதித்து, வரவிருக்கின்ற காரியங்களை உங்களுக்கு காண்பிப்பார்.” ஆமாம். ஆகவே உங்களால் அதை ஒரு கூடையில் அடைத்து வைத்து எடுத்து செல்ல முடியாது. அது ஒரு போதும் கிரியை செய்யாது. நீங்கள் அதை கூடையில் அடைத்து வைத்தால், அதை இறைச்சி வெட்டும் கூடத்திற்கு செல்கின்றது என்பதாகும். 158. மனிதனும் கூட அதற்கான சிறந்த ஒரு வழியை தெரிந்தெடுக்க முடியாது. நீங்கள் சென்று அந்த வாத்தினிடமாக "சற்று கவனி திரு.வாத்து அவர்களே, நான் உனக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். நீ தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறாய். நீ இந்த இடமாக செல்ல வேண்டும், ஆகவே பாதையை மாற்றி செல், இங்கே இருக்கின்ற அந்த கடற்கரை ஓரம் செல், அது சரியான பாதை. நீ தொடர்ந்து செல்லும் வழியைக் காட்டிலும் அது சிறந்த ஒன்றாகும்,” என்று கூற முயற்சிக்கலாம். அது ஒரு போதும் கிரியை செய்யாது. கிரியை செய்யாது. தேவன் அந்த வாத்திற்கென அளித்திருக்கும் ஒரு சிறந்த பாதை, வழியைக் காட்டிலும் அவர்கள் ஒரு சிறந்த ஒன்றை அறிந்திருப்பதாக நினைக்கின்றனர். ஆனால் அவைகள் சரியான வழியை அறிந்திருக்கின்றன. 159. அல்லது, தேவன் அவைகளுக்கு அளித்திருக்கும் தேவனால் அருளப்பட்ட தலைவனைக் காட்டிலும் வேறு ஒரு சிறந்த தலைவனை உங்களால் தெரிந்து எடுக்க முடியுமா-? ஆகவே சபைக்கான வழி நடத்துதலாக பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலின் இடத்தை எடுக்கும்படிக்கு ஒரு பிஷப்பையோ அல்லது ஒரு ஸ்தாபனத்தையோ அல்லது ஏதோ ஒன்றையோ மனிதனால் ஒருபோதும் தெரிந்து எடுக்கவே முடியாது. அதை செய்யவதற்கென வேறு எந்த ஒன்றும் இல்லவே இல்லை. தேவனால் அருளப்பட்ட வழி-! தேவன் அவைகளுக்கு ஒரு வழியை அளித்திருக்கின்றார், ஒரு தலைவனை, ஊக்குவிக்கப்பட்ட தலைவனை அளித்து உள்ளார். 160. அந்த வாத்துகளின் தலைவன் ஊக்குவிப்பட்ட ஒன்றாக இருக்கும். ஆம், நான் அதிகாலை வேட்டைக்கு செல்லும் போது, அதிகாலை வேளையில், மலையின் மேல் ஆட்டுக்காகவோ அல்லது ஏதாவதொன்றிற்காகவோ செல்வேன். மூடு பனி கூட இருக்காது. ஒருக்கால் அங்கே மலையின் மீது உச்சியில் சிறிது உறை பனி மூடியிருக்கும். அந்த குளிர்ந்த காற்றானது மலை முழுவதுமாக கீழுமாக வீசும். அங்கே இயற்கையாகவே வழி நடத்தும் குணாதிசயத்துடன் பிறந்திருக்கின்ற ஒரு தலைவன் அவைகளின் மத்தியில் இருக்கும். அது அந்த ஏரியின் மீது அந்த விதமாக ஓடி, 4 அல்லது 5 முறை காட்டு வாத்திற்குரிய கூச்சலை அது எழுப்பும், உடனே அந்த வாத்து கூட்டம் திரண்டு வரும். ஆம், ஐயா, அவை எல்லாமே அந்த தலைவனை அறிந்திருக்கும். அந்த தலைவன் வாத்து எந்த விதமாக சத்தமிட்டு கூப்பிடுகிறதோ அந்த சத்தம் எப்படியிருக்கும் என்பது அவைகளுக்கு தெரியும், ஓ என்னே-! 161. கடந்து இரவு நான் எதைக் குறித்து பேசிக் கொண்டிருந்தேன் என்று உங்களுக்கு தெரியும், சுவிசேஷ எக்காளம் ஒரு நிச்சயமில்லாத சத்தத்தை அளிக்குமானால், அவருடைய சத்தமானது ஒரு நிச்... அந்த வாத்து நிச்சயமில்லாத ஒரு சத்தத்தை அது பிறப்பிக்காது. அவை எல்லாம் உண்மையான வாத்துக்கள் ஆகும். ஒரு வாத்தின் சத்தத்தை அவை அறிந்திருக்கின்றன. நீங்கள் ஒரு கினிக் கோழியையோ அல்லது ஒரு வான் கோழியை அங்கே வைத்தால் எப்படியிருக்கும்-? அதனுடைய கூப்பிடும் சத்தம் சரியானதாக தொனிக்காது. அவை ஒரு தலைவனின் சத்தத்தை அறிந்துள்ளன. [II தீமோ .3:4-5) 162. ஒரு சபை அதை அறிந்திருக்க வேண்டியதாக இருக்கிறது. "தேவ பக்தியின் வேஷத்தை தரித்து அதன் பலனை மறுதலிக்கிறவர்களாக இருப்பார்கள்”. அப்படிப்பட்டவர்களை வழி நடத்தும்படிக்கு விட அனுமதிக்காதீர்கள். "துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும் தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும்,” பறக்கின்ற அந்த வாத்துக்களை பகைக்கிறவர்-களாயும் இருப்பார்கள். புரிகின்றதா-? நான் என்ன கூற விழைக்கிறேன் என்று உங்களுக்கு புரிகின்றதா-? பாருங்கள்-? (யோவான் 10:27) 163. அவை அந்த சுவிசேஷ சத்தத்தை அறிந்திருக்கின்றன. "என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கின்றன.” (ஒலி நாடாவில் காலியிடம்- ஆசி) "அவைகள் அந்நியனுக்கு பின் செல்லுவதில்லை.” அது சரியே என்று தேவன் எப்போதுமே நிரூபிக்கின்றார். 164. இப்பொழுது கவனியுங்கள். அவை ஒரு போதும் ஒரு... அவைகளுக்கென ஒரு வழியை தெரிந்தெடுக்க உங்களால் முடியாது. நீங்கள் அங்கே சென்று, "ஓ, சிறிய வாத்துக்களே, ஒரு நிமிடம் பொறுங்கள். நீங்கள் தவறாயிருக்கிறீர்கள் என்பது உறுதி. இங்கே ஒரு அருமையான பெரிய ஆண் வாத்து உள்ளது. ஓ அதை உங்கள் மத்தியில் வைத்துப் பார்த்தால் ஒரு அரசனைப் போல காணப்படுகின்றது. நான் என்ன செய்யப் போகிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா-? அதன் தலையின் மீது சிறிது தண்ணீரை நான் ஊற்றப்போகிறேன், நான் அந்த வாத்து புறப்பட்டு செல்லும்படிக்கு ஆரம்ப விழா நடத்தப் போகிறேன். நான் அதனை வாத்து ராஜாவாக ஆக்கப் போகிறேன். நான் அதற்கு கிரீடம் சூட்டப் போகிறேன். அதற்கு சிறிது வித்தியாசமாக ஆடையுடுத்தப் போகிறேன். அப்படிச் செய்யும் போது நீங்கள் எல்லாரும் அந்த வாத்தை நன்றாக அறிந்து கொள்ள எதுவாக அது இருக்கும். இங்கே இருக்கின்ற இவனை எப்போதுமே பின்பற்றுங்கள். ஏனென்றால் அவன் கல்வியால் மேம்பட்டவன். நாகரீக மெருகேற்றம் கொண்டவன்.” அந்த வாத்தை குளத்தின் மீது அவிழ்த்து விடுங்கள். அது முடிந்த வரைக்குமாக வாத்தின் சத்தத்தைக் கொண்டு கூச்சலிட்டு கூப்பிடும். ஒவ்வொரு வாத்தும் அதற்கு செவி சாய்க்காமல் தன் முதுகை காண்பிக்கும். ஏனென்றால் அது நிச்சயமில்லாத ஒரு சத்தத்தை அளிக்கின்றது. ஆமாம். [மத்தேயு 24:28) 165. ஆனால் தலைவனாக இருக்கும்படி தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட அந்த சிறிய வாத்து கூச்சலிட்டு கூப்பிடட்டும், உடனே அவை எல்லாம் ஒரு எழுப்பதலுக்காக ஒன்று திரள்வதை கவனியுங்கள். "பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.” அதைக் குறித்து எல்லாமே அதற்கு தெரியும். பாருங்கள்-? ஆகவே அதற்கு- அதற்கு அருளப்பட்டிருக்கின்ற ஒரு வழி இருக்கின்றது. வாத்துகளுக்கும் அருளப்பட்டிருக்கின்ற வழியானது தெரியும். ஆனால் மனிதன் அறியாதிருப்பது மிகவும் மோசமான ஒரு காரியம் ஆகும். அது சரி, ஆனால் அந்த விதமாகத்தான் அது சம்பவிக்கின்றது. இப்பொழுது கூட. சரி. [மத்தேயு 4:4) 166. அது ஊக்குவிக்கப்பட்ட ஒரு தலைமை வகிக்கும் வாத்தாக இருக்குமானால், அது அவைகளை அவைகளுக்கான தேவனால் அருளப்பட்டிருக்கின்ற இடத்திற்கு கொண்டு வரும். பரிசுத்த ஆவியாகிய தலைவருக்கு நாம் மாத்திரம் செவி கொடுப்போமானால், அவர் தாமே நம்மை நேராக மறுபடியுமாக வார்த்தைக்கு கொண்டு வருவார். அது தேவனால் அருளப்பட்ட வழியாகும். நம் பாதையில் நமக்கு பிரமாணங்களோ, ஸ்தாபனங்களோ மற்றும் காட்டுகளைகளோ நமக்கு தேவைப்படாது. அவை புறப்பட்டு செல்லும் போது, குளத்தில் வளரும் நாணற் புல் இருக்கும், மற்றும் நாம் சாப்பிட வேண்டிய உணவுகளை, வாத்துகளும் சாப்பிடும். அங்கே ஆகாரம் இருக்கின்றது... உண்மையாகவே, தேவனுடைய பூக்கள் ஆகும். பரலோகத்திற்கு பிரயாணிக்கும் உயிரினங்கள் பாதை முழுவதுமாக ஆகாரத்தை சாப்பிடும். அது "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயில் இருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்” பிழைப்பான். பாருங்கள்? 167. அந்த வாத்து, வாத்து தலைவன், அவைகளை தேவனால் அருளப்பட்ட இடத்திற்கு வழி நடத்தும், நேராக லூயிசியானாவிற்கு. மற்றவைகளுக்கோ தான் எங்கே போகின்றோம் என்று தெரியாது. அப்படியே மேலே எழும்பி சுற்றி சுற்றி பறந்து கொண்டிருக்கும். 168. 3 அல்லது 4 வருடங்களுக்கு முன்னர் நான் லைஃப் பத்திரிக்கையை (Life Magazine) வாசித்துக் கொண்டிருந்தேன், அதிலே ஒரு ஆண் வாத்து, வாத்துகளுடன் சேர்ந்து மேலே புறப்பட்டு சென்றதை குறித்து அதில் இருந்தது. தான் ஒரு தலைவன் என்று அது கூறிக்கொண்டது. முதல் காரியம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா, அவை இங்கிலாந்திலே நின்று விட்டது, அவை இன்னும் திரும்பிச் செல்லவில்லை. அது சரி, ஆகவே அவை தாங்கள் என்ன விதமான ஒரு வாத்தை அல்லது ஆண் வாத்தை பின்பற்றுகிறோம் என்பதை கவனிக்க வேண்டியவை-களாக இருக்கின்றன. ஆகவே அவர்கள் கூறுவது, அங்கே இங்கிலாத்தில்... அந்த வாத்துக்கள் கனடா நாட்டைச் சேர்ந்த காட்டு வாத்துக்கள் ஆகும். அவை நேராக இங்கிலாந்திற்கு வந்தன சுற்றி வந்தன ஒன்று திரண்டன ஆனால் எந்த வழியாக திரும்பிச் செல்ல வேண்டும் என்று அவைகளுக்கு தெரியவில்லை. ஓ, என்னே-! 169. சபையும் அந்த விதமாகத் தான் நடந்து கொண்டது என்பதைப் பார்க்கும் போது அது மிகவும் மோசமான ஒன்றாக இருக்கின்றது, சபையும் கூட தொடர்ந்து சென்றது, ஆனால் எப்படி திரும்பி வருவது என்று அதற்கு தெரியவில்லை. "ஆம், நாங்கள்... பாட்டி இவ்விதமாக கூறினார்கள் என்று நான் நினைக்கிறேன், அவளுக்கு முந்தின பாட்டி, தங்கள் சபையில் சுகமளிக்கும் ஆராதனைகள் வைப்பது வழக்கம் என்று கூறினதாக இந்த பாட்டி கூறினாள். ஆனால் அற்புதங்களின் நாட்கள் கடந்த காலத்திற்கான ஒன்றாகும்,” என்று சபை கூறுகின்றது. யாரோ ஒருவர் உங்களை தவறான பாதைக்கு வழி நடத்தும்படிக்கு விட்டு விடுதல். இருக்கின்ற ஒரே வழியான, தேவனால் ஊக்குவிக்கப்பட்ட வழியை பின்பற்றுவது நன்மை பயக்கும். 170. இந்த சிறிய வாத்தை சற்று கவனியுங்கள். அவைகளை வித்தியாசப்பட்ட வழிக்கு எவராலுமே வழி நடத்த முடியவில்லை. அந்த சிறிய தலைவன் தாமே அவைகளை சரியாக தேவன் அளித்துள்ள இடத்திற்கு வழி நடத்தும் என்று அவைகளுக்கு தெரியும். மேலும் அது எப்படி அவ்விதமாகச் செய்கிறது-? எப்படி என்றால் தேவனால் அளிக்கப்பட்ட உபகரணங்களைக் கொண்டு சரியாகச் செய்கின்றது. அது எப்போதுமே தன்னுடைய வானலைக் கம்பியை (antenna) வெளி நீட்டி தயாராக வைத்திருக்கும். எல்லா நேரத்திலும், நாமும் கூட அப்படியாகத்தான் வைத்திருக்க வேண்டும். ஆவியானவரை தொடர்பில் கொள்ள, நம்முடைய ஆவிக்குரிய வானலைக் கம்பிகளை. ஆண்டெனாக்களை திறந்து வைத்திருக்க வேண்டும். 171. இப்பொழுது, நாம் காண்பது என்னவென்றால் அது மேலே எழும்பி பறக்கும், மேலே ஆகாயத்தில் செல்லும். அது தன்னுடைய வானலைக் கம்பியை வெளியே எடுத்து விட்டிருக்கும். பறந்து செல்லும் இந்த பிரயாணத்தைச் செய்ய, இந்த சிறிய வாத்துகளுக்கு தொடர்ந்து ஜீவிக்க எந்தவிதமான ஆகாரம் இந்த வாத்துக்களுக்கு தேவைப்படும் என்று அந்த தலைவனுக்கு தெரியும். ஆகவே தரையிலிருந்து மேலும் எழும்பும்போது, அது மேலே எழும்புவதை உங்களால் காண முடியும், பிறகு அது கீழே வரும் அப்பொழுது அந்த முழு கூட்டமும் கீழே வரும், வந்து திருப்தியாக ஆகாரத்தை உண்ணும். பிறகு அந்த வாத்திற்குரிய சத்தத்தை அந்த தலைவன் வாத்து பிறப்பிக்கும், உடனே அந்த முழு வாத்து கூட்டமும் மறுபடியுமாக மேலே எழும்பி, நேராக தெற்கு திசையை நோக்கி பறக்கும். அது சரி, தேவனின் தெரிந்தெடுத்துள்ள தலைவன், அந்த வாத்துக்களுக்கென தேவனால் நியமிக்கப்பட்ட தலைவன், அது சரியே. 172. நான் இன்னும் வேறொரு காரியத்தை கூற விரும்புகிறேன். உங்களுக்கு தெரியும், ஒரு குழந்தைக்கு ஒன்று தேவைப்படுமெனின் அழுவதைத் தவிர வேறு எந்த ஒரு வழியையும் விஞ்ஞானப்பூர்வமாக அவர்களால் எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த குழுந்தை உறுமும்படிக்கு அதற்கு உங்களால் கற்பிக்க முடியாது என உங்களுக்கு தெரியும். அது வேகவேகமாக பேசவும் அக்குழந்தைக்கு அவர்களால் கற்று தர முடியாது. ஆனால் அது தனக்கு தேவைப்படுவதை பெற்றுக் கொள்ள என்ன செய்கிறது தெரியுமா-? அது தேவனால் தனக்கு அருளப்பட்டு இருக்கின்ற வழியை எடுத்துக் கொள்கின்றது. அது கூச்சலிட்டு அழுகின்றது, கால்களை உதைக்கின்றது, தனக்கு தேவையானதை பெற்றுக் கொள்ளும் வரைக்குமாக கூச்சலிடுகிறது. பாருங்கள்-? அது சரியே. அதற்கு இருக்கின்ற ஒரே வழி, அதன் தேவையைப் பெற்றுக் கொள்ள அழுவதுதான். தேவனால் அருளப்பட்ட ஒரு வழியைக காட்டிலும் அதை விட சிறந்த ஒரு வழியை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அது சரியே, அதை அப்படியே விட்டு விடுங்கள். அந்த இயற்கையான காரியங்கள்.... (ஆதியாகமம் 11:6-9) 173. நான் ஜெர்மனியில் சிறிது காலத்திற்கு முன்னர் தங்கினேன். ஒரு பெரிய மக்கள் கூட்டத்தினரிடமாக பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான் "ஜெர்மானியர்களே உங்களுக்கு என்ன ஆயிற்று-? உங்களுக்கு தெரியுமா, நான் தெருவில் வந்து கொண்டிருந்த போது, ஒரு நாய் குரைத்தது. அது ஆங்கிலத்தின் குரைத்தது,” என்றேன். மேலும் நான், “சற்று நேரத்திற்கு முன்னர், ஒரு காரில் இருந்த தாய் தன் குழந்தையை அமைதிப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தாள். அக்குழந்தை அழுது கொண்டிருந்தது, அது ஆங்கிலத்தில் அழுதது, என்றேன். நான் "நாம் ஏன் காரியங்களைக் குறித்து குழுப்பமுற்று தடுமாறிக் கொண்டு இருக்கின்றோம்-? பாருங்கள்-? அவை எல்லாம் தேவனால் அருளப்பட்ட வழியில் சென்று கொண்டிருக்கின்றன. நாம் எல்லாருமே பாபேல் கோபுரத்திலிருந்து வந்து இருக்கிறோம். உங்களுக்கு புரிகின்றதா, நாம் எல்லாரும் குழப்பமுற்று தடுமாறுகிறோம்,” என்று கூறினேன். அது சரியே-! 174. அது தேவன் அளித்துள்ள வழியே தன்னுடைய சிறந்த வழி என்று அறிந்து இருக்கின்றது. ஒரு குழந்தை தனக்கு தேவையாயிருக்கின்றதை பெற்றுக்கொள்ள இருக்கின்ற வழி அழுவதே தவிர வேறு எந்த சிறந்த வழியும் அக்குழந்தைகளுக்கு தெரியாது. "மிக சத்தமாக அழுகின்ற குழந்தை தான் சிறப்பான கவனிப்பைப் பெறும்,” என்று டாக்டர் பாஸ்வர்த் கூறுவது வழக்கம். அதற்கான வழி அதுவே ஆகும். 175. தேவனுடைய பிள்ளைகளுக்கு அவ்விதம் தான். அதற்கும் இணையொத்தான ஒன்றை நான் உங்களுக்கு காண்பிக்க கூடும். ஒரு மனிதன் மேடையின் மேல் வருகிறான், தன் வாயில் தொடர்ந்து மெல்லும் பசையை, சிவிங்கம் (chewinggum) மென்று கொண்டு வருகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவன் வந்து "பிதாவே, இன்றிரவு நான் இங்கே இருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியும். நீர் எனக்கு பரிசுத்த ஆவியை கொடுக்க உமக்கு விருப்பமானால், சரி பரவாயில்லை. நான் இங்கே இருக்கிறேன். நீர் என்னை சுகமாக்க விரும்பினால். நான் இங்கே உட்கார்ந்திருக்கிறேன். ஆனால் உமக்கு அதை செய்ய விருப்பமில்லை என்றால், சரி தான், அதனால் பரவாயில்லை என்றால், என்ன, அதனால் பரவாயில்லை. கர்த்தாவே அது உம்முடைய சித்தம்” என்று கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவர் வேதாகமத்தில் சித்தத்தை தெளிவாக இங்கே எழுதி வைத்து உள்ளார். "இது உம்முடைய சித்தம் கர்த்தாவே.” சரி சரியாக இங்கே, இது அவருடைய சித்தம் தான். "நான் அதை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது உமக்கு விருப்பமானால், தான் அதை பெற்றுக் கொள்ளட்டும். ஆனால், இருந்த போதிலும் உமக்கு விருப்பமில்லை என்றால், சரிதான், அதனால் பரவாயில்லை என்பாயாகில் நீ அதை ஒரு போதும் பெற்றுக் கொள்ளவே மாட்டாய். 176. அக்குழந்தைகளில் ஒன்று அழட்டும், பட்டி ராபின்சன் (Buddy Robinson) செய்தது போல, பட்டி ராபின்சன் சோள வயலின் நடுவில் நின்றார். தன் கோவேறு கழுதையை கட்டினார். பிறகு அவர் ”கர்த்தாவே, நீர் எனக்கு பரிசுத்த ஆவியை அளிக்கவில்லை என்றால், நீர் திரும்ப வரும் போது இங்கே எலும்புகள் குவியல் கிடப்பதை நீர் காண்பீர். நான் அதைப் பெறும் வரைக்கும் இங்கேயே இருக்கப் போகிறேன்,” என்று கூறினார். அது தான் காரியத்தில் நிலைத்திருப்பதாகும். 177. தேவன் எப்போதுமே தம்முடைய ஜனங்களுக்கு தம்முடைய விசுவாசிக்கின்ற பிள்ளைகளுக்கு பரிந்துரைப்பது என்னவென்றால், அவர்கள் எப்போதுமே தாம் அளித்துள்ள வழியில் செல்ல வேண்டும் என்பதேயாகும். அது தான் தேவன் தம்முடைய பிள்ளை தாம் அளித்துள்ள வழியிலே செல்ல வேண்டும் என்பது அவருடைய உள் கருத்தாகும், அவர் பரிந்துரை செய்வதும் அதுவே ஆகும். உங்களுக்கு என்ன தேவையோ அதற்காக நீங்கள் அழுது மன்றாடுங்கள். நீங்கள் மன்றாடி கேட்கத் தான் அவர் விரும்புகின்றார். 178. பேதுரு தண்ணீரின் மேல் நடக்க புறப்பட்டு நடக்க ஆரம்பித்த போது, அவன் தான் சரியாகத் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்று நினைத்தான். "இதோ பார் நான் எவ்வளவு பெரிதான ஒன்றை செய்து கொண்டிருக்கிறேன். நான் எவ்வளவு பெரியவன் பார்-?” என்று நினைத்த மாத்திரத்தில் அவன் மூழ்க ஆரம்பித்தான். “ஓ, அது தோல்வியுற்றது என்று நான் யூகிக்கிகிறேன்” என்று அவன் கூறவில்லை. கீழே சென்றான், சிறு சிறு நீர் குமிழிகள், (bubbles, பப்பிள்ஸ்) மேலே வந்தன, எல்லாம் முடிந்து விட்டது என்பதா, பாருங்கள்-? அப்படி இல்லை. [மத்தேயு.14:28-31] 179. அவன் ”ஆண்டவரே, என்னை இரட்சியும்” என்று கதறினான். ஆமென். அப்பொழுது அந்த நித்திய கரமானது கிழே இறங்கி அவனை தூக்கி நிறுத்தியது. ஏன் அப்படி-? அவன் கதறி அழைத்தான். 180. இது தான் சபையிடம் உள்ள பிரச்சனையாகும். நாம் அப்படியே அங்கே நீண்ட நேரம் தரித்திருப்பதில்லை. நாம் நீண்ட நேரத்திற்கு கதறி அழுவதில்லை. நாம் அதை அப்படியே பிடித்திருப்பதில்லை. ஒரு சிறு குழந்தைக்கு ஒன்று தேவைப்-படுமானால், அது காலை உதைத்து கதறி அழும், முகம் சிவக்கும் அளவுக்கு அழும். நாமோ நம் முகத்தில் உள்ள அது அதை எப்படி அழைப்பது, அது என்ன-?, ஆம் மஸ்காரா (கண் இமையில் உள்ள முடிக்கு தடவும் வண்ணச்சாயம் தமிழாக்கியோன்) நாம் அழுதோமானால் நம் முகத்தில் உள்ள மஸ்காரா கலைந்து விடும் என்று பயப்படுகிறோம். அந்த வர்ணம் முகத்திலிருந்து கலைந்துவிடும் என்று பயப்படுகிறோம். நீங்கள் தேவனிடமிருந்து ஒன்றை பெற வேண்டுமானால், எப்படியாயினும் அதை நீ எடுக்கத் தான் செய்வாய். ஆகவே, நீங்கள் அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம். நீங்கள் உங்கள் மயிரை கலைத்துக் கொள்வீர்கள், ஆனால் அது எந்த ஒரு வித்தியாசத்தையும் உண்டாக்காது. இல்லை இல்லை ஐயா. 181. இப்பொழுது, நாம் ஏதோ ஒரு அறிவுப்பூர்வமான சொற்பொழிவைக் கொண்டு அவரிடமாக வரவேண்டும் என்று தேவன் எதிர்ப்பார்ப்பதில்லை. நான் இரட்சிக்கப் பட முயற்சித்த போது நானும் அப்படியாக செய்ய முயற்சித்தேன் என்பதை நான் நினைவு கூறுகிறேன். நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதி அதனை காட்டில் வைக்க இருந்தேன். ஏனென்றால் அவர் காட்டிற்குள் வந்து என்னிடமாக கூறுவார் என்று அறிந்திருந்தேன், நான் என்னைக் குறித்து வெட்கப்படுகிறேன் என்று அவரிடம் கூறவும் இருந்தேன். ஆனால் அதைச் செய்ய எனக்கு விருப்பமில்லை. அப்பொழுது அங்கே நான் சென்று ஜெபிக்கலாம் என்று போனேன். நான் “சற்று பார்ப்போம், மக்கள் தங்கள் கரங்களை இப்படியாக வைத்ததை நான் ஒரு சமயம் படத்தில் இருந்ததை கண்டேன். திரு.இயேசு அவர்களே, நீர் மாத்திரம் ஒரு நிமிடம் இங்கே வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் உம்மிடம் ஒரு நிமிடம் பேச விரும்புகிறேன் நீர் பேச நான் காத்திருக்கிறேன்,” என்றேன். ஒன்றுமே வரவில்லை. "ஓ நான் தவறாக செய்து விட்டேன். சரி திரு இயேசு அவர்களே, ஒருக்கால் நான் இப்படியாக செய்ய வேண்டியவனாக இருக்கிறேன் போல. திரு இயேசு அவர்களே, நீர் வந்து எனக்கு உதவி செய்வீரா-? நான் ஒரு பாவி. நான் உம்மிடம் பேச விரும்புகிறேன்” என்று கூறினேன். எனக்கு... " தேவன் என்னிடம் பேசினார்,” என்று மக்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். நான் “திரு. இயேசு அவர்களே, நீர் இங்கே வருவீரா-? நான் உம்மிடம் பேசவேண்டும்” என்று கூறினேன். 182. ஆனால், அப்பொழுது பிசாசு அங்கே காட்சியில் வந்தான். அந்த விதமாகத் தான் அவன் செய்வான். அவன் உன்னிடமாக, "உன் முழங்கால்கள் வலிக்கின்றதே, நீ கேட்க வேண்டிய அவசியம் இல்லை. பார், நீ சற்று பொறுத்திரு. நாளை இரவு அதைப் பெற்றுக் கொள்” என்று கூற முயற்சிப்பான். நீங்கள் தயாராக இல்லை எனில் அப்பொழுது அவன் உங்களை சுற்றி சுற்றி வருவான். அப்பொழுது அவன் என்னிடமாக.. ஆனால் எப்பொழுதுமாக, அவன் கூறுவதை, அவன் கூறுவதை கொண்டு நீங்கள் ஒரு அனுகூலமான சூழ்நிலையை உங்களுக்கு உருவாக்கிக் கொள்ளுங்கள் அதை ஒரு பிரயோஜனமான ஒன்றாக ஆக்கிக் கொள்ளுங்கள். 183. அவன் என்னிடமாக "என்ன என்று உனக்குத் தெரியுமா? உனக்கு ஏற்கெனவே 19 அல்லது 20 வயதாகி விட்டது. உனக்கு ஏற்கெனவே 20 வயதாகி ஆகிவிட்டது. நீ மிக நீண்ட காலமாக காத்திருக்கிறாய்,” என்று கூறினான். 184. அப்பொழுது நான், "ஓ தேவனே, நான் நீண்ட காலம் காத்திருந்து விட்டேன். கர்த்தாவே, நீர் நான் கூறுவதை கேட்காவிட்டாலும் சரி, எப்படியாயினும் நான் உம்மிடமாக கூறப் போகிறேன். நான் எப்போதுமே இதை செய்ய விரும்பினேன்,” என்று கூறினேன். ஓ, சகோதரனே, அது அவரை காட்சியில் கொண்டு வந்தது. பாருங்கள்-? [சங்கீதம் 34:6] 185. அந்த விதமாகத்தான், அந்த வழியில் தான் அவரை காட்சியில் கொண்டு வர முடியும். நீங்கள் ஒரு குழந்தை மாத்திரமே. அதற்காக சத்தமிட்டு ஓயாமல் அழு, அழு 186. ஏதோ ஒன்றை, வேறு ஏதோ ஒன்றை அல்லது ஏதோ ஒரு பெரிய எழுதப்பட்ட ஒரு ஜெபத்தை ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் உச்சரிக்க ஒத்திகை செய்து விட்டு ஜெபத்தை கூற முயற்சிக்காதே. அது எந்த ஒரு நன்மையும் அளிக்காது. 187. அவர்கள் கூறும் விதமாக “நீங்கள் அந்த ஜெபத்தை கூறிவிட்டாயா-?” என்று கேட்கின்றனர். இல்லை. அவ்விதமாக கூறுவது ஒரு பாவம் ஆகும். நீங்கள் ஜெபியுங்கள். ஏதோ ஒன்றை கூறாதீர்கள். ஜெபியுங்கள். "எனக்காக ஒரு ஜெபத்தை சொல்லுங்கள்” (லூக்கா 18:1-8] [மத்தேயு 7:7) (லூக்கா 11:9) 188. நான் "அதை எனக்கு செய்யாதீர்கள். எனக்காக நீங்கள் ஜெபம் செய்யலாம். ஆனால் எந்த ஒரு ஜெபத்தையும் எனக்காக உச்சரித்து சொல்லாதீர்கள்,” என்றேன். அப்படி வேண்டாம் ஐயா, வேண்டாம். நீங்கள் ஜெபம் செய்யும் போது எனக்காக ஜெபிக்க மாத்திரம் செய்யுங்கள். சரி. 189. உங்கள் தேவைகளுக்காக ஓயாமல் வேண்டுங்கள் (cry). அது தான் தேவன் வைத்துள்ள வழியாகும். அந்த அநீதியுள்ள நியாயாதிபதி தன்னை நோக்கி இரவும் பகலும் ஓயாமல் கூப்பிட்ட பெண்ணைக் குறித்து இயேசு விவரித்தார் அல்லவா. அப்படியானால் பரிசுத்தாவி தங்களுக்கு வேண்டும் என்று தம்மை நோக்கி இரவும், பகலும் ஓயாமல் வேண்டிக்கொள்கின்றவர்களுக்கு எவ்வளவாக பரலோகப் பிதா அளிப்பார். நாடித் தேடுங்கள், தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருங்கள். தட்டுங்கள், தொடர்ந்து தட்டிக் கொண்டே இருங்கள். அவர் திறக்கும் வரை தொடர்ந்து அப்படியாக செய்து கொண்டே இருங்கள். அதனுடனே அப்படியே தரித்திருங்கள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையானது உறுதிப்படுத்தப்படும் வரைக்குமாக ஓயாமல் வேண்டுங்கள் (Cry), அப்பொழுது நீங்கள் பெறுவீர்கள். அதற்கு பின் நீங்கள் அதைக் குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை. வேதம் அதை வாக்குத் தத்தம் செய்துள்ளது என்பதைப் பாருங்கள். பிறகு அதிலே அப்படியே தரித்திருந்து, நீங்கள் அதைப் பெறும் வரைக்கும் ஓயாமல் வேண்டுங்கள் (cry). 190. ஒரு சிறு குழந்தை பிஸ்கட்டைப் பார்த்து, அதை பெற விருப்பம் கொள்ளுமானால், அது உடனே அழ ஆரம்பிக்கும், அழுது கொண்டே இருக்கும், அழுது கொண்டே இருக்கும் காலால் உதைக்கும், கூச்சலிடும், சத்தமிடும், முகம் சிவந்து போகும். அப்பொழுது அதன் தாய் ஒரு பிஸ்கட்டை கொடுப்பார்கள். உடனே எல்லா அழுகையும் நின்று விடும். பாருங்கள்? அக்குழந்தை தான் பார்த்ததை பெற்றுக் கொள்ளும், தான் விரும்பினதை பெற்றுக் கொள்ளும். நீங்கள் சாப்பிடுகின்ற ஐஸ்கிரீமை அக்குழந்தை நக்கி சாப்பிட விரும்புமானால், அதை பெற்றுக் கொள்ளும் வரைக்குமாக அது சந்தடி செய்து கொண்டே இருக்கும். பாருங்கள்-? (யோவான் 16:24] 191. ஆம், அந்த விதமாகத் தான் நாமும் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்தில் ஒரு வாக்குத்தத்தத்தை நான் காண்பேனானால், அப்பொழுது நான் அதில் அப்படியே தரித்திருந்து, தேவன் அதை எனக்கு கொடுக்கும் வரைக்குமாக நான் ஓயாமல் வேண்டிக்கொண்டே இருப்பேன் (cry). அப்பொழுது அவர் செய்வார். தம் கரங்களிலிருந்து அதை உங்களுக்கு அளிப்பார்; நீங்கள் பாருங்கள், இயற்கைப் பிரகாரமாகவும் அப்படி இருக்கின்றது. ஆகவே நீங்கள் அவ்விதம் கேட்க வேண்டும் என்று அவர் விரும்புகின்றார். நீங்கள் கேட்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். "அதிகமாக, கேளுங்கள் அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்வீர்கள்." 192. அவருடைய வார்த்தை உறுதிப்படுத்தப்படும் வரைக்குமாக தொடர்ந்து ஓயாமல் கேட்டுக் கொண்டே இருங்கள். இப்பொழுது, நண்பர்களே, இன்னும் ஒரு நிமிடம் தொடர்ந்து பார்ப்போமாக. வார்த்தை உறுதிப்படுத்தப்படும் வரைக்குமாக ஓயாமல் வேண்டுங்கள். 193. தொல்லை என்னவென்றால், நாம் ஒரு பிஸ்கட்டைப் பெற்றுக் கொண்டு அவ்வளவு தான் இருக்கின்றது என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால் மேஜை முழுவதுமாக ஆகாரம் இருக்கின்றதே. நாம் அந்நிய பாஷையில் பேசி விட்டு, "ஓ, சகோதரனே, அவ்வளவுதான்,” என்று கூறிவிடுகிறோம். ஓ, இல்லை. அப்படி இல்லை. அது அந்த காரியத்தில் கொஞ்சம் தான். ஆம். "ஓ, நான் போதுமான அளவிற்கு சந்தோஷமடைந்தேன். கூச்சலிட்டேன்.” அப்படி செய்வது இன்னும் சற்று கூடுதல் தான். ஆனால் இன்னும் நிறைய அதில் இருக்கின்றதே, தொடர்ந்து ஓயாமல் வேண்டிக் கொண்டே இருங்கள். அது கிடைக்கும் வரைக்குமாக.. 194. அதுதான் தேவன் தம்முடைய மக்களுக்கு அளித்துள்ள வழியாகும். தேவன் அளித்துள்ள வழி என்னவென்றால் அவருடைய வார்த்தையை எப்போதுமே எடுத்து, அதை அப்படி பிடித்து அது உங்களுக்கு உறுதிப்படுத்தப்படும் வரைக்குமாக அப்படியே அதைப் பிடித்திருத்தல் ஆகும். இப்பொழுது, நான் கூறுவது புரிகின்றதா-? தேவன் அளித்துள்ள வழி என்னவென்றால், வாக்குத்தத்தமானது உங்களுக்கு வெளிக்கொணரப்பட்டு அளிக்கப்படும் வரைக்குமாக அதை அப்படியே பற்றிப் பிடித்துக் கொண்டிருத்தல் ஆகும். 195. ஆகவே, நினைவில் கொள்ளுங்கள், நான் இதை உங்களுக்கு சற்று வலியுறுத்திக் கூறுகிறேன். அது என்னவென்றால், வேதாகமத்திலுள்ள எந்த வாக்குத்தத்தமும், அது... அது நிபந்தனைகளின் பேரில் இருக்கின்றது. நீங்கள் அங்கே இருக்கின்றது என்று விசுவாசிக்கின்றீர்கள் என்பதனால், அது காரியங்களை சம்பவிக்கச் செய்யும் என்றல்ல. 196. பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள் அந்த நியாயப்பிரமாண விதிமுறைகளில் அவர்களால் கூடுமான வரைக்குமாக மிகவும் பக்தியாக இருந்தார்கள். ஆனால் தேவனோ, "அது என் மூக்கிற்கு நாற்றமாக இருக்கின்றது” என்றார். பாருங்கள்-? அங்கே உத்தமும் இல்லை. இருக்க வேண்டிய விதமாக அதில் ஒன்றுமே இல்லாது இருந்தது. 197. நீங்கள் அடிப்படையான வாக்குத்தத்தத்தின் பேரிலே வர வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள், அதன் பிறகு அந்த வாக்குத்தத்தைக் குறித்த உங்கள் மனம் சார்ந்த அணுகுமுறையானது எப்படி இருக்கின்றது என்பதாகும். [I இராஜாக்கள் 22:3-6, 14-17] 198. அந்த நாளில் இருந்த அந்த 400 ஆசாரியர்கள், இல்லை தீர்க்கதரிசிகளை சற்று பாருங்கள். ஆகாப் அங்கே இருந்தான். அவர்கள், கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையது என்றார்கள். யோசுவா, பரிசுத்த ஆவியைக் கொண்டு அதை நமக்கு பகிர்ந்தான். ஆனால் சீரியர்கள் அதை எடுத்துக் கொண்டனர்.” என்று கூறினார்கள். அப்பொழுது, ஒரு தீர்க்கதரிசி இதோ பாருங்கள், அடிப்படையாக பார்ப்போமானால் அது அடிப்படையில் சரியானதாகும்” என்று கூறினான். இப்பொழுது அவன் ஒரு உண்மையான பாப்டிஸ்டாக இருந்தான். அவன், "அது முற்றிலும் சரி தான். அது அடிப்படையான வாக்குத்தத்தமாகும். அடிப்படையான ஒன்றாகும். அந்த இடம் நமக்கு சொந்தமானதாகும்,” என்று கூறினான். ஆகவே அவன் தனக்கு இரண்டு பெரிய இரும்புக் கொம்புகளை உண்டாக்கி "புறப்பட்டு அங்கே செல்லுங்கள். இந்த இரண்டு கொம்புகளை எடுத்துச் செல்லுங்கள், சீரியரை முட்டி நிர்மூலம் ஆக்குங்கள். அந்த இடம் இஸ்ரவேலுக்கு சொந்தமானதாகும்,” என்று கூறினான். அது சரியே அடிப்படையில் அந்த காரியம் சரி தான். [I இராஜாக்கள் 22:17] 199. ஆனால் அந்த சிறிய மிகாயா கூறினது என்ன-? அவன், “இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல சிதறப்பட்டதைக் கண்டேன்” என்று கூறினான். பாருங்கள்-? 200. அங்கே இருந்த மாய்மாலக்காரனாகிய ஆகாப், யேசபேல் அவனைச் சுற்றிலும் சென்று எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கும்படி அவன் விட்டுவிட்டான். தீர்க்கதரிசியின் மூலமாக வந்து கொண்டிருந்த உண்மையான தேவனுடைய வார்த்தையானது அந்த காரியத்தை சபித்திருந்தது. கர்த்தருடைய நாமத்தினால் தீர்க்கதரிசியால் சபிக்கப்பட்டிருந்த ஒரு காரியத்தை எப்படி தேவனால் ஆசீர்வதிக்க முடியும்-? பாருங்கள்-? அப்படிச் செய்யவே முடியாது. 201. நாம் எவ்வளவாக பக்தி மிகுந்த ஒரு தேசமாக இருந்தாலும் சரி, நமக்கு பெரியதொரு பிண்ணனி இருந்தாலும் சரி, அதனால் ஒன்றுமே இல்லை. காரியமானது மிகவும் கறைப்பட்டிருக்கிறது. தேசமானது இழந்து போய் விட்டது. 202. நாம் சபையில் கொண்டிருக்கின்ற நம்முடைய மகத்தான ஸ்தாபன வாழ்க்கை ஆனது எவ்வளவு மகத்தான ஒன்றாக இருந்தாலும் சரி, அது ஒரு காரியமே அல்ல. நாம் அதை நம்புகின்றோம். அது அருமையானது தான், அது சரி தான். ஆனாலும் அந்த ஸ்தாபனமானது கறைப்பட்டு போய் விட்டது. தேவன் அவைகளை நிலையடுக்கு தட்டில் (shelf) அப்படியே கிடக்கும்படிக்கு வைத்து விட்டார். அவைகள் அங்கேயே இருக்கின்றன. அந்த ஸ்தாபனங்கள் மறுபடியும் திரும்ப எழும்பினதாக வரலாறே இல்லை. ஆகவே, அது தவறானதாகும். அது முடிவு பெற்று விட்டது. அது வேண்டாம் என்று ஒதுக்கப்பட்டு விட்டது. அதனால் எந்த ஒரு நன்மையும் இல்லை. 203. அவர் தம்முடைய வார்த்தை எப்போதுமே உறுதிப்படுத்தப்படுவதை காண விரும்புகின்றார். சில நிபந்தனைகளின் பேரில் தான் அது உறுதிப்படுத்தப்படும். அது என்னவென்றால் அதின் நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்யும் போது தான் அது செய்யப்படும். தேவனுடைய வார்த்தையை எடுக்கும் மக்கள் அதை எடுத்து அது அவர்களுக்காக ஜீவிக்கும்படி செய்யவார்கள் என்பதை நீங்கள் கண்டு இருக்கிறீர்கள். மற்றவர்களோ அந்த அதே வார்த்தையுடனே திரும்பி வந்து அதன் பேரில் எந்த ஒன்றையுமே செய்ய முடியாமல் இருப்பார்கள். ஆகவே அது நிபந்தனைகளின் பேரில் தான் உள்ளது. அது சரியே. (எண்ணாகமம் 23:1-3) 204. இங்கே கவனியுங்கள், அதைக் குறித்ததான ஒரு உதாரணத்தை வேதத்தில் நான் காண்பிக்கிறேன். இஸ்ரவேல் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது மோவாப் வந்தது, அது சரியாக அதே விதமான மத வழக்கங்களை கொண்டிருந்தது. அது லோத்தின் குமாரத்தியின் பிள்ளை ஆகும். ஆகவே கவனியுங்கள், பிலேயாம் வந்த போது, அவனுடன் பேசிக் கொண்டிருந்தது தேவனே ஆகும். இஸ்ரவேல் ஏழு பலிப்பீடங்களை கொண்டு இருந்தது போல அவனும் ஏழு பலி பீடங்களை கட்டினான். அவன் ஏழு சுத்தமான பலிகளை, காளைகளை பலிபீடத்தின் மீது வைத்தான், சரியாக இஸ்ரவேல் கொண்டு இருந்தது போலவே அவனும் செய்தான். இன்னுமொரு காரியம் என்னவென்றால் அவன் ஏழு ஆட்டுக்கடாக்களை வைத்தான். அது வருகின்ற ஒரு மேசியாவைக் குறித்து அது காண்பித்தது. இஸ்ரவேலும் சரியாக அதைத்தான் வைத்திருந்தது. அடிப்படையில் பார்த்தால் அவர்கள் இருவருமே சரியாக இருந்தனர். அடிப்படையில் சரியாக இருந்தனர், ஆனால் அது நிபந்தனைகளின் பேரில் இருந்தது. ஆமென். அவன் தேவனுடைய உண்மையான வாக்குத் தத்தைப் பார்க்க தவறினான். 205. கிறிஸ்துவின் வருகையில் கூட காரியம் சரியாக அதே விதமாக இருந்தது. இன்றைக்கும் கூட அந்த காரியம் திரும்ப வந்துள்ளது. அது நிபந்தனையின் பேரில் தான். சரி. 206. யோபு, தேவன் (அவர் செய்தது என்ன?) ஒரு அருளப்பட்ட வழியை அளித்து கொண்டிருந்தார். தீர்க்கதரிசியாகிய யோபிற்கு ஒரு தேற்றரவாளன் தேவைப் பட்டது. இப்பொழுது, சற்று கூர்ந்து கவனியுங்கள். என் நேரம் கடந்து விட்டது. (யோபு 2:11] [யோபு 19:25) 207. யோபிற்கு ஒரு தேற்றரவாளன் தேவைப்பட்டது. மனிதர்கள் அந்த ஆறுதலை அவனுக்கு அளிக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களால் செய்ய முடியவில்லை. அவர்கள் யோபை பாதையிலிருந்து விலகும் படிக்குத் தான் எப்பொழுதுமே செய்தனர். ஆனால் யோபோ மறுபடியுமாக திரும்பி பாதைக்கு வந்தான். அவனுக்கு ஒரு தேற்றரவாளன் தேவைப்பட்டது. இயேசு-கிறிஸ்துவைக் குறித்த ஒரு தரிசனத்தை அவனுக்கு அவர் அருளின போது, தேவன் அவனுக்கு தேற்றரவா-ளனை அளித்தார். அப்பொழுது அவன் "என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிந்திருக்கிறேன். என் மீட்பர்” என்று சத்தமிட்டான். ஒரே ஒருவர் தான் இருக்கின்றார். "கடைசி நாட்களில் அவர் பூமியின் மேல் நிற்பார்.” என்றான். இப்பொழுது அந்த தரிசனத்தை சற்று நினைவில் கொள்ளுங்கள். "என் மீட்பர்” என்று நீங்கள் கூறினீர்களே. (யோவான் 1:1-14) 208. அவர் அவனுக்கு கிறிஸ்துவைக் காண்பித்தார். கிறிஸ்து தான் வார்த்தை. "ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்ததை தேவனிடத்திலிருந்து. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நம் மத்தியில் வாசம் பண்ணினார்”. ஆகவே யோபு. தீர்க்கதரிசியாக இருந்து.... 209. இப்பொழுது கவனியுங்கள். யோபு ஒரு தீர்க்கதரிசியாக இருந்தபடியால், கர்த்தருடைய வார்த்தை (யாரிடத்திற்கு) தீர்க்கதரிசியினிடத்திற்கு வருகின்றது. நிச்சயமாக. அங்கு தான் வார்த்தையானது வருகின்றது. அந்த விதத்தில் தான் அவர்கள் தீர்க்கதரிசிகளா அல்லது இல்லையா என்று நீங்கள் கண்டு கொள்ளலாம். அவர்கள் வார்த்தையில் அப்படியே தரித்திருப்பார்கள். வார்த்தை தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தப்படுகின்றது. யோபு ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். அவனால் முடிவைப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவன் அந்த வார்த்தையைப் பார்த்த போது, ஒரு தீர்க்கதரிசியாக இருந்தபடியால், அவன் "என் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் என்று நான் அறிந்திருக்கிறேன்” என்று கூறினான். சபையானது காரியத்தை செய்ய தவறின போது, மற்றும் எல்லா காரியமும் தோல்வியுற்ற போது அவன் அப்படிக் கூறினான். (யோபு 2 : 9] 210. அவனுடைய அன்பார்ந்த மனைவியும் கூட அவனைத் தேற்ற தவறினாள். "யோபே, நீர் இன்னும் தொடர்ந்து அப்படியே தான் இருப்பீரா, தேவனை தூஷித்து ஜீவனை விடும்” என்று அவன் சொல்லும்படி கூறினாள். [யோபு 2-10] [யோபு 1-21] [யோபு 19:25-27) 211. அதற்கு அவன், "நீ பயித்தியக்காரி பேசுகிறது போல பேசுகிறாய். கர்த்தர் கொடுத்தார்; கர்த்தர் எடுத்துக்கொண்டார்; கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப் படுவதாக” என்று கூறினான். அப்பொழுது இடிகள் முழங்கத் துவங்கியது. மின்னல்கள் மின்னின. ஆவியானவர் அந்த தீர்க்கதரிசியின் மீது வந்தார், அப்பொழுது அவன் அந்த வார்த்தையைக் கண்டான். அப்பொழுது அவன் ”என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிவேன். கடைசி நாளில் அவர் பூமியின் மேல் நிற்பார். தோல் புழுக்கள் இந்த சரீரத்தை அழித்துப் போட்டாலும் நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். ஆமென். அவரை நானே பார்ப்பேன், அந்நிய கண்கள் அல்ல. என் கண்களே அவரைக் காணும். இந்த உலகத்தில் நாம் எதையுமே கொண்டு வந்ததில்லை, ஆகவே நாம் எதையுமே கொண்டு போவதும் இல்லை என்பது நிச்சயம். கர்த்தர் கொடுத்தார். கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்” என்று கூறினான். எப்படிப் பட்ட ஒரு தேற்றரவாளனாக அவர் இருக்கின்றார்-! ஒரு சபை அங்கத்தினன் வந்தால் நலமாயிருக்கும் என்றான். ஆனால் தேவனோ அவனுக்கு ஒரு தரிசனத்தை அளித்தார். ஒரு பிஷப், அத்தியட்சகர், குருவானவர் வந்து தனக்கு ஆறுதல் உண்டாக பேசுவான் என்று கேட்டான்; தேவனோ அந்த தீர்க்கதரிசிக்கு ஒரு தரிசனத்தை அளித்தார். அது தான் அவனுக்கு தேவையாயிருந்தது. (ஆதி 15:13-14] 212. எகிப்திலிருந்து வெளியே வர இஸ்ரவேலுக்கும் ஒரு வழி தேவைப்பட்டது. அவர்களை எகிப்தியர் கையிலிருந்து விடுவித்து கொண்டு வரும்படும் படிக்கு அவர்களுக்கு ஒரு வழி தேவைப்பட்டது. ஒரு வித இராணுவ பலம் அல்லது ஏதோ ஒன்று அவர்களுக்கு தேவைப்பட்டது. தேவன் அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அசலான வார்த்தையுடன் இருந்த ஒரு தீர்க்கதரிசியை அளித்தார். மோசே-! அது சரியா-? ஒரு இராணுவம் எழும்பி அவர்களை வெளியே கொண்டு வரும், அது எகிப்தியரை தோற்றகடித்து வீழ்த்தும் என்று விரும்பினர். ஆனால் தேவன் அவர்களுக்கு அந்த வார்த்தையை, முன்னர் ஆபிரகாமோடு "உன் சந்ததியார் தங்கள் உடையதல்லாத அந்நிய தேசத்திலே சஞ்சரிப்பார்கள். ஆனாலும் வல்லமையுள்ள கரத்தினால் அவர்களை நான் சந்திப்பேன்” என்று கூறி, தேவன் உரைத்திருந்த அந்த வார்த்தையை, அந்த உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையைக் கொண்டிருந்த ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். அவர்கள் ஒரு இரட்சகனுக்காக கதறிக் கொண்டிருந்தனர். அப்பொழுது தேவன் வார்த்தையை கொண்டிருந்த ஒரு தீர்க்கதரிசியை அவர்களுக்கு அனுப்பினார். விசுவாசிக்கும் அவிவாசிக்கும் வித்தியாசத்தை சொல்லும் படிக்கான ஒரு வழியை தேவன் அருளியிருந்தார். மேலும் தேவன்...... 213. இப்பொழுது, அவர்களில் சிலர் "அப்படியா, இப்பொழுது வாதைகள் விழுமானால், நாங்கள் உடனே மருத்துவமனைக்கு செல்வோம். அந்த வாதை, அந்த வாதை விழும் என்றால், நாங்கள் என்ன செய்வோம் தெரியுமா-? நாங்கள் டாக்டர் ஜோன்ஸிடம் செல்வோம். அதை எப்படி சமாளிப்பது என்று அவருக்குத் தெரியும்” என்றார்கள். அது கிரியை செய்யவில்லை. ஆனாலும், அவர்கள் சாமர்த்திய-சாலிகளாக இருந்தார்கள். ”ஊம், வாதை வருமானால், உடனே நாங்கள் பூமிக்கு கீழே ஒரு குகைக்குள் செல்வோம், கதவை மூடி தாழிட்டுக் கொள்வோம்.” அது ஒரு எள்ளளவும் கூட நன்மை செய்யாது. (யாத். 12:7) 214. தேவன் ஒரு அருளப்பட்ட வழியை உண்டாக்கினார். அது (என்னவாயிருந்தது-?) இரத்தம் ஆகும். தேவன் அதை அளித்திருந்தார். காணப்பட்டதிலே மிகவும் எளிமையான ஒன்று, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை எடுத்து, வீட்டு வாசலில் தெளித்தல், ஆனாலும், அது தம்முடைய வழி என்று தேவன் கூறினார், அவர் அதை கனம் பண்ணினார். ”இரத்தத்தின் கீழாக இல்லாமல் வெளியே இருக்கின்ற முதற் பிறந்தவர்கள் எல்லாரும் மரித்தனர்.” 215. தன்னுடைய வீட்டாரை காத்துக் கொள்ள நோவாவிற்கு, அருளப்பட்ட வழி தேவைப்பட்ட போது, தேவன் அவனை ஒரு பேழை கட்டும்படிக்குச் செய்தார். அங்கிருந்தவர்கள் அந்த பேழையைப் போன்றே படகுகளையும் உண்டாக்கியிருக்கக் கூடும். அப்படி தான் இன்றும் மக்கள் நினைக்கின்றனர். ஆனால், நீங்கள் பாருங்கள், அதுவோ ஒரு விசேஷித்த படகாயிருந்தது. இப்பொழுது நாம் வைத்திருப்பது போல் அன்றும் அவர்கள் அதே விதமாக படகுகளை உடையவர்களாக இருந்து இருக்கலாம், ஆனால் அந்த படகோ ஒரு விசேஷித்த படகாக இருந்தது. அதுவோ ஒரு... இப்பொழுது நான் கூறுவதைக் கேளுங்கள். அது என்னவென்றால் தேவனால் கட்டி அமைக்கப்பட்ட ஒரு படகாக இருந்தது. [மாற்கு 16:17] 216. இன்று சபையும் அந்த அதே விதமாக இருக்கின்றது. அது வேதாகமத்தினால் கட்டி அமைக்கப்பட்ட சபையாக இருக்க வேண்டியதாயிருக்கின்றது. என் அனுபவம் சபையில் ஒரு சிறந்த அங்கத்தினன் என்பதாக இருக்கக் கூடாது, ஆனால் தேவனுடைய வார்த்தையின் பேரில் கட்டி அமைக்கப்பட்ட ஒரு அனுபவமாக அது இருக்க வேண்டும். "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்.” தேவனால் கட்டி அமைக்கப்பட்ட அனுபவம், அது ஒன்று மாத்திரமே என்னை மேலே எடுத்துச்செல்லும். உங்களை மேலே எடுத்துச் செல்லப் போகின்ற ஒன்றே ஒன்று, அது மாத்திரமே. 217. அதற்கு மேலாக இருக்கின்ற எந்த ஒன்றைக் குறித்தும் எனக்கு கவலை இல்லை. "நான் எங்கிருந்து வருகிறேன் என்றால்... நான் - நான் ஒரு நல்ல மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன் அல்லது ஒரு பெந்தெகொஸ்தே ஆவேன்” என்று கூறுகின்றனர். தேவனுக்கு அவையெல்லாம் அர்த்தமற்ற ஒன்றாகும். 218. அது தேவனால் அறிவுறுத்தப்பட்டு போதிக்கப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். அது பரிசுத்தாவியாகும், வார்த்தையினால் வந்ததாகும். பரிசுத்தாவி வார்த்தையைத் தவிர வேறு எந்த ஒன்றையும் போதிக்காது. ஏனென்றால் அதுதான் பரிசுத்தாவி ஆகும். மனிதர் ஊக்குவிக்கப்பட்டு அசைக்கப்பட்டு, ஓ, தேவனால் அருளப்பட்ட வழியாகிய பரிசுத்தாவியைக் கொண்டு வேதாகமத்தை எழுதினர். 219. இப்பொழுது இஸ்ரவேலுக்கு ஒரு வழி வகை தேவைப்பட்டது. தேவன் அவர்களுக்கு அதை அளித்தார். அது விசுவாசியை அவிசுவாசியிடமிருந்து வேறு பிரித்தது. இன்றைக்கு அதே காரியம் தான், விசுவாசியும் அவிசுவாசியும் வேறு பிரிக்கப்பட்டனர். 220. மோசே, இப்பொழுது நான் குறித்து வைத்திருக்கும் நிறைய குறிப்புகளை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், மோசே, தேவனுடைய உண்மையுள்ள தாசன் (Servant) ஆவான்-! 221. பழங்காலத்தவர்களே, சற்று கவனியுங்கள். என்னைப் போல் வயதாகிக் கொண்டு இருக்கின்ற உங்களில் சிலர், சற்று கவனியுங்கள். 222. மோசே தேவனுக்கு உண்மையும் உத்தமுமாக வேலை செய்தான். அங்கே எழும்பின தாத்தான்கள் எல்லாரும் "இதோ பார், உன்னைக் காட்டிலும் தீர்க்க தரிசிகளாக இருக்கின்ற இன்னும் மனிதர் இங்கே உள்ளனர். நீ மாத்திரமே தீர்க்கதரிசி அல்ல. கடற்கரையில் நீ மாத்திரம் தான் கூழாங்கல் அல்ல” என்று கூறினார்கள். மற்றும் அவர்களுடைய முறுமுறுப்புகள் எல்லாவற்றையும் மோசே சகித்தான். அவர்களுக்கான தேவனுடைய செய்தியை தான் கொண்டிருப்பதை அவன் அறிந்திருந்தான். போலியாட்கள் எழும்பினர். "தேவனே, நான் என்ன செய்ய வேண்டும்?” என்று மாத்திரமே மோசே கேட்டான். [எண் 16:21, 17:1-5] 223. அப்பொழுது அவர் "வேறு பிரிந்து போ. அந்த காரியத்தை நான் அதமாக்கி விழுங்கிப் போடப்படச் செய்வேன். உங்கள் கோல்களை எடுத்துக் கொள்ளுங்கள் அங்கே செல்லுங்கள். எது துளிர்விடுகிறதென்று பாருங்கள்-? யார் ஆசாரியன் என்றும் யார் தீர்க்கதரிசி என்றும் நான் உங்களுக்கு காண்பிப்பேன்,” என்றார். 224. மோசே தன் ஊழியத்தை உண்மையுள்ளவனாக செய்தான். பிறகு அவனுக்கு வயதான போது, 120-வருடங்கள் தேவனுடன் உண்மையுள்ளவனாக நடந்தான். 40- வருடங்களாக வனாந்தரத்தில் தேசங்களாலும், மக்களாலும் வந்த எல்லாவிதமான உபத்திரவங்களையும் தொடர்ந்து சகித்து நின்றான். பிறகு மரிக்கும் இடத்திற்கு வந்தான். மரிக்க அவனுக்கு ஒரு இடம் தேவையாயிருந்தது. தேவன் அவனுக்கு கன்மலையின் மேல் ஒரு இடத்தை அருளினார். 225. ஓ தேவனே, நானும் கூட அங்கே கன்மலையின் மேலே மரிக்கட்டும். அந்த கன்மலை கிறிஸ்துவே என்று உங்களுக்கு தெரியும். மோசே, மரிக்க தேவன் ஒரு இடத்தை அளித்தார். அங்கே மாத்திரம் தான் நான் மரிக்க விரும்புகிறேன். கிறிஸ்துவுக்குள்ளாக நான் மரிப்பேனாக. [உபாகமம் 34:5-7] [யூதா 1:9) 226. அவன் மரித்த பிறகு, அவனுடைய சரீரம் அங்கே இருந்தது. அவனுடைய சரீரத்தை சுமக்க பணியாள் தேவைப்பட்டது. ஆகவே தேவனுக்கு அவன் சரீரத்தை சுமக்கும் பணியாளர்களாக தூதர்களை அளித்தார். அவன் எங்கே செல்ல இருக்கின்றானோ அந்த இடத்திற்கு அவர்கள் மாத்திரமே அவனை எடுத்துச் செல்ல முடியும். ஆமென். தேவன் சுமக்கும் பணியாளர்களை அளித்தார். அது சரியே. (லூக்கா .16:22-23) 227. பரிசுத்த ஆவியின் பேரிலும், வாக்குத்தத்தமாகிய அந்த வார்த்தையின் பேரிலும் நான் சார்ந்திருக்கிறேன். உங்களை ஒரு பெரிய அளவிலான அடக்க நிகழ்வில் கொண்டு செல்ல அல்ல. அந்த ஐசுவரியவானுக்கு அந்தவிதமாக தான் பெரிய அளவில் அடக்கம் நடத்தினார்கள். ஆனால் அவன் பாதாளத்தில் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். பாருங்கள்-? ஒரு பிரம்மாண்டமான அடக்கத்தைக் குறித்து ஒன்றுமே இல்லை. அது எந்த ஒரு வித்தியாசத்தையும் உண்டாக்காது. நான் தேவனால் அருளப்பட்டுள்ள வழியையே எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். "தாம் வருகையில் கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களை தம்முடனே தேவன் கொண்டு வருவார்.” அது தான் உண்டாக்கப்பட்டிருக்கின்ற வழியாகும். தம்முடைய உத்தம மான தீர்க்கதரிசி மரிக்கும்படிக்கு தேவன் ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தினார். (ஆதி.5:24] (எபிரெயர்.11:5) 228. ஏனோக்கு, அவன் தேவனுடன் 500-ஆண்டுகள் நடந்த பிறகு, தேவன் அவன் இடமாக "ஏனோக்கு, நீ மரிக்கப் போவதில்லை. நீ மேலே வீட்டுக்கு வர விரும்புகிறாயா? எப்போது வீட்டை அடைவோம் என்கின்ற ஆவல் உனக்கு இருக்கிறதா-?” என்றார். அதற்கு அவன், "ஆம் கர்த்தாவே. எப்போது வீட்டை அடைவேன் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன்,” என்று கூறினான். 229. அவர், "நீ அங்கே பூமியில் பூச்சி அரிக்கக் கூடிய உன்னுடைய இந்த சரீரத்தில் இவ்வளவு காலம் இருந்து நடந்து கொண்டிருந்தது போதுமா-?” என்றார். அவன், ”ஆமாம்,” என்றான். அவர், "சரி, அப்படியே நடக்க ஆரம்பி,” என்றார். [ஆதி.5:24] 230. ஏனோக்குக்கு ஒரு ஏணி தேவைப்பட்டது. தேவன் அவனுக்கு ஒரு பெரும் பாதையை அளித்தார். அது தான் அவனுக்கு தேவன் அளித்திருந்த வழியாகும். மேல் நோக்கி செல்லும் ஒரு பெரும்பாதையை அவனுக்கு அளித்தார்-! அவன் ஒரு போதும்... அவன் சரியாக அந்த விதமாக மேலே ஏறிச் சென்றான். அவன் கஷ்டப்பட்டு பிரயாசப்பட வேண்டிய அவசியமே இருக்கவில்லை. அவன் நேராக மேலே ஓடினான். அப்போது பரிசுத்த ஆவியானவர் அவன் பின் இருந்து அவனை அப்படியே மேலே தூக்கினார். அவன் நேராக பரிசுத்த பெரும்பாதையில் சென்றான், நேராக தேவனுடைய ராஜ்யத்துக்குள் சென்றான். [| ராஜாக்கள் 2:11) 231. அந்த நேரத்தின் அந்த நாட்டின் முதல் குடிமகளாகிய யேசபேலும் மற்றும் அந்த நேரத்தின் புகழ் பெற்ற ஜனாதிபதியும் - அவர்கள் மக்களின் முன்பாக ஒரு தவறான உதாரணமாக தங்களை முன் நிறுத்தி, அதினாலே மக்கள் தவறாகச் செல்லும்படியாகச் செய்தனர் - யேசபேலின் பாப் முடி வெட்டுதலையும், வர்ணம் தீட்டப்பட்ட முகங்களையும் தன் வாழ் நாள் முழுவதுமாக எலியா கண்டித்த பிறகு, அவன் ஒருவன் தான் அதை பிரசங்கிப்பதாக நினைத்திருந்தான். ஆகவே அவன் அந்த காரியத்தை எல்லாவிதத்திலும் செய்து முடித்திருந்தான். அவன் அதிகமாக பிரயாசப்பட்டு மிகவும் சோர்ந்து போய், வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று விரும்ப ஆரம்பித்தான். தேவன் உன்னதத்திலிருக்கிறார் உன்னதத்தைச் சேர்ந்தவர் என்று அவன் அறிந்திருந்தான். மேலேறி பரலோகத்திற்கு வர ஒரு கயிறு அவனுக்கு தேவைப்பட்டது. தேவன் அவனுக்கு இரண்டு குதிரைகள் பூட்டப் பட்ட ஒரு இரதத்தை அனுப்பினார். அவனை எடுத்துக்கொள்ள தேவன் அளித்து இருந்த வழி அதுவாகும். அவன் ஒரு கயிற்றைத் தேடியிருப்பான். ஆனால் தேவன் ஒரு இரதத்தை அனுப்பினார். அது அவருடைய வழியாக இருந்தது. யோசுவா... 232. பாதையின் முடிவிலே, அது தான் எலியாவின் முடிவாக இருந்தது. நோவாவும் அப்படித் தான். எல்லா காலத்திலும் முடிவில் அப்படித் தான் இருந்தது. (யோசுவா.3:15-17) 233. இப்பொழுது, யோசுவா, வனாந்திரத்தினூடாக கடந்து அவன் தன் பிரயாணப் பாதையின் முடிவிற்கு வந்த போது, கவனியுங்கள். யோர்தானைக் கடந்து வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் செல்ல ஒரு பாலம் அவனுக்கு தேவைப் பட்டது. தேவன்... அவனுக்கு ஒரு பாலம் தேவைப்பட்டது. ஆனால் தேவனால் அருளப்பட்ட வழியோ வல்லமை என்பதாக இருந்தது, ஒரு பாலம் அல்ல. அவர் வல்லமையை அனுப்பினார். நதி புரண்டோடாமல் அப்படியே அதை தடுத்து நிறுத்தினார். அப்பொழுது அவன் உலர்ந்த தரையின் மீது நடந்து கடந்து சென்றான். அது தான் தேவனால் அருளப்பட்ட வழியாயிருந்தது, ஒரு பாலம் அல்ல. அவன் ஒரு மேலான, சிறந்த பொறியாளரை கொண்டிருந்தான். ஆகவே, அவர் அவனுக்கு வல்லமை மாத்திரம் அனுப்பினார். அது தண்ணீரை அப்படியே பின் தள்ளி அவன் உலர்ந்த தரையில் நடந்து செல்லும் வரைக்குமாக தண்ணீரை அப்படியே தடுத்து நிறுத்தியது. (தானியேல்.6:221) 234. தானியேல், தேவனுக்காக நின்றதினால் சிங்கத்தின் கெபியில் வீசப்பட்டான். அவனுக்கு ஒரு வேலி தேவைப்பட்டது, ஆனால் தேவன் ஒரு தூதனை அனுப்பினார். என்ன ஒரு வித்தியாசம்-! அது தேவனுடைய அருளப்பட்ட வழியாக இருந்தது. அவனுக்கு ஒரு வேலி தேவைப்பட்டது. ஆனால் தேவன் அவனுக்கு ஒரு தூதனை அளித்தார். அது எப்படிப்பட்டதான ஒரு சிறந்த வேலியாக இருந்தது தெரியுமல்லவா-! அவர் எப்போதுமே நீங்கள் கேட்பதை விட சிறந்ததான ஒன்றை உங்களுக்கு அளிக்கின்றார். ஆம், தானியேலுக்கு ஒரு வேலி தேவைப்பட்டது. தேவனோ ஒரு தூதனை அனுப்பினார். 235. எபிரேய பிள்ளைகள், அக்கினியை அணைப்பதற்கு அவர்களுக்கு தண்ணீர் தேவைப்பட்டது. ஆனால் தேவன் அவர்களுக்கு நான்காவது மனிதனை அனுப்பினார். அவ்வளவு தான் அவர்களுக்கு தேவையாயிருந்தது. கட்டப்பட்டிருந்த அவர்களுடைய கைகளை அவர் கட்டவிழ்த்தார், அவர்களுடனே பேசினார். அக்கினியின் மணம் கூட அவர்கள் மேல் வீசவில்லை. அவர்களுக்கு தண்ணீர் தேவைப்பட்டது. அவர் நான்காவது மனிதனை அனுப்பினார். (தானி.3:23-25) [மத்தேயு 2:1-2) 236. இந்தியாவில் இருந்து பாபிலோனுக்கு வந்த அந்த சாஸ்திர்கள், ஏதோ ஒன்று சம்பவிக்கப் போகிறது என்று அவர்கள் அறிந்திருந்தனர். அந்த ராஜா பிறந்து இருக்கிறார் என்று அவர்கள் அறிந்திருந்தனர். அவர்களுக்கு ஒரு திசைக்காட்டும் கருவி தேவைப்பட்டது. தேவனோ அந்த ராஜாவிடம் அவர்களை வழி நடத்த ஒரு நட்சத்திரத்தை அவர்களுக்கு அளித்தார். பாருங்கள்-? அவர்கள் தேவனால் அருளப்பட்ட வழியில் சென்றனர். அவர்களில் ஒருவன் “ஹே பெல்தாசார், நீ ஒரு பெரிய மனிதனல்லவா, நீ உன் திசை காட்டும் கருவியைக் கொண்டு வந்தாயா-?” என்று கூறியிருப்பான் என்று நான் சற்று கற்பனை செய்து பார்க்கிறேன். அதற்கு அவன், "இல்லையே,” என்றான். அப்படியானால், எப்படி அந்த இடத்தை சென்றடையப் போகின்றாய். "நான் தேவனால் அருளப்பட்ட வழியில் செல்லப் போகிறேன்.” அது தான் வழியாகும். எப்படி அந்த இடத்தை சென்றடையப் போகின்றாய்-? "தேவனால் அருளப்பட்டுள்ள வழியின்படியே செல்லப் போகிறேன்.” "அது என்னவாயிருக்கிறது-?" 237. "அதோ அந்த நட்சத்திரம். அது தான். அது தான் தேவன் எங்களுக்கென்று அளித்திருக்கும் வழியாகும்.” அவர்களுக்கு ஒரு திசைகாட்டும் கருவி தேவைப் பட்டது. தேவன் அவர்களுக்கு ஒரு நட்சத்திரத்தை அளித்தார். (யோவான் 4:42) (பிலிப்பியர் 3:20] 238. ஒரு நாளிலே உலகத்திற்கு ஒரு இரட்சகர் தேவைப்பட்டது. அப்பொழுது தேவன் தம்முடைய குமாரனை அளித்தார். அவர் வந்த போது, அவரை யாருமே அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அவர் யாருக்குமே தேவைப்படவில்லை. தங்களுக்கு ஒரு இரட்சகர் வேண்டும் என்று அவர்கள் கேட்டனர். ஆனால் தேவன் அதை தம்முடைய வழியில் அனுப்பின போது.... ஒரு ராஜாவைக் கேட்டனர். தேவன் அவர்களுக்கு ஒரு குழந்தையை அளித்தார். ஒரு பெரிய மகத்தான மனிதன் ரோம் நகரத்திலிருந்து கம்பீர நடைபோட்டு வருவான் என்று அவர்கள் விரும்பினார்கள். தேவனோ அவர்களுக்கு முண்ணனியிலே ஒரு சிறிய, அழுது கொண்டிருந்த குழந்தையை அளித்தார். பாருங்கள்-? ஆனால் அது தான் தேவனால் அருளப்பட்ட வழியாக இருந்தது. நாம்.. ஆனால்... அவர்களோ அதை தேவன் விரும்புகின்ற வழியில் அனுப்பப்படுவதை விரும்பவில்லை . பாருங்கள்-? ஆகவே, அவருடைய வழியை அவர்கள் ஏற்றுக் கொள்ளாததினால் அவர்கள் பெருங் குழப்பத்தில் ஆழந்தனர். அதைச் செய்த சிலர் அங்கே இருந்தனர். (மாற்கு 16:15,17) 239. இயேசு அவர்களிடமாக, ”நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையா-ளங்கள் பின் தொடரும்,” என்று அவர்களுக்கு கட்டளையை அளித்து கூறின பிறகு, பெந்தெகொஸ்தேயின் சபையினுடைய பிறப்பிடமாக அது இருந்தது. என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடமாக அவர் கூறினார். எருசலேமுக்கு சென்று காத்திருக்கும்படியாக அவர்களிடமாகக் கூறினார். அவர்களுக்கு ஒரு சாசனம் தேவைப்பட்டது. அவர்களுக்கு ஒரு சாசனம் தேவைப்பட்டது. அவர்கள் ஒரு பிரமாணத்தை உண்டாக்க விரும்பினார்கள். தேவன் அவர்களுக்கு பரிசுத்த ஆவியை அளித்தார். ஓ-! அவர்களுக்கு ஸ்தாபனம் தேவைப்பட்டது. ஆனால் தேவனோ அவர்களுக்கு ஆவியை அளித்தார். என்ன ஒரு வித்தியாசம். தேவன் எவ்வாறு அதைச் செய்கிறார் பாருங்கள். பரிசுத்த ஆவி தான் சபையை வழி நடத்துவது என்பது தேவனால் அருளப்பட்ட வழியாக இருந்தது. ஒரு பிஷப் அல்ல, பரிசுத்த ஆவி, அது தான், அவர்களுக்கு சாசனமாக இருந்தது. ஆகவே, அந்த நாள் முதற்கொண்டு, இந்த நாள் வரைக்குமாக, அது தாமே ஒரு உண்மையான மறுபடியும் பிறந்த பிள்ளையின் சாசனமாக இருந்து வருகிறது: பரிசுத்த ஆவி. 240. இப்பொழுது, நண்பர்களே, 2000-ஆண்டுகளுக்கு பிறகு. நாம் முடிக்கப் போகிறோம். இப்பொழுது, 2000-வருடங்கள் கழித்து, மனிதன் தன் சொந்த வழியை கொண்டிருக்க உறுதிபூண்டுள்ளான். அவன் தனக்காக ஒரு சாசனத்தை உண்டாக்கிக் கொண்டான். அவன் தனக்கென மனிதனால் உண்டாக்கப்பட்ட மனித நன்னெறி ஒழுக்கவியல் கோட்பாடுகளை வைத்துக் கொண்டான். ஆகவே அவன் என்ன செய்தான்-? அதினாலே தானே சத்தியத்தை விட்டு ஒரு பெரிய அளவிலான விழுந்து போதலை பிறப்பித்து போட்டது. அவர்கள் தாமே.... அந்த மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிரமாணங்கள், ஸ்தாபனங்கள், எல்லாவிதமான கொள்கைகள், உணர்ச்சி வசப்படுதல்கள் மற்றும் ஒவ்வொருவரும் ”வேதம் இதைக் கூறுகிறது” என்றனர். அவர்கள் அதின் இந்த பகுதியை எடுத்து விடுகின்றனர். ஆனால் அதின் பாகமாக அவர்கள் ஆவதில்லை. அவர்கள் மூல பத்திரத்தை சாசனத்தை பின்பற்றுவதில்லை, ஆதலால் அவர்கள் செல்லும் வழியை இழந்து போகின்றனர். எவ்வளவு வருடங்கள் கழித்து, இப்பொழுது தொள்ளாயிரத்திற்கும் அதிகமான வித்தியாசமான கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் வேறொன்றை இது சரியாக உள்ளது. அவர்கள் தவறாய் இருக்கின்றனர். இது சரியாக உள்ளது. அது தவறாக உள்ளது,” என்று இன்னும் தொடர்ந்து குற்றப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதனாலே பரிதாபத்திற்குரிய மக்களோ மிகவும் குழப்பமடைந்து எது சரி, எது தவறு என்று அறியாமல் இருக்கின்றனர். 241. நமக்கு எது தேவையாக இருக்கிறது-? நாம் சரியான பாதைக்கு திரும்ப வர வேண்டும், மூலசாசனத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும். நமக்கு தேவைப்படுவது என்ன-? நமக்கு அசலான, சத்தியத்தின் உண்மையான ஆவிக்குரிய அடையாளம் தேவைப்படுகின்றது. இந்த கடைசி கால வழிக்கென சபைக்கு சுவிசேஷ சத்தியம் தான் தேவைப்படுகின்றது. இந்த கடைசி நாளுக்கென தேவன் அவர்களுக்கு ஒரு அடையாளத்தை.... (மத்தேயு.12:42) (லூக்கா .11:31) 242. இயேசு பேசிக் கொண்டிருந்ததது உங்களுக்கு நினைவிருக்கிறதா-? அவர். "தென் தேசத்து ராஜஸ்திரீ கடைசி நாளில் எழுந்து இந்த சந்ததியை குற்றம் சுமத்துவாள்: என்று கூறினார். அவள் பூமியின் எல்லைகளிலிருந்து சாலோமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். அவன் பகுத்தறிவும் ஆவியைக் கொண்டவனாக இருந்தான். அந்த பகுத்தறியும் ஆவியை காணும்படிக்கு எவ்வளவு தூரம் கடந்து வந்திருந்தாள் பாருங்கள். அவர், "இதோ சாலோமோனிலும் பெரியவர் இங்கே இருக்கின்றார்,” என்று கூறினார். [மத்தேயு 12:39,40] [மத்தேயு 16:4] 243. மேலும் அவர் “தீர்க்கதரிசி யோனாவைப் போல, யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் பூமியின் இருதயத்தில் மூன்று நாள் இருப்பார்,” என்று கூறினார். மேலும் அவர் "இந்த பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்,” என்று கூறினார். இது தாமே அந்த அடையாளமோ அல்லது அந்த சந்ததியாகவோ இருக்குமென்றால், வேறு எங்கே அது இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை; பலவீனமான, பொல்லாத, சபைக்கு போகிற விபசார சந்ததியார். அவர்கள் ஒரு அடையாளத்தை தேடுவார்கள். அதை அவர்கள் பெறுவார்கள் என்று அவர் கூறியு உள்ளார். "யோனா மூன்று நாட்கள் மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷ குமாரனும் பூமியின் இருதயத்தில் இருப்பார்.” யோனா மீனின் வயிற்றிலிருந்து வெளியே வந்தது போல, ஒரு உயிர்த்தெழுதல் இருக்கும். 244. மல்கியா 4-ஆம் அதிகாரமானது, கடைசி நாட்களில் "ஒரு செய்தி புறப்பட்டு வரும். அது பிள்ளைகளுடைய இருதயத்தை பிதாக்களிடத்திற்கு திருப்பும், பிதாக்களின் மூல விசுவாசத்திற்கு திருப்பும்” என்று நமக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கின்றது. அவைகள் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளது. இயேசு வாக்குத் தத்தம் செய்துள்ளார். கடைசி கால விசுவாசிகளின் விசுவாசமானது அந்த அசலான மூல-மேசியாவின் அடையாளத்தை பார்க்கும். அவர் மரித்தோரிலிருந்து, உயிர்த்து எழுந்தாரானால்... இத்தனை வருடங்களாக ஸ்தாபன பிரமாணங்களானது அவரை வெளியே தள்ளி இருந்தது. இவ்வளவு வருடங்களாக அதைச் செய்து, சத்தியத்தை மறுதலித்திருந்தது. ஆகவே நாம் கண்ணோக்கிப் பார்க்க வேண்டிய காரியமானது என்னவென்றால், கடைசி நாட்களில், மூல அசலான விசுவாசத்திற்கு திரும்புவது தான், ஆதி பெந்தெகொஸ்தே பிதாக்களின் விசுவாசத்திற்கு திரும்புவதாகும். 245. அவர்கள் அவருடைய உயிர்தெழுதலைக் கண்டனர். இன்றும் கூட அவருடைய உயிர்த்தெழுதலைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அவருடைய உயிர்த்து எழுதலின் அடையாளத்தை காண்கின்றோம். யோனா, மூன்று இரவும் பகலும் மூன்று நாட்கள் மீனின் வயிற்றில் இருந்தான். மூன்றாம் நாளில் அவன் மீனின் வயிற்றிலிருந்து எழும்பி வந்தான். இயேசுவும் பூமியின் வயிற்றில் மூன்று நாட்கள் இருந்து, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். 2000 வருடங்களாக அவர் சபையில் இல்லாத நிலை இருந்து வருகின்றது. ஆனால் அவர் யோவேலின் மூலம், "பச்சைபுழு விட்டதை வெட்டிக்கிளி தின்றது. பச்சைபுழுவும், வெட்டிக் கிளி, பட்சித்து விட்டதை நான் திரும்ப அளிப்பேன். கடைசி நாட்களில் நான் அதை திரும்ப அளிப்பேன்” என்று வாக்குத்தத்தம் செய்திருக்கின்றார். 246. "சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும்” என்று தீர்க்கதரிசி கூறுகிறான். கிழக்கில் பிரகாசிக்கின்ற அந்த அதே சூரியனானது மேற்கேயும் பிரகாசிக்கின்றது. அது ஒரு நாளாக, ஒரு இருண்ட நாளாக இருந்தது. அவர்கள் சபை பிரமாணங்-களையும் மற்றும் பிரமாணங்களையும் அதிலே வைத்திருக்கிறார்கள். அதிலே சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும். அந்த அதே சூரியன், அந்த அதே, விளைபலன்கள் (result), அந்த அதே அடையாளங்கள், அந்த அதே அற்புதங்கள், சாயங்கால நேரம். (அப்.7:37) (எபிரெயர் 13:8] [உபாகமம் 18:15) 247. தாம் மேசியா என்று அவர் தம்மை தாமே எப்படி நிருபித்தார்-? இப்பொழுது, இந்த கேள்வியானது 2000 வருடங்கள் கழித்தும் இன்னுமாக தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்கின்றது. அவர் இன்னுமாக மேசியாவாக இருக்கின்றாரா-? நல்லது, அப்பொழுது அவர் மேசியாவாக இருந்தாரென்றால், எபிரெயர் 13:8 "அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்,” என்று கூறுகின்றது. அப்பொழுது அவர் என்னவாக இருந்தாரோ, இன்றும் அவ்விதமாக அவர் இருந்தாக வேண்டும் அல்லவா, தாம் மேசியா என்பதை எப்படியாக அவர் நிருபித்தார்-? தேவனுடைய வார்த்தையின்படி, “தேவன் கூறியிருக்கின்றார்”, மோசேயின் மூலமாக, ”உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார்” என்று கூறினார். (யோவான் 4:19,26-29,30] 248. அதனால் தான் கிணற்றடியில் இருந்த ஸ்திரீயிடமாக இயேசு அவளுடைய பாவங்களை அவளிடமாக கூறினபோது, "ஆண்டவரே, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று நான் காண்கிறேன். மேசியா வரும் போது இந்த எல்லா காரியங்களையும் எங்களுக்கு அறிவிப்பார்,” என்று கூறினாள். அவர் "உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்றார். 249. அவள் உடனே ஓடினாள், நகரத்துக்குள் இருந்த மக்களிடமாக "நான் செய்து இருந்ததை ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். அவர் அந்த மேசியா தானோ” என்று கூறினாள், ஜனங்கள் அதை விசுவாசித்தனர். ஏனென்றால் அவர்கள் அந்த மேசியாவின் அடையாளத்துக்காக காத்துக் கொண்டு இருந்தனர். 400 வருடங்களாக ஒரு தீர்க்கதரிசியும் அவர்களுக்கு இல்லை. (லூக்கா 17:28-29) (ஆதி.18:1, 7-15) 250. இயேசு "சோதோமின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வருகை-யிலும் இருக்கும்” என்று கூறினார். தேவன் தம்மைத் தாமே மாம்ச சரீரத்தில் வெளிப்படுத்திய போது, கன்றின் மாம்சத்தை புசித்து மாட்டின் பாலை குடித்து, அவர்கள் முன்னிலையில் அமர்ந்திருந்தார். தேவன், யேகோவா, மாம்சத்தில் வெளிப்பட்டு, கூடாரத்திற்கு எதிராக தம்முடைய முதுகு புறத்தை திருப்பினவராக, கூடாரத்துக்குள்ளாக இருந்த சாராள் என்ன பேசிக் கொண்டிருந்தாாள் என்று கூறினார். [சகரியா 14:7) 251. "சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும்.” தேவனுடைய உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தை தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாளின் அடையாளம் ஆகும். வெளிச்சம் உண்டாகும். மேலும் அவர் மல்கியா மூலமாகவும், வேதாகமத்தில் அநேக இடங்களிலும் செய்துள்ள வாக்குத்தத்தம் என்னவென்றால் கடைசி கால மக்கள் தாமே, அவர்கள் கண்ட அந்த அதே வெளிப்படுத்திக் காண்பித்தலை இவர்களும் காண்பார்கள் என்பதே ஆகும். ஏன் என்றால் அந்த அடையாளத்தை அவரால் மாற்றவே முடியாது. அவர் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார். (யோவான் 14:12) 252. இப்பொழுது, கல்வாரியில் அந்நிய பாஷையில் பேசினதை நாம் கேட்டோம். அவர் செய்திருந்த எல்லா காரியங்களையும் அவர் செய்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். முன்னே அங்கே இருந்த அந்த அப்போஸ்தல சபை தாமே, அந்த அப்போஸ்தல சபையை, அவர்கள் செய்த செயல்களை நாம் கண்டோம். அது தாமே சரியாக மறுபடியுமாக சபைக்குள்ளாக இங்கே இந்த கடைசி நாட்களில் வருவதை நாம் காண்கிறோம். அது என்னவாயுள்ளது-? அது தேவன், மோசேக்கு செய்தது போல, காலங்களினூடாகவும் செய்தது போல உறுதிப்படுத்துவதாகும். நாம் வஞ்சிக்கப்படாதபடிக்கும், நாம் அறிந்து கொள்ளும்படிக்காகவும் அவர் தாமே ஒரு வழியை அளித்திருக்கின்றார். யோவான்-14:12ல் இயேசு "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கின்ற அடையாளங்களை, நான் செய்கின்ற கிரியைகளை தானும் செய்வான்” என்று கூறினார். அப்படித் தான் இருக்கும். இப்பொழுது, அவர் மரித்தாரென்றால், அவர் மரித்து இருக்கிறார் என்றால், அப்படியானால் அந்த கிரியைகள் தாமே நின்று போய் இருக்கும். ஆனால் அவர் மறுபடியுமாக ஜீவிக்கின்றார் என்றால், அப்படியானால் அவருடைய கிரியைகள் முன்பு எப்படி இருந்ததோ அப்படியே அது தொடர்ந்து நடக்கும், ஏனென்றால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்-கிறீர்களா-? (சபையார் ”ஆமென்” என்கின்றனர் - ஆசி.) (மாற்கு 16:17) 253. கவனியுங்கள். இதை நான் கூறுவேனாக. மேசியாவின் வேதாகம அடையா-ளங்களைக் கொண்டு தாம் தான், அந்த மேசியா என்று இயேசு நிருபித்தார். அவர் அதை நிருபித்தார். அவர் மேசியாவாக இருந்தார். இப்பொழுது, அவர் இன்னுமாக அதே விதமாக மாறாதவறாக இருக்கின்றனார். என்று நான் நிருபிக்க தேவன் அனுமதிப்பாராக. நீங்கள் அதை விசுவாகிக்கிறீர்களா-? அவர் அதை நிருபித்தார். அவர் மேசியாவாக இருந்தார். தாமே மேசியா என்பதை அவர் நிருபித்தார். நான் தானே, தேவனுடைய கிருபையினாலே, அவர் மேசியா என்று நிருபிப்பேனாக. தாம் மேசியா என்று அவர் நிருபித்தார். இப்பொழுது நாம் தாமே அவர் அப்படியே இருக்கின்றார் என்று நிருபிப்போமாக. அதைத்தான் அவர் சரியாக வாக்குத்தத்தம் செய்தார். அதைத்தான் அவர் கூறினார். அந்த விதத்தில் அவர் அதை கூறியுள்ளார். "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்.” 254. அது என்ன-? தேவனால் அருளப்பட்ட வழி, உயிர்த்தெழுதலின் வழி. ஒரு மனிதனை தன்னுடைய மதியீனத்திலிருந்து சுவிசேஷ ஒளிக்குள்ளாக கொண்டு வருகின்ற காரியம் அதுவாகும். அறிவுப்பூர்வமான மூளை என்பதிலிருந்தும், ஒரு பெரிய இயந்திரம் போன்று இயங்குகின்ற ஒரு நிலையில் இருந்தும் தன்னுடைய இருதயத்தை தேவனுக்கு முன்பாக தாழ்த்துகின்றதற்கு அவனை கொண்டு வரும் காரியம் அதுவாகும். 255. ”ஓ, சகோ.பிரன்ஹாம், அந்த மனிதன் மிகவும் சாமார்த்தியசாலி ஆயிற்றே. அவர் 4-பட்டங்களைப் பெற்றவர். அவர் இளங்கலையியல் பட்டம் (BA) பெற்றவர். அவர் இதைப் பெற்றிருக்கிறார்,” என்று நீங்கள் கூறலாம். அவர் எதைப் பெற்று இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. கிறிஸ்துவை அறிந்து கொள்ள வேண்டும் ஆனால், அந்த நபர் கற்றிருக்கின்ற ஒவ்வொரு காரியத்தை அவர் மறந்தாக வேண்டும். அது சரியே. அந்த மனிதன் தன்னை தாழ்த்த வேண்டும். உலகம் தனக்கு செய்துள்ள எந்த ஒரு காரியத்திலிருந்தும் அகன்று செல்ல வேண்டும். 256. நீங்கள் கிறிஸ்தவத்தை தாழ்மையில் கற்றுக் கொள்ள வேண்டும். சாயங்கால நேரத்தில் அவரை விசுவாசிக்க வேண்டும். துவக்கத்திலே நான் கூறினதென்ன-? இங்கே நான் எதைக் குறித்துப் பேசினேன்-? கடைசி காலத்தில் தேவனால் அருளப் பட்ட வழியை ஏற்றுக் கொள்ளுதல். இந்த மனிதர்களில் ஒவ்வொருவரும், வேதாகமத்தினூடாக ஒவ்வொரு முறையும், இயற்கையின் மூலமாகவும் நாம் காணலாம். 257. இப்பொழுது, தேவன் ஒரு மரத்தை இன்று எடுத்து, அதை வேறொன்றாகச் செய்து, பிறகு நாளை அதை வேறொன்றாக செய்ய மாட்டார். அப்படி இல்லை. அவர் ஒரு நாளை உண்டாக்குகிறார். அன்று அந்த மரத்தின் உயிர் சத்து கீழே செல்கின்றது, நாளை அது வேறு விதத்தில் மேலே வருகின்றது, அடுத்த தடவை அவர் அந்த மரத்தின் உயிர் சத்தை வெளியே இழுப்பார் என்றா இருக்கும்-? இல்லவே இல்லை. 258. தேவன் அப்படியே வழக்கமான நடைமுறையில் தான் கிரியை செய்கின்றார். நாம் இப்பொழுது பேசின ஒவ்வொரு மனிதரும், வேதாகமத்தின் முழுவதும் உள்ள ஒவ்வொருவரும், தேவன் சரியாக தம்முடைய வழக்கமான நடைமுறையின் படியே, தம்முடைய வார்த்தையின்படியே அப்படியே இருந்தார். ஒருவரும் கூட மாறாக இல்லை. அவர்கள் சரியாக அவருடைய வார்த்தையின்படியே இருந்தனர். வேதாகமம் முழுவதுமாக அப்படியாக இருந்தனர். சரியாக அவருடைய வார்த்தையின் பேரில் இருந்தனர். 259. ஆகவே, நீங்கள், "சரி, நான் சரியாக அவருடைய வார்த்தையின் பேரிலே இருக்கின்றேன்” என்று கூறும்போது, அப்பொழுது அவர் அது சத்தியம் என்று உறுதிப்படுத்துகின்றார். 260. இப்பொழுது அவர் இன்றிரவு இன்னுமாக வழக்கமான நடைமுறையில் தான் கிரியை செய்து கொண்டிருக்கின்றார், நாம் மாத்திரம் அதை விசுவாசிப்போமானால் நீங்கள் அதைச் செய்வீர்களா-? (சபையார் ”ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி.) 261. இப்பொழுது நம்முடைய தலைகளை நாம் தாழ்த்துவோமாக. இப்பொழுது சற்று கூடுமானால் பயபக்தியுடன் இருங்கள். 262. விசுவாசிகளை எடுத்துக்கொள்ளப்படுதலின் விசுவாசத்திற்கு (Rapturing Faith) அவர் கொண்டு வரவேண்டும் என்பது தேவனால் அளிக்கப்பட்டுள்ள வழியாகும். தேவனுடைய வழி விசுவாசிகளை எடுத்துக் கொள்ளப்படுதலின் விசுவாசத்திற்கு கொண்டு வருவதே அவருடைய அருளப்பட்ட வழியாக இருக்கின்றது. 263. நான் பீட அழைப்பை செய்யுமுன்னர், இதை நான் கூற விரும்புகிறேன். இதைச் செய்ய நான் நடத்தப்படுவதை உணர்கிறேன். வீட்டில் வியாதிப்பட்டுள்ள மக்கள் உள்ளனரா-? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். 264. இன்னும் சற்று நீங்கள் அமைதியாக இருக்கும்படிக்கு நான் உங்களை கேட்டுக் கொள்ளப் போகிறேன். இப்பொழுது, நீங்கள் மிக பயபக்தியுடன் இருப்பீர்களானால், நாம் இன்னும் ஐந்து நிமிடங்களில் முடிப்போம். 265. இப்பொழுது, பாருங்கள், நீங்கள் அமைதியைக் குலைப்பீர்களானால், யாரோ ஒருவருக்கு நீங்கள் தொந்தரவு செய்கிறீர்கள். 266. பரிசுத்த ஆவியின் கட்டுக்குள்ளாக எல்லாவற்றையும் நான் கொண்டு வந்துள்ளேன். இதை நான் செய்ய வேண்டுமானால், அது முழு கட்டுக்குள் இருக்க வேண்டும். தேவன் வாக்குத்தத்தத்தை அளித்துள்ளார். நான் அதை செய்யவில்லை. அவர் தான் அந்த வாக்குத்தத்தத்தை செய்துள்ளார். 267. இப்பொழுது, எனக்குத் தெரிந்த வரைக்குமாக, நான் அறிந்துள்ள மக்கள் சிலர் இங்கே இருக்கின்றனர். நான் அறிந்திராத மக்கள் சிலரும் உள்ளனர். எனக்கு தெரிந்த சுமார் 4 நபர்களை நான் காண்கிறேன். அவர்களில் ஒருவர் இங்கே உள்ள சகோ.வில்லியம்ஸ் மற்றும் கோதரன் ரோஸ் அவர்களை எனக்குத்தெரியும். ஷாரீட் அம்மாள் அங்கே கதவண்டையில் உட்கார்ந்து உள்ளார்கள். அவர்களையும் கூட எனக்குத் தெரியும். சகோதரி வில்லியம்ஸ் இங்கே உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களையும் எனக்குத் தெரியும். 168. சரியாக அங்கே உட்கார்ந்துள்ள இந்த பெண்மணி, எனக்கு முன்பாக பார் இரண்டு வரிசையில் உள்ள அந்த அவள் ஆடைகள் தைத்து விற்கப்படுகின்ற அங்காடியில் பணி புரிகின்றாள். அவள் குடும்ப நண்பர் ஆவாள். அவள் பெயர் எனக்கு தெரியாது. ஆனால் அங்கே உள்ள சகோ.அவுட்லா சபையின் அங்கத்தினர் என்று நான் நினைக்கின்றேன். அது சரி என்று நான் நினைக்கின்றேன். 269. மேலும் ஓஹையோவைச் சேர்ந்த சகோ.டௌ மற்றும் சகோதரி டௌ (Daugh) இங்கே இருப்பதை நான் காண்கிறேன். சற்று முன்னர் அங்கே பின்னால் சகோ.சாத்மேன் "ஆமென்,” என்று கூறினதை நான் கேட்டேன். நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். எனக்கு தெரிந்தவர்கள் இவ்வளவு பேர் தான் இங்கே இருக்கின்றார்கள். 270. எத்தனைப் பேர் வியாதியாயிருந்தது எனக்கு உங்களை தெரியாது என்பவர்கள் உங்கள் கரங்களை சற்று மேலே உயர்த்துங்கள். உங்களைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது என்பவர்கள் சற்று உங்கள் கரங்களை மேலே உயர்த்துங்கள். சரி. நீங்கள் இப்பொழுது விசுவாசத்தை கொண்டிருந்து அப்படியே நம்புங்கள். 271. இப்பொழுது, நான் உங்களுக்கு சத்தியத்தை கூறியுள்ளேன். அந்த வார்த்தை சத்தியம் என்பதை உறுதிப்படுத்த தேவன் கடமைப்பட்டவராயிருக்கிறார். அது சரி தானே-? அது சரியே. இப்பொழுது, அப்படியானால் இன்றிரவு நான் கூறின பிரகாரமாக அது தான் அருளப்பட்டிருக்கின்ற வழியாக இருக்கும். "இது தான் சத்தியம்” என்று தேவன் உங்களுக்கு கூற அதுவே தான் தேவனால் அருளப்பட்டு இருக்கின்ற வழியாகும். 272. ஏனென்றால் அது முற்றிலும் முடியாத ஒரு காரியம் என்று எந்த ஒருவரும் அறிவார். விஞ்ஞானத்தால் விவரிக்க முடியாத ஒரு அற்புதமாக அது இருக்கும். உங்களால் ஒரு அற்புதத்தை விளக்கிக் கூற முடியாது. அது விளக்கிக் கூறுவதற்கு அப்பாற்பட்ட ஒன்றாகும். இன்றிரவு, தேவன் தாமே எனக்கு அந்நியராயிருக்கின்ற ஒரு நபரிடமாக பேசி அவர்கள் என்ன செய்தனர் என்பதையும், அல்லது அவர்கள் செய்யாதிருக்கின்ற ஒன்றை அல்லது அவர்கள் செய்யப் போகின்ற ஒன்றை அல்லது அவர்கள் கட்டாயமாக இதை செய்ய வேண்டும் என்பதை இயேசு பூமியில் இருந்த போது செய்த அதே விதமாக மக்களிடம் கூறுவார் என்றால் எப்படி இருக்கும். அவர் தம்மைத் தாமே காண்பித்தார். அது தான் மேசியாவின் அடையாளம் என்பதை பொது மக்களுக்கு காண்பித்தார். அதை அறிந்தவர்கள் எத்தனைப் பேர். நீங்கள் அதற்கு "ஆமென்” என்று கூறுங்கள். (சபையார் "ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி) அப்படியானால், சபை அதை விசுவாசிக்கின்றது. அது தான் இருக்கின்ற ஓரே வழியாகும். மக்கள், இயேசு அதைச் செய்த போது அவர்கள் தாமே.... 273. அந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டாள். அவர் திரும்பிப் பார்த்து "என்னை தொட்டது யார்-? என்று கேட்டார். சரீரப்பிரகாரமாக இயேசு அவளுடைய தொடுதலை உணரவில்லை. ஆனால் அவளுடைய விசுவாசம் அதைச் செய்தது. [மத்தேயு.9:20-22) 274. இப்பொழுது, நீங்கள் “கர்த்தராகிய இயேசுவே, என்னிடத்திலிருந்து ஒவ்வொரு சந்தேகத்தையும் எடுத்துப் போடும். என் சந்தேகங்களை எடுத்துப் போடும் இதை நான் விசுவாசிக்கும்படிக்கு செய்யும். நான் மிகவும் பதறலுடன் தேவைக்காக இங்கே இருக்கின்றேன். நான் இங்கே இன்றிரவு வருகின்றேன். ஏனென்றால் எங்களுடைய பலவீனங்களுக்காக தொடப்படக்கூடிய மகா பிரதான ஆசாரியராக இயேசு இருக்கின்றார் என்று வேதாகமம் கூறுகின்றது” என்று கூறி ஜெபம் செய்வீர்களானால் அந்த விதமான விசுவாசத்தை உங்களால் கொண்டிருக்க முடியும். 275. கடைசி அப்போஸ்தலன் மரித்த பிறகு இந்த அடையாளம், இந்த அற்புதமானது வரலாற்றில் எங்குமே செய்யப்படவில்லை என்று உங்களுக்கு தெரியுமா-? அது சரி. எனக்கு தெரிந்த எல்லா வரலாற்று புத்தகங்களையும் நான் படித்துப் பார்த்தேன். ஹிஸ்லோப் எழுதின பாபிலோன்கள் என்ற புத்தகத்தை படித்தேன். பாக்ஸ் எழுதின இரத்த சாட்சிகளில் பட்டியல் என்ற புத்தகத்தையும் வாசித்தேன். நிசாயா பிதாக்களுக்கு முந்தின காலத்தைக் குறித்தும். நிசாயா மாநாடு மற்றும் நிசாயா மாநாட்டிற்கு பிறகு சம்பவித்த எல்லாவற்றையும் குறித்து நான் வாசித்துப் பார்த்தேன். அதைக் குறித்த எல்லா புத்தகங்களையும் நான் படித்துப் பார்த்தேன். எந்த ஒரு இடத்திலும் அதைக் குறித்து குறிப்பிடப்படவில்லை. மார்டின் லூத்தர், ஜான்வெஸ்லி. முதல் எழுப்புதல், வெல்ஷ் எழுப்புதல், எல்லாவற்றிலும் அதைக் குறித்து குறிப்பிடப்படவில்லை. அவர்கள் அழுது, சத்தமிட்டு தேவனைத் துதித்தார்கள். முடிவில் அவர்கள் அந்நிய பாஷை பேசுதலில் இறங்கி விட்டார்கள். ஆகவே இந்த அடையாளமானது கடைசி அடையாமாக இருக்க வேண்டிய ஒன்றாகும் சோதோம் எரிந்து போவதற்கு முன்னர் கடைசியாக கண்டது இந்த அடையாளத்தைத் தான். 276. ஆகவே நினைவில் கொள்ளுங்கள். அவர் அதை சோதோமிற்கு வெளிப்படுத்தவில்லை. அதை அவர், தெரிந்துகொள்ளப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தினார். நீங்கள் கவனிப்பீர்களானால், இந்த வரமானது இங்கே இருக்கின்ற உலகப்பிரகாரமான சபைகளுக்கு செல்வதில்லை. அது தெரிந்து கொள்ளப்பட்ட சபைக்கு தான் செல்கின்றது. அது ஒன்று மாத்திரமே அதனால் பயன் பெறுகிறது. அவர்கள் தான் அதை ஏற்றுக் கொள்வார்கள்... (மாற்கு 3:22] 277. அது அங்கே செய்யப்படுமானால், இயேசு அதைச் செய்த போது "அவன் பெயல்செபூல், குறி சொல்பவன்” என்று கூறினது போல, அதே விதமாகவே அந்த உலகப்பிரகாரமான சபைகளும் கூறுவர். குறி சொல்பவனைக் குறித்து எல்லோருக்கும் தெரியும், அதைச் சொல்வது பைத்தியக்காரத்தனமான ஒன்றாகும் என்று அறிவர். மனோத்தத்துவம் அல்லது குறி சொல்லுதலைக் குறித்த முதல் விதியும் கூட அவர்களுக்கு தெரியாது. அது பிசாசின் கிரியை ஆகும். தேவனுடைய கிரியையை அப்படியே பொய்யாக நடப்பித்துக் காண்பிக்க முயலுதல் ஆகும். [மத்தேயு 24:24 ] [ || தீமோ .3:8) 278. தேவன் ஒரு தீர்க்கதரிசிக்கு காரியங்களை காண்பிக்கின்றார் பிசாசோ ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் ஒருவனை கொண்டிருக்கின்றான். அந்த இரண்டும் ஒன்றுக்கொன்று மிக அருகாமையில் உள்ளன. கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவனையும் ஏமாற்றும் அளவிற்கு அது உள்ளது என்று இயேசு கூறினார். நம்மிடையே இன்று அதிக அதிகமான அளவில் போலியாக செய்யப் படுகின்ற காரியங்கள் இருக்கின்றன. "யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள். ஆனாலும் இவர்களுடைய மதிகேடு வெளிப்படும்” என்று கூறினார். 279. இப்பொழுது, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த ஜனக்கூட்டத்தை என் கட்டுக்குள்ளாக எடுக்கின்றேன், பரிசுத்த ஆவிக்காக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே பரிசுத்தாவியைக் கொண்டு என் கட்டுக்குள்ளாக எடுக்கின்றேன். 280. விசுவாசிகள் என்னும் முறையில், நீங்கள் அசைய வேண்டாம் என்று நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன். அப்படியே அமர்ந்திருங்கள். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்றும், அவருடைய கிரியைகளையும் அவருடைய வழிகளையும் தெரியப்படுத்தும்படிக்கு நான் இங்கே இருக்கின்றேன் என்று நீங்கள் விசுவாசியுங்கள். 281. இந்த காரியங்களை குறித்து நான் மிகவும் தயங்கிக் கொண்டிருந்தேன், 15, 16 வருடங்களாக நான் ஊழியக் களத்தில் இருந்து வருகிறேன். ஆனால் ஏதோ ஒன்று நடக்கவிருக்கின்ற அந்த மணி நேரமானது வந்து கொண்டு இருக்கின்றது. செய்தி ஆனது வேறொரு தேசத்திற்கு, வேறொரு ஜனத்திற்கு செல்லும். ஆனால் நாம் அவருடைய பரிசுத்த சமூகத்தின் பிரசன்னத்தில் இருக்கையில்... அமெரிக்காவில் இருக்கின்ற சபையானது, வெளியே அழைக்கப்படவிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். உண்மையான சபைக்கு காரியங்கள் முடிவு பெற்றுள்ளது, அது கழுவப்பட்டுள்ளது அது ஆயத்தமாயுள்ளது, உண்மையான சபை. மாய்மாலம் தொடர்ந்து உள்ளது. ஆனால் உண்மையான சபையோ, துவக்கத்திலேயே அது உண்மையான சபையாக, மறுபடியும் பிறந்த ஒன்றாக. தேவனுடைய அழைப்புக்கு என முன் குறிக்கப்பட்டதாக இருக்கின்றது. 282. நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிப்பீர்களானால், நீங்கள் ஜெபம் செய்து உங்கள் இருதயங்களில் "கர்த்தராகிய இயேசுவே, நான் உம்முடைய வஸ்திரத்தை தொட அனுமதியும். நீர் இன்னுமாக அந்த அதே பிரதான ஆசாரியராய் இருக்கிறீர் என்று எப்படி நான் அறிந்து கொள்வேன்-? சகோதரன் பிரன்ஹாமின் உதடுகளின் மூலம் என்னிடம் பேசுவீராக. அவர் எனக்கு சத்தியத்தைத் தான் கூறியிருக்கின்றார் என்றால், அவர் எனக்கு சத்தியத்தை தான் கூறியுள்ளார் என்று நான் விசுவாசிக்கிறேன்,” என்று சொல்லும்படிக்கு நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன். (அப்போஸ்தலர் 2:22-24-32] 283. அதை உங்கள் ஜெபத்தில் சொல்ல மறந்து போகாதீர்கள். ஏனென்றால் "மக்கள் உன்னை விசுவாசிக்கும்படிக்கு நீ செய்வாயானால்,” என்று அவர் என்னிடமாக கூறியுள்ளார். அதுதான் ஓரே... நீங்கள்... அவர்கள் அவரை விசுவாசியாமல் போனப டியால் அவராலே அநேக பெரிய கிரியைகளை செய்ய முடியவில்லை. என்னை, நீங்கள் ''அவர்,'' என்று விசுவாசிக்க வேண்டாம். ஆனால் அவர் என்னை அனுப்பி உள்ளார் என்று விசுவாசியுங்கள். அவரை வெளிப்படுத்திக் காண்பிக்கவே நான் இங்கே இருக்கின்றேன். தாம் அவர் தான் என்பதை அவர் நிருபித்திருக்கிறார். அந்த மேசியா, நேற்றும் இன்றும் மாறாதவராயிருக்கிறார் என்றும் அவர் காததோரில் இருந்து உயிர்த்தெழுந்தார் என்று நான் நிருபிக்க தேவன் எனக்கு உதவி செய்வாராக. [அப்போஸ்தலர்.10:34] 284. இப்பொழுது ஜெபத்தில் இருங்கள். நான் கவனித்துக் கொண்டும் காத்துக் கொண்டும் இருக்கிறேன் ஜெபித்துக் கொண்டிருங்கள். கர்த்தர் தாமே இதை அருளி, இது தான் கடைசி கால அடையாளம் என்று உங்களுக்கு நிருபிப்பார் என்றால், நீங்கள் அந்த ஒளியிலே நடப்பீர்களா-? நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களா, அவரில் விசுவாசம் வைப்பீர்களா-? அவர் பட்சபாதம் உள்ளவர் அல்ல. எல்லா இடத்திலும் உள்ளவர்களே, விசுவாசத்தை மாத்திரம் கொண்டிருங்கள். இப்பொழுது, உங்கள் தலைகளை நீங்கள் தாழ்த்தியிருக்கையில், நான் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். 285. அந்த படத்தில் நீங்கள் காண்கின்ற அந்த ஒளி இங்கே இருக்கின்றது. அவர் சரியாக இங்கே இந்த அறையில் இப்பொழுது இருக்கின்றார். அந்த ஒளி எனக்கு வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கின்ற ஒரு பெண்ணின் பக்கத்தில் இருக்கின்றது. பிரச்சனையில் இருக்கின்ற மகனுக்காக அவள் ஜெபித்துக் கொண்டிருக்கின்றாள். 286. எனக்கு இடது பக்கத்தில் ஒரு பெண் இருக்கின்றாள், அவள் பயத்தில் இருக்கின்றாள். தனக்கு புற்றுநோய் உள்ளது என்று பயந்து போய் உள்ளாள். அதைக் குறித்து மிகவுமாக அதிர்ச்சியில் உள்ளாள். இதை அவள் கவனிக்க தவற மாட்டாள் என்று நான் நம்புகிறேன். அந்த பெண், நீண்ட காலமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். உள்ளே வரும்படிக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். அவள் பயந்திருக்கின்றாள். அவள் இங்கிருந்து வரவில்லை. அவள் வேறொரு நகரத்தில் இருந்து வருகின்றாள். அந்த நகரமானது இந்த நகரத்தைக் காட்டிலும் சிறியதான ஒரு நகரமாகும். அது இங்கே இருந்து தெற்கு புறத்தில் இருக்கின்றது. அது மலைக்கு பக்கத்தில் இருக்கின்ற ஒரு நகரம் ஆகும். அது டூஸ்ஸான் நகரம் ஆகும். அந்த பெண்ணின் பெயர் திருமதி.பேக். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? உங்கள் சுகமளித்தலை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா-? சரி. அதைக் குறித்து இனி மேல் எந்த ஒரு பயமும் கொள்ள வேண்டாம். உங்கள் விசுவாசம் உங்களை சுகமாக்கினது. 287. திருமதி.ஹஷ்ஷி என்னும் பெயர் கொண்ட ஒரு பெண். இதை மறவாதீர். நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிப்பீர்களானால் உங்கள் மகனை அப்பாவி என்று தேவனால் நிருபிக்க முடியும். சந்தேகிக்காதீர்கள். விசுவாசம் கொள்ளுங்கள். விசுவாசியுங்கள். 288. எனக்கு வலப்பக்கத்தில் உட்கார்ந்திருக்கின்ற ஒரு பெண், அவள் இருதயக் கோளாறினால் கஷ்டப்படுகிறாள். அவள் பெயர் திருமதி.கிளவுட். உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிப்பீர்களானால், உங்கள் சுகமளித்தலை ஏற்றுக் கொள்ளுங்கள், சர்வ வல்லமையுள்ள தேவன் உங்களை சுகப்படுத்துவார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? சரி. உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசியுங்கள். 289. என் வலது பக்கத்தில் பின் புறமாக இருக்கின்ற ஒரு பெண், அங்கே வலது பக்க வரிசையில், கறுப்பு ஆடை அணிந்திருப்பவள். திருமதி.யேட்ஸ், உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசியுங்கள், உங்கள் முதுகு பிரச்சனை உங்களை விட்டு போய் விடும். ஓ, என்னே (எபிரெயர் 13:8) 290. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? (சபையார் "ஆமென்,” என்கின்றனர் - ஆசி.) நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா-? ("ஆமென்”) அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் அல்லவா-? ("ஆமென்,”) இப்பொழுது, அவர் அதை நிருபிப்பார் என்றால், அது சரியானது என்று நீங்கள் காண்பீர்களானால், நான் மேற்குறிப்பிட்ட மக்கள் என்னை அவர்கள் ஒரு போதும் கண்டதில்லை என்று சாட்சி பகருவார்கள். (யோவான் 14:12-14] [மாற்கு 16:17-18) 291. ஆனால், கவனியுங்கள். இப்பொழுது, நீங்கள் நான் என்ன கூறுகின்றேனோ அந்த என் வார்த்தையை எடுத்து, அதை உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசித்து உங்கள் கரங்களை ஒருவர் மீது ஒருவர் வைப்பீர்களானால், உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்க மாத்திரம் செய்வீர்களானால் நீங்கள் சுகமாவீர்கள். அது முடிவு காலத்தின் அடையாளம் ஆகும். 292. இப்பொழுது நீங்கள் ஒருவருக்கொருவர் ஜெபிக்கும்படியாக இருப்பவர்கள். உங்கள் கரங்களை ஒருவர் மீது ஒருவர் வையுங்கள். நீங்கள் ஒரு பாவி என்றால் உங்கள் பாவங்களை அறிக்கை செய்யுங்கள் நீங்கள் ஒரு பின் மாற்றக்காரர் என்றால், நீங்கள் தவறு என்று அறிக்கை இடுங்கள். நீங்கள் வியாதியுள்ளவர்கள் என்றால், நீங்கள் சுகமாக்கப்பட வேண்டும் என்று அறிக்கையிட்டு "தேவனே, நான் உம்மை விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். 293. இப்பொழுது, "வில்லியம் பிரன்ஹாமின் ஜெபங்கள் தான் இதைச் செய்யும்” என்று வேதாகமம் ஒரு போதும் கூறினதில்லை. ஆனால் அவர் "விசுவாசிக்கிற-வர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள் அவர்கள் சொஸ்தமடைவார்கள்” என்று கூறியுள்ளார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? (சபையார் “ஆமென்,” என்கின்றனர்- ஆசி) 294. இப்பொழுது, ஃபீனிக்ஸ், எவ்வளவு காலமாக, எத்தனை தடவை நான் உங்களுடன் இருந்து வருகிறேன்-? சுமார் 17 வருடங்களாக நான் இங்கே வந்து கொண்டிருக்கின்றேன். ஒரு முறையாவது அது தவறு என்று நிருபிக்கப்பட்டு உள்ளதா-? அது பரிசுத்த ஆவியானவர் பேசின விதமாகவே சரியாக அப்படியே இருந்து வந்திருக்கின்றது. (சபையார் "ஆமென்,” என்கின்றனர் - ஆசி.) அநேக ஆயிரம் ஆயிரம் முறைகள். அநேக மணிக்கணக்கில், உலகம் முழுவதுமாக எத்தனையோ தடவைகளை, எல்லா ஜாதிகளிலும், பாஷைக்காரரிலும், மொழிகளிலும், மக்களிலும், அது இயேசு கிறிஸ்துவாக இருந்தது. உங்கள் சகோதரன் அல்ல. மேலும் நான் உங்களுக்கு அவருடைய வார்த்தையை மேற் கோள் காட்டுகிறேன். "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். அவர்கள் வியாதியஸ்தரின் மேல் தங்கள் கைகளை வைப்பார்கள். அவர்கள் சொஸ்தமாவார்கள்." 295. இப்பொழுது யாரோ ஒருவர் மீது உங்கள் கரங்களை வைத்து அவர்களுக்காக ஜெபியுங்கள். நீங்கள் தாமே... இப்பொழுது உங்களுக்காக ஜெபித்துக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் அவர்கள் உங்களுக்காக ஜெபிக்கின்றார்கள். நீங்கள் அவர்களுக்காக ஜெபியுங்கள். ஆகவே இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த பிரசன்னத்தில் தலை வணங்குவோமாக, அவர் நம் மத்தியில் இருப்பதாக நிருபித்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது, அவர் என்னுடைய தேவனாக இருப்பது போலவே அவரும் உங்களுடைய தேவனாக இருக்கின்றார். உங்கள் சபையில் நீங்கள் செய்வது போலவே இப்பொழுதும் அதே விதத்தில் ஜெபம் செய்யுங்கள். உங்கள் மேல் கைகளை வைத்திருக்கின்ற நபருக்காக நீங்கள் ஜெபியுங்கள். நீங்களும் அவர்களுக்காக ஜெபித்து, தேவன் மேல் விசுவாசம் வையுங்கள். 296. உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். "கர்த்தாவே, நான் தவறாயிருக்கிறேன். நான் சந்தேகம் கொள்கிறவனாக இருக்கிறேன்; இனிமேல் அவ்விதமாக நான் இருக்க மாட்டேன். நீர் தாமே சரியாக இப்பொழுதே என்னை சுகமாக்கப் போகிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன் என்று கூறுங்கள். 297. "கர்த்தாவே, இந்த நபரை சுகப்படுத்தும், இந்த பெண்ணை சுகப்படுத்தும். இந்த மனிதனை சுகப்படுத்தும். இந்த பெண்ணை சுகப்படுத்தும். அந்த வாலிபப் பெண்ணை சுகமாக்கும், அந்த வாலிப பையனை சுகமாக்கும்.” 298. ஓ கர்த்தாகிய தேவனே, வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தவரே, கர்த்தாவே, எங்களால் எப்படி இங்கே உட்கார முடியும்-? இது தாமே இந்த முழு ஜனக் கூட்டத்தையுமே கர்த்தாவே, மிக மிக உன்னதங்களிலே, தேவனுடைய மகிமைக்குள்ளாக கொண்டு சொல்ல ஒரு எடுக்கப்படுதலின் விசுவாசத்தை, தேவனுடைய வல்லமையை இந்த காரியமானது கொண்டுத் தான் வர வேண்டும். [மத்தேயு 28:6] (எபிரெயர் 13:8] 299. இந்த மக்களை கட்டி வைத்துள்ள பிசாசே, அவர்களை கட்டவிழ்த்து விடு; நான் விசுவாசிக்கின்ற அந்த தேவனுடைய வாக்குத்தத்தத்தின் பேரிலே, நான் போதிக்கின்ற வேதாகமத்தின் பேரிலே, அது வேதாகமம் என்று நிருபிக்கின்ற தேவனின் பேரிலே அவர்களை கட்டவிழ்த்து விடுவாயாக. அது தாமே அவர் தான் வேதாகமத்தின் தேவன் என்று நிருபிக்கின்றது. 2000 ஆண்டுகள் கழிந்தும் அவர் இன்னுமாக, இன்றிரவு நம் மத்தியில் ஜீவிக்கின்றார், மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவருடைய சிந்தப்பட்ட இரத்தத்தின் பேரிலே, 2000 ஆண்டுகளுக்கு பிறகு அவருடைய ஜீவிக்கின்ற பிரசன்னத்தின் பேரிலே நான் பிசாசை அவனுடைய சக்தியற்ற ஆவியாகிய வியாதி மற்றும் நோய்களின் ஆவிக்கு சவாலிடுகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே இவர்களை உன் பிடியிலிருந்து விடுவாயாக. அவர்களில் இருந்து வெளியே வா, அவர்கள் தாமே விடுதலை அடைந்து செல்வார்களாக. அந்த பாவியை உன் பிடியிலிருந்து விடு. அந்த பின் மாற்றக் காரனை கட்டவிழ்த்து விடு. கட்டிலிருந்து விடு. வியாதிப்பட்டுள்ள அந்த ஆண் அல்லது பெண்ணை அவர்களுடைய சுகமளித்தலை, அவர்களுடைய இரட்சிப்பை, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே அவர்களை உரிமை கோருகிறேன். அவர்களை விட்டு வெளியே வா, அவிசுவாசம் மற்றும் சந்தேகம் என்ற நாற்றமெடுத்த தீய, அசுத்த ஆவியாகிய நீ அவர்களை விட்டு வெளியே வா, இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே, இந்த சபையிலிருந்து, இந்த மக்கள் கூட்டத்திலிருந்து வெளியேறு. ஆமென். 300. நான் விசுவாசிக்கிறேன். விசுவாச ஜெபமானது ஏறெடுக்கப்பட்டுவிட்டது என்று நான் நம்புகிறேன். நீங்கள் இப்பொழுது ஏதாவதொன்றை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் எங்கே இருக்கின்றீர்களோ அங்கே உங்கள் மனதில் ஒரு கம்பத்தை நடுங்கள். "சரியாக இங்கே இந்த இருக்கையில், இந்த இரவில் நான் வார்த்தையை கேட்டு, அவருடைய வார்த்தையை தேவன் உறுதிப்படுத்துவதை கண்டு, அது சரியே என்று நிருபித்ததை நான் கண்டேன், விசுவாசத்தின் ஜெபமானது எனக்காக ஏறெடுக்கப்பட்டு விட்டது. ஆகவே பிசாசு என்னிடத்தில் மறுபடியுமாக நான் வியாதியஸ்தன் என்றோ அல்லது ஏதோ ஒன்று என்னிடம் தவறாக இருக்கின்றது என்று சொல்ல முயற்சிப்பானானால், நான் அவனை நேராக இந்த கம்பத்திற்கு கொண்டு வரப்போகிறேன். சரியாக இப்பொழுதே விசுவாசத்தின் ஜெபமானது எனக்காக செய்யப்பட்டு விட்டது நான் என்னுடைய வியாதியினின்று மீட்கப்பட்டேன். என் பாவங்களிலிருந்து நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன். நான் தேவனுடைய பிள்ளை, நான் இனி மேலும் பிசாசின் பொய்களுக்கு ஒரு போதும் செவி சாய்க்க மாட்டேன். நான் தேவனுடைய விடுதலையடைந்துள்ள ஊழியக் காரன் ஆவேன்.” ஆமென். அப்படியாக நீங்கள் செய்வீர்களா-? "ஆமென்,” என்று கூறுங்கள். (சபையார் "ஆமென்” என்று கூறுகின்றனர்) உங்கள் கரங்களை நீங்கள் உயர்த்தி "நான் அதை விசுவாசிக்கிறேன்,” என்று கூறுங்கள் “நான் அதை விசுவாசிக்கிறேன்.” என்று கூறுங்கள். ("நான் அதை விசுவாசிக்கிறேன்”) ஆமென். ஆமென். 301. என்னை பொறுத்த வரையில், அது முற்றுப் பெற்றதாயிற்று. கிரியையானது செய்து முடிக்கப்பட்டாயிற்று. எல்லாமே முடிவு பெற்றதாயிற்று. தேவன் அவ்விதம் கூறியுள்ளார். அது அதை நிருபிக்கின்றது. அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்துவதைத் தவிர வேறு எந்த ஒன்றை அவரால் செய்ய முடியும்-? அவர் அதை எனக்கு உறுதிப்படுத்துவாரானால், உங்களுக்கும் அவராலே அதை உறுதிப்படுத்த முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? [சபையார் "ஆமென்,” என்கின்றனர் - ஆசி] சரி. 302. இப்பொழுது நாம் எழுந்து நின்று அவரைத் துதிப்போமாக, பிறகு அவருக்கே எல்லா துதியும் மகிமையும் செலுத்துவோமாக. ஆமென். தேவனுக்கு மகிமை-! 303. கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி, நாங்கள் உம்மை நேசிக்கின்றோம். நாங்கள் உம்மை ஸ்தோத்தரிக்கின்றோம். இந்த காரியங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இப்பொழுது நீர் தாமே எங்களுக்கு அதைச் செய்கிறீர் என்று விசுவாசிக்கிறோம். நீர் தாமே எங்கள் இரட்சகராயிருக்கிறீர், நீர் தாமே எங்கள் சுகமளிப்பவராக இருக்கின்றீர், அதற்காக நாங்கள் உம்மை நேசிக்கின்றோம். கர்த்தரின் நாமம் என்னென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. கர்த்தாவே இந்த மக்களை நீர் தாமே ஏற்றுக் கொள்வீராக. இப்பொழுதிலிருந்து இவர்கள் தாமே உம்முடைய ஊழியக்காரர்களாக இருப்பார்களாக. இயேசுவின் நாமத்தினாலே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக…